நாற்காலிகள் வடிவமைப்பில் தரம் சேர்க்கும் ஆராதனாவின் ‘லிமோன்’ !

0

ஆராதனா ஆனந்திற்கு, எப்போதுமே, வீட்டை அலங்கரிப்பது மிகவும் பிடித்த செயல். வீட்டிற்கு எந்த வண்ணம் மேன்மையான தோற்றத்தைத் தரும், எப்படி பாரம்பரிய உணர்வை கொண்டு வருவது என தடுமாறும் நண்பர்களுக்கு அறிவுரை அளிப்பது ஆராதனா தான். தன்னுடைய அழகியல் உணர்வோடும், வடிவமைப்பின் கோட்பாடுகளில் தொலைநோக்குப் பார்வையோடும், 2015ல் அவர் உருவாக்கியிருப்பது தான், ‘லிமோன்’ (LIMON).

கடலில், ஒன்பது வருடங்கள், எண்ணெய் சரக்கு வர்த்தகராய் சிங்கப்பூரிலும் துபாயிலும் கடந்த பிறகு, கார்ப்பரேட் உலகை உதறித் தள்ளிவிட்டு, தான் விரும்பும் துறையில் ஒரு பணி வாழ்க்கையை தேர்வு செய்வதாய் முடிவு செய்தார்.

வேறுபட்ட பல பொருட்களைக் வைத்து, மிக அழகாக பொருந்தி, ஒன்றுபட்டு போகும் ஃபர்னிச்சர் பொருட்களை வடிவமைப்பது தான் ஆராதனாவின் ‘லிமோன்’ நிறுவனம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, நாற்காலிகள் மட்டும் தான் எனினும், கூடிய விரைவில் பலப் பொருட்களை எதிர்பார்க்கலாம்.

மத்தியக் கிழக்கு பயணம்

ஆராதனா, தன்னுடைய மூன்று வயது வரை, தந்தையுடன் கடற்பயணம் மேற்கொண்டு, பத்து வயது வரை மத்தியக் கிழக்கில் வளர்ந்தார். பின் மேல்நிலைக் கல்வி படிப்பு முடிக்கும் வரை டில்லியில் இருந்தார். அப்போது நடந்து கொண்டிருந்த வளைகுடா போரின் காரணமாக அவர்கள் திரும்பி வர நேர்ந்தது.

பின், அவர் இங்கிலாந்து வார்விக் பல்கலக்கழகத்தின் பிசினஸ் பள்ளியில் இருந்து, கணினி அறிவியலிலும், வணிக ஆய்வுகளிலும் இளநிலைப் பட்டம் பெற்றார். 2001ல் இருந்து 2004 வரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் ஆய்வாளராக பணி புரிந்த ஆராதனா, 2013ன் இறுதியில் தான் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு திரும்பினார். தற்போது, லிமோனின் மூலமாக, 2016 ல் விற்பனையை தொடங்க முடியும் என நம்புகிறார்.

தொழில் முனைவு

இந்தத் துறை தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம், ஃபர்னிச்சர்களில் இருக்கும் தரத்தின் குறைவே எனக் கருதும் ஆராதனா, “இந்தத் துறையில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் இருப்பதை உணர்ந்தேன். அதை எப்படியாவது நிரப்ப வேண்டும் என்று தோன்றியது. தொடங்கி இரண்டு வாரங்களே ஆன போதும், எனக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது, நம்பிக்கை அளிக்கிறது” என்கிறார். நீடித்து உழைக்கும் திறன், மென்மை மற்றும் வசதி, என்று ஒரு நாற்காலியை உருவாக்குதல் பற்றி தனக்கு தெளிவான புரிதல் உண்டு எனும் ஆராதனா, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி இவற்றை தயாரிக்கிறார்.

தற்போது, தன்னுடைய, இரண்டாவது நாற்காலிகளின் தொகுப்பை வெளியிட தயாராக இருக்கும் ஆராதனா, “விரைவில், ‘ஒட்டொமன்’ மற்றும் ‘க்ரிடென்ஸா’க்களை அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஸ்டுடியோவையும் புதுப்பிக்கப் போகிறேன்” என்கிறார்.

ஆராதனாவின் தொழில் முனைவு அனுபவம், கொஞ்சம் சோர்வாக்குவதாய் தான் இருந்திருக்கிறது. விடுமுறைகள் எதுவுமே இல்லாமல், தொழில் முனைவின் பாதையில், ஏதோ ஒன்றை வடிவமைத்துக் கொண்டே இருக்கும் போது, உண்மையிலேயே, பேசுவது கூட கஷ்டம் தான்.

தனக்கென செலவழிக்க நேரம் இல்லை என கொஞ்சம் கவலைப்பட்டாலுமே, தான் நினைத்த வேகத்திலேயே தன்னுடைய தொழில் வளர்வதில் மகிழ்ச்சி கொள்கிறார். சமீபத்தில், டில்லியில் ஒரு கண்காட்சியில் தன் பொருட்களை பார்வைக்கு வைத்தார்.

தனக்கு ஏற்ற துறையில், தொடர்ந்து கொண்டே இருக்கும் தேவைகளுக்கு மத்தியில் வேலை செய்வது ஆராதனாவிற்கு ஆறுதல் அளித்து, தன்னுடைய தொழில் நிச்சயமாக வளரும் என்று நம்பிக்கையையும் அளிக்கிறது. ஆராதனா, வண்ணங்களுக்கும், இழைநயத்திற்கும் நன்றி சொல்கிறார்.

இணையதள முகவரி: Limon