பணி இடஒதுக்கீடு? பதில் தரும் ஹரியானாவைச் சேர்ந்த அமைப்பு!

0

ஹரியானாவில் செயலாற்றிவரும் வத்வானி அமைப்பின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் ராணுவத்தினரின் பூட்ஸ் சப்தத்தால் விரக்தியடைந்தவர்கள். குறைவான அளவில் இருக்கும் அரசாங்க வேலைகளுக்கு ஆசைப்படும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு மாற்று தனியார் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதீத வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு உண்டு. மக்களின் கோரிக்கையாக விளங்கும் இந்தப் பார்வை தற்போது அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாலும் பகிரப்பட்டு வருகின்றது.

இது ஒரு முக்கியப் பிரச்சனையாக தெரியவருவதற்கு முன்பே, சமூகத்தின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வேலைவாய்ப்பின்மையைப் பற்றிய விழிப்புணர்வை இந்த அமைப்பு மேற்கொண்டுவருகின்றது. பில்லியனரான வத்வானியின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு பிரதமருக்கு நிரந்தர பணி ஆலோசகர் முதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீடுகளை ஆதரிப்பது வரை அரசு மற்றும் நம் நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரத்தை கவனிக்க விரும்புவோருக்கு எடுத்துரைக்க முயன்று வருகின்றனர்.

மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரான ரோமேஷ் வத்வானி தொடங்கியுள்ள இந்த அமைப்பு மாபெரும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதை குறிக்கோளாக கொண்ட இந்த அமைப்பு, ஐந்து முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதில், 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தொழில்முனைவோர் பிணையம் (NEN), பல தொழில்முனைவோரை ஊக்குவித்ததுடன், நூற்றுக்கணக்கான நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது.

மேலும், திறன் மேம்பாட்டு பிணையம் (SDN), மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் பிணையம் (OND) மற்றும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் பிணையம் (RIN) என சூழலுக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையைப் போக்க, குறைந்தது ஐம்பது கோடி பணிகளை உருவாக்கினால்தான், சீரான போக்கு நிலவும்’ என இதற்கான பாதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வத்வானி ‘White Paper' வெள்ளைக் காகிதம்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது பாலிசிகளை உருவாக்குபவர்களால் கவனிக்கப்பட வேண்டிய அவசரப் பிரச்சனை. இல்லையேல், இந்தியா செய்யும் விலை உயர்ந்த தவறாக இது மாறக்கூடும் எனவும் எச்சரித்தார். ஏனெனில், அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீடு காலம் தற்போது முடிந்துவிட்டது என்பதை அவர்கள்தான் உணர வேண்டும். அதுவே, தனியார் நிறுவனங்களை அரசு ஆதரித்து, வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வழிவகுக்கும்.

தற்போது இந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக, பொறுப்பை கவனித்து வருபவர் அஜய் கேலா.

ஆக்கம்: பிரசன்னா சிங்| தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்