'ஸ்டார்ட் அப் இந்தியா'- நேரடி பதிவுகள்!

0

கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 15 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் இருந்து 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா' என தேசத்திற்கு அறைகூவல் விடுத்த போது இந்தியா ஸ்டார்ட் அப் தேசமாவதற்கான பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தது. ஐந்து மாதங்களுக்குப்பிறகு ஸ்டார்ட் அப் இந்தியா இப்போது வெகுதூரம் பயணித்திருக்கிறது. அதற்குத் தேவையான கொள்கை வகுக்கப்பட்டு, புதிய பாதை காணத்துடிக்கும் தொழில்முனைவோருக்கான ஆதரவும் நாடு முழுவதும் காணப்படுகிறது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் அதிகாரப்பூர்வ துவக்கம் தில்லி விக்யான் பவனில் இன்று நடைபெற்றது. இந்திய அரசின் இந்தத் திட்டத்தில் பங்குதாரராக யுவர்ஸ்டோரியும் பெருமிதத்துடன் கைகோர்க்கிறது.

ஸ்டார்ட் அப் இந்திய திட்ட துவக்க விழாவில் இருந்து முக்கிய பதிவுகள்;

அமிதாப் காந்த்: அரசின் 20 துறை சேவைகள் இபிஸ் மேடையில் பட்டியலிடப்பட்டுள்ளன. 3 மாதங்களில் 10 மாநில அரசுகளுடன் கூட்டு ஏற்படுத்ததிக்கொள்ள இருக்கிறோம்.

அமிதாப் காந்த்: 1000 காப்புரிமை பரிசோதனையாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளோம். ஐஐடிக்களிடம் அவுட்சோர்ஸ் செய்ய இருக்கிறோம். 18 மாத காலத்தில் காப்புரிமை நிலுவை அளவை அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு ஈடாக கொண்டு வருவோம். ஒரு வருட காலத்தில் வர்த்தக குறி நிலுவையை பூஜ்ஜியமாக கொண்டு வருவோம்.

அனூப் கே.புஜாரி: அரசு கொள்முதல் கொள்கை 2012 படி அனைத்துத் துறைகளும் கட்டாயமாக நடுத்தர மற்றும் சிறு தொழில்முனைவோரிடம் இருந்து 15 சதவீத பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

அசுடோஷ் சர்மா: கீழ்மட்ட அளவில் இன்குபேட்டர்கள் மற்றும் வழிகாட்டிகள் வலைப்பின்னல் உருவாக்கப்படும். அதிக ரிஸ்க் அதிக லாபம் திட்டம் அமல் செய்யப்படும். லாபம் அதிகமாக இருக்கும் என்றால் கணக்கிடப்பட்ட ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்கும் திட்டம் இது.

பிரசாந்த சரன்: ஸ்டார்ட் அப்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். ஐபிஓ ஆவணத்தில் உள்ள விரிவான தகவல்களுக்கான ஷரத்து, ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது.

உங்கள் குறைகளை தெரிவியுங்கள். நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும். ஸ்டார்ட் அப்களிடம் இருந்து நாங்களும் கற்று வருகிறோம்.

ஜே.எஸ்.தீபக்: நிதி ஏற்பாடு மற்றும் இன்குபேஷன் ஆகிய இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம். இவற்றில் சிறந்தவற்றை அளிப்போம். 500 மில்லியன் டாலர் அளவிலான மின்னணு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளோம். நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் துறைகளில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.

வி.எஸ்.ஓபிராய்: 38 ஆய்வு பூங்காக்கள் ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவாக அமையும். குடியரசுத்தலைவர் இம்பிரிண்ட் இந்தியா திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். அடுத்து வரும் மாதங்களில் மெட்ரோ அல்லா நகரங்களில் கவனம் குவிவதை பார்க்கலாம்.

மோகன்தாஸ் பை: 8 யூனிகார்ன்களில் 6 நாட்டுக்கு வெளியே அமைந்துள்ளன. மற்ற இரண்டும் இதே திசையில் செல்கின்றன. இவற்றை தவிர்க்க நடவடிக்கை தேவை.

மாசயோஷி சன்: ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பெரிய அளவில் காசோலை கிடைத்திருப்பதால் மட்டுமே வெற்றிபெற்றுவிட்டதாக நினைக்க கூடாது.

மாசயோஷி சன்: தகவல் புரட்டி, தொழில் புரட்சியை விட 100 மடங்கு பெரிதாக அமையும்.

மாசயோஷி சன்: முதல் 5-10 ஆண்டுகளில் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை விட பெரிய மீனாக வளர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

மாசயோஷி சன்: ஸ்டார்ட் அப் நிறுவங்களால் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க முடியாது. இந்தியாவில் மொபைல் உள்கட்டமைப்பு வசதி மற்றும் மின்சாரம் சிறப்பாக இல்லை.

மாசயோஷி சன்: 21 ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு உரியது.

மாசயோஷி சன்: ஒவ்வொரு முறை இந்த நாட்டிற்கு வருகை தரும் போதும் எனக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை அதிமாகிறது.

அருண் ஜெட்லி: தொழில்முனைவோராக உருவாக இருப்பவர்களில் சிலர் உலகை வெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். அவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கித்தருவோம்.

அருண் ஜேட்லி: அரசின் பாத்திரத்தை செயல்படுவதற்கான தூண்டுகோளாக அமையும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம்.

அருண் ஜேட்லி: ஸ்டார்ட் அப் துறைக்கான கட்டுப்பாடுகள் விலகுவது இந்தத் துறைக்கு மிகவும் நல்லது.

அருண் ஜேட்லி: ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது பிரதமரின் நோக்கமாகும். வங்கி அமைப்பு மற்றும் அரசு இதற்கான வளங்களை அளிக்கும்.

அருண் ஜேட்லி: ஸ்டார்ட் அப்களுக்கான லைசன்ஸ் ராஜ் முடிவுக்கு வரும்.

நிர்மலா சீதாராமன்: நிறுவனர்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த உதவும் வகையில் அரசு சிக்கல்களை நீக்கும்.

தமிழில்: சைபர் சிம்மன்