அன்னா ஹசாரே சொன்ன முதலும் கடைசியுமான பொய்!

0

'அன்னா ஹசாரே'-  நவீன இந்தியாவின் மிகவும் பிரபலமானவரும், செல்வாக்கு மிகுந்த சமூக ஆர்வலர். நாட்டின் பன்முக வளர்ச்சி, பொது நலம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்த, அவர் வெகுஜன இயக்கம் ஒன்றை தொடங்கினார். ஊழல், வறுமை, பின்தங்கிய நிலை, வேலையின்மையை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார். அவரது சொந்த ரெலேகான் சித்தி கிராமத்தை ஒரு "முன்மாதிரி கிராமமாக" மாற்றி இருக்கிறார்.

அவருக்கென்று ஒரு வளர்ச்சிக் கதையை, வெற்றிக்கதையை உருவாக்கி இருக்கிறார்.

அவர் காட்டிய வழியில் இன்று பல கிராமங்கள் அவரை பின்பற்றி,  கிராமப்புற வளர்ச்சியை நோக்கிய கிராமங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

​தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் மசோதா இவற்றிற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் போராட முடிந்தது என்பதை நாடறியச்செய்தார். அன்னா ஹசாரே தலைமையிலான இயக்கம் வலுவடைந்து போது "நான் அன்னா... அன்னா... " என்று பூரிப்புடன் சொல்லிக் கொண்டு சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் அவர் மீது ஆவலாக போராட்ட களத்தில் குதித்தனர். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் தங்களை அவருடன் அர்ப்பணித்துக் கொண்டனர். இந்த பெரிய ஆளுமை, புரட்சிகர நாயகனின் வாழ்க்கை, கோடிக்கணக்கான மக்களை ஒன்று திரட்டிய அந்த மகானின் கதையை கேட்டு தெரிந்து கொள்ள யுவர் ஸ்டோரி ஆசைப்பட்டது.

'கிஷன்' என்று அறியப்பட்டவர் 'அன்னா' வான கதை..! தனது குழந்தை பருவத்தில் நடந்த, குழந்தைப் பருவ இனிப்பான மற்றும் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு அற்புதமான காலத்தில் இந்திய இராணுவத்தில் வேலை செய்த அவரது அனுபவங்களை கூறினார். 

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் பிங்காரில் அன்னா ஹசாரே பிறந்தார். ஆனால் தனது சிறு வயதை அன்னா, ரலேகன் சித்தியில்தான் கழித்தார். அங்கு வீடு, நிலம் இருந்தாலும் விவசாயம் பாதித்ததால் அன்னாவின் குடும்பம் வாழ்வாதாரம் தேடி பிங்காரில் வாழ்ந்தனர்.

அன்னாவின் தாத்தா பிரிட்டிஷ் இராணுவத்தில் 'ஜமாதார்' ஆக இருந்தார். அன்னாவின் தந்தை, மாமா, மாமி மற்றும் அனைத்து பிற நெருங்கிய உறவினர்கள் அனைவருமே பிங்காரில்தான் வாழ்ந்தனர். அன்னா அங்குதான் பிறந்தார். அப்பா பாபு ராவ் மற்றும் அம்மா லட்சுமி பாய். அன்னா ஹசாரே அவர்களுக்கு முதல் மகன். அவரது பெற்றோர் மத மற்றும் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பாபு ராவ் மற்றும் லட்சுமி பாய் அவரது முதல் குழந்தை என்பதால் 'கிசன்' (கிருஷ்ணன் என்பதன் கிராமப்புற வழக்கு) என்றே அழைத்தனர். கிஷன் பாசம் மிகுந்த செல்லப்பிள்ளையாக வளர்ந்தான். ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் என்பதால் பாசத்தைத் தவிர பெரிதாக எதுவும் கிஷனுக்காக அவர்களால் கொடுக்கமுடியவில்லை.

பிங்கார் அரசு பள்ளியில்தான் நான்காம் வகுப்பு வரை கிஷன் படித்தார். பின்னர், அவரது மாமா அவரை மும்பைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டார். தனக்கு இருப்பதே ஒரு மகள் என்பதால் என்றாவது ஒரு நாள் அவர் திருமணம் ஆகி சென்றுவிடுவார். பின்னர் தனிமையில் தானே இருப்போம் என்று கிஷனை அவர்களே படிக்க வைத்து பார்த்துக் கொள்வதாக கூறினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கையை கிஷனின் பெற்றோரால் தட்ட முடியவில்லை. அப்படி அவரை மும்பைக்கு அனுப்பிவைத்தனர்.

பிங்காரில் அவர் வளர்ந்த காலகட்டத்தில் குழந்தை பருவ நினைவுகள் இன்றும் சுவாரஸ்யம் நிறைந்த பசுமையான நினைவுகளாகவே வைத்திருக்கிறார், அன்னா. நம்மிடம் அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். காற்றாடி பறக்க விடுவதில் அன்னாவுக்கு அலாதி பிரியமாம். 

 "காற்றாடி வானத்தில் உயர்ந்து பறக்கும் போது மனதும் அதோடு சேர்ந்து பறக்கும். அது ஒரு விவரிக்க முடியாத உணர்வு, சந்தோசம். எவ்வளவு உயரத்தில் காற்றாடி பறக்குமோ அந்த அளவுக்கு மனதும் குதூகலிக்கும்" என்பது அன்னாவின் நினைவலைகள். 

 காற்றாடி போல் புறாக்களை பறக்க விட்டு வேடிக்கை பார்ப்பதும் அன்னாவுக்கு பிடித்தமான விஷயம். அதற்காகவே நிறைய புறாக்களை வளர்த்திருக்கிறார். தனது வீட்டிலிருந்து பறந்து செல்லும் புறாக்கள் மீண்டும் சரியான இடத்துக்கு திரும்பிவருவது எப்படி என்று அன்று ஆச்சரியப்பட்டிருக்கிறார். இதோடு நின்றுவிடவில்லை 'கோலி' விளையாடுவதும் அன்னாவுக்கு பிடித்தமான மற்றோரு விளையாட்டு. இந்த விளையாட்டு தனம் காரணமாக அவரால் தனது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

"விளையாடிவிட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வருவதால் வீட்டுப் பாடம் சரியாக செய்வதில்லை. ஆனாலும் பள்ளியில் விஷயங்களில் முதல் இடத்திலேயே இருந்தேன். ஆசிரியர் சொல்லித்தரும் போது கேட்பது பெரும்பாலும் மறக்காது என்பதால் தப்பித்துவிடுவேன்". 

 அன்னா, பள்ளியில் படிக்கும் போது முதலும் கடைசியுமாக சொன்ன பொய் குறித்தும் பேசினார். மலையில் விளையாடப் போனால் பின்னர் பசித்தால்தான் வீட்டுக்கு வருவாராம். குறைந்தது மாலை 7.30 மணி வரையிலும் விளையாட்டு தானாம். அன்றும் அப்படித்தான் வீட்டுப்பாடம் எழுதவேண்டும் என்பதை மறந்து விளையாடப்போன கிஷன் அதனை மறந்துவிட்டான். வீட்டுக்கு வந்த பிறகும் நினைவில்லாமல் தூங்கிவிட்டான். வீட்டுப்பாடம் எழுதாமலேயே பள்ளிக்குப் போனபிறகு ஆசிரியர் கேட்கும் போதுதான் அது குறித்த நினைவே கிஷனுக்கு வருகிறது. வீட்டுப்பாடத்தை பார்க்க ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் நோட்டுப் புத்ததக்கத்தை கொண்டுவரச் சொல்கிறார். செய்வது எனவென்று தெரியாத கிஷன், தாம் வீட்டுப்பாடம் செய்துவிட்டதாகவும், ஆனால் புத்தகத்தை மறந்து வீட்டிலேயே வைத்டுவிட்டு வந்து விட்டதாகவும் பொய் சொல்லியுள்ளார். ஆனால் ஆசிரியரோ வீட்டுக்குப் போய் எடுத்துவரச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

அன்னாவுக்கு அம்மா மீது பாசம் அதிகம் என்பதால் அவரிடம் பொய் சொல்லத் தோன்றவில்லை. நடந்தவற்றை சொன்ன அன்னா, அம்மா தன்னை வேறு வேலைக்கு அனுப்பி விட்டதால் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பள்ளிக்கு வந்து கூறும்படி அம்மாவை பொய் சொல்ல ஐடியா கொடுத்திருக்கிறார்.

அம்மாவோ, "நீ பொய் சொன்னதோடு என்னையும் சேர்ந்து பொய் சொல்ல சொல்கிறாயா... முடியாது" என்று மறுத்திருக்கிறார். ஆனால், அம்மா வந்து ஆசிரியரிடம் சொல்லாவிட்டால் தனக்கு அவமானமாகப் போய்விடும் என்பதால் பள்ளிக்கு வந்து பேச வேண்டும். இல்லாவிட்டால் இனிமேல் பள்ளிக்கே மாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார். மட்டுமல்ல, வெண்ணை திருடித் தின்ற கிருஷ்ணனுக்காக யசோதை பொய் சொல்லவில்லையா என்று கதை சொல்லி அம்மாவை ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறார். ஆனாலும், இதுதான் நீ சொல்லிய கடைசி பொய்யாக வேண்டும் என்று மகனிடம் உறுதிமொழி எடுக்க அதை செய்திருக்கிறார்.

"பள்ளி ஆசிரியரிடம் சென்னை அந்த பொய் இன்றும் மறக்காத நினைவாக இருக்கிறது அவருக்கு. சிறுவயதில் இனிமேல் பொய் சொல்லக் கூடாது என்று உறுதி எடுத்தது 79 வயதிலும் தொடர்கிறது. அதற்குக் காரணம் அன்று சொன்ன பொய்யை மறக்காததுதான். அது பசுமையான நினைவாகவே இருக்கிறது."

தாய், தந்தையர் சொல்லிக்கொடுத்து வளர்த்த பல அம்சங்கள், சந்தித்த பாதிப்புகள் கிஷன், அன்னாவாக மாறிய பிறகும் அவரில் பிரதிபலித்து வந்திருக்கிறது..!

கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ்