சிலிக்கான் வேலியில் துவங்கி தற்போது கேரளாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் ஹரி கோபிநாத்!

0

மென்பொருள் என்பது இன்னமும் நாகரீக வார்த்தையாக இருந்து வரும் நிலையில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 2014-ம் ஆண்டு ஆரக்கிள் வசதி (Oracle facility) அமைக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் சிலிக்கான் வேலியில் இருந்து மாற்றலாகி வந்த நபரான ஹரி கோபிநாத்.

அமெரிக்காவில் ஆரக்கிள் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றும் கோபிநாத் அந்நிறுவனத்தில் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரத்திற்கு மாற்றலானார். ஆரக்கிள் வணிக நுண்ணறிவு பயன்பாடுகளின் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகாணும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட இவர், திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க் அலுவலகம் அமைத்தார். இதன் மூலம் 9.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்நகரில் வேலைவாய்ப்புகளுக்கும் நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுத்தார். 

இவரது மனைவி ரேகா நிதிச்சேவைகள் மற்றும் டிஜிட்டல் & கம்யூனிகேஷன்ஸ் சேவை நிறுவனமான சன்டெக் (Suntec) நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார். கோபிநாத் மற்றும் ரேகா இருவரும் தங்களது இரு மகள்களான அபர்ணா மற்றும் அர்ச்சனா ஆகியோருடன் நகருக்கு மாற்றலாயினர். ’டெக்னோபார்க் டுடே’- உடனான நேர்காணலில் அவர் கூறுகையில்,

நாங்கள் இருவருமே இந்தியாவில் பட்டம் பெற்றவர்கள் என்பதாலும் சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள எங்களது ஆரம்பகால நண்பர்கள் வட்டம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் எங்கள் இருவருக்குமே சிலிக்கான் வேலி சலிப்பூட்டுவதாக இருந்தது.

தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி அதிக ஊக்கமளிக்காத வாழ்க்கையினால் சலிப்படைந்த இந்தத் தம்பதி இந்தியா திரும்ப திட்டமிட்டனர். மேலும் ஹரி மற்றும் ரேகா இருவரும் தங்களது குழந்தைகளை இந்திய பாரம்பரியத்திற்கும் வாழ்க்கைமுறைக்கும் அறிமுகப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.

நம் நாடு உலகத்தின் சக்திவாய்ந்த நாடாக உருவாகும் முயற்சியில் உள்ளது. இந்தப் பொன்னான நேரத்தில் எங்களது பெற்றோருடன் இருப்பதற்கான அவசியம் உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்போதுதான் ஒருவருக்கொருவார் ஆதரவளித்துக்  கொள்ள முடியும். குழந்தைகளும் அவர்களது பாட்டி, தாத்தாவுடன் இருக்கமுடியும் என்றார்.

தனது நகரில் வளர்ச்சிக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்புகிறார். தற்போது அந்தப் பொறுப்பு அதன் குடிமக்களிடம் உள்ளது. உலகின் பணக்கார கோயிலான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவில் அமைந்திருக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள திறமைகள், பாரம்பரியம், மதிப்பு ஆகியவற்றுடன் இந்தப் பகுதி ஒரு தொழில்நுட்ப மையமாக மாறும் திறன் கொண்டது என்றார். அவரது LinkedIn தகவல்படி கோபிநாத் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரக்கிள் நிறுவனத்துடன் பணியாற்றியுள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA