ரிமோட்டில் இயங்கும் ட்ராக்டரை உருவாக்கிய விவசாயியின் 19 வயது மகன்!

1

இந்தியாவில் திறமைகளுக்கு பஞ்சமில்லை. நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்களும் தங்களால் ஆன சில கண்டுபிடிப்புகளை செய்து சாதனை படைப்பதை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் உள்ள கக்லா பம்போரி என்ற கிராமத்தில் வசிக்கும் 19 வயது யோகேஷ் நகர், ஓட்டுனரில்லா ட்ராக்டர் ஒன்றை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த ட்ராக்டரை வடிவமைத்ததன் காரணத்தை பகிர்ந்த யோகேஷ், அவரது அப்பாவின் உந்துதலே அதற்கு முக்கியக் காரணம் என்கிறார். அவரின் அப்பா ராம்பாபு நகர், 15 ஏக்கர் நிலத்தில் உழுது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அப்போது அவர் நிலத்தில் உழுவதற்காக ட்ராக்டரை பயன்படுத்தியதில் முதுகு வலி ஏற்பட்டது. அதனால் அவரால் ட்ராக்ட்ர் ஓட்டமுடியாமல் நிலத்தை பராமரிக்க முடியாமல் போனது. இந்த நிகழ்வின் மூலம் யோகேஷுக்கு ரிமோட் சாடிலைட்டி பயன்படுத்தி இயங்கும் ட்ராக்டர் ஒன்றை உருவாக்க முனைந்தார். 

தன் கண்டுபிடிப்பு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று உணர்ந்த யோகேஷ், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தன் அப்பா மற்றும் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி ட்ராக்டரை முடித்தார். ஓட்டுனர் தேவையில்லாத ட்ராக்டரை வடிவமைத்து முடித்து. ரிமோட் மூலம் இயங்கும் படி செய்தார். இப்போது அந்த கிராம விவசாயிகள் பலரும் அந்த ட்ராக்டரை கண்டு வியந்து தமக்கும் வேண்டும் என யோகேஷிடம் கேட்கின்றனர். 

தற்போது பிஎஸ்சி பயிலும் யோகேஷ் முதலாம் ஆண்டில் இருக்கிறார். நிலத்தின் வெளியே அமர்ந்து ரிமோட் மூலம் ட்ராக்டரை இயக்குகிறார் இந்த இளைஞர். ரோபோடிக் ட்ராக்டரை கட்டமைக்க, யோகேஷ் அதில் இரண்டு சிக்னல்களை பொருத்தினார். பின்னர் மார்கெட்டில் சில பொருட்களை வாங்கி ரிமோட் தயாரித்தார். இதை முடிக்க அவருக்கு 3-4 மாதம் ஆனது. சுமார் 47 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். 

யோகேஷ் உருவாக்கிய ரிமோட் ஒன்று முதல் ஒன்றரை கிலோமிட்டர் வரை இயங்குகிறது. ட்ராக்டரில் உள்ள சிகன்ல் ரிமோட்டில் இருந்து இணைத்து இது இயங்குகிறது. இந்த கண்டுபிடிப்பை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் சேர்க்க முயற்சித்து வருகிறார். இந்திய ராணுவத்துக்கு பயன்படும் இதுபோன்ற ரிமோட் முறையை கண்டுபிடிப்பதே தன்னுடைய இலக்கு என்கிறார் இந்த இளைஞர். 

கட்டுரை: Think Change India
Related Stories

Stories by YS TEAM TAMIL