நீங்கள் எதற்கு தொழில் தொடங்க வேண்டும் - ஒரு கோடி பேருக்கா? அல்லது ஒரு கோடி ரூபாவிற்கா?

0

இந்திய மொபைல் சந்தையில் வெற்றிகரமாக செயல்படுவதன் மூலமந்திரம் என்னவாக இருக்கும்? சொந்த யோசனையில் மொபைல் தொடர்பான தொழில் தொடங்கி நடத்திவருபவர்கள் டெக்ஸ்பார்க்கில் குழுவாக அமர்ந்து விவாதித்தார்கள். அந்தக்குழுவில் ரெவெரி லேங்வேஜ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்த் பானி, ப்ராசஸ் 9 நிறுவனத்தின் நிறுவனர் ராகேஷ் கபூர், ஏர்லாயல் நிறுவனத்தின் நிறுவனரும், செயல் இயக்குநருமான ராஜாஹுசைன் மற்றும் எக்ஸ்டெல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஈஸ்வர் ஸ்ரீதரன் ஆகியோர் அடங்குவர்.

இந்தியாவில் மொபைல் சந்தை ஒரு எல்லையை தொட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு அரவிந்த் பதில் அளித்தார். பல்வேறு வகையான மொபைல் தளங்கள், வேறுபட்ட பிரச்னைகளுடன் அந்தந்த பகுதியில் இயங்கிவருகிறது. அரவிந்த் நிர்வகத்து வரும் ரெவரி நிறுவனம் உள்ளூர் மொழிகளை சாதனங்கள் தயாரிப்பாளர்கள், செல்பேசி தயாரிப்பாளர்கள், டேப்லெட்டுகள், செட்டாப்பாக்ஸ்கள், கேம்ஸ்கள் மற்றும் செயலி உருவாக்குபவர்களுக்கு அளித்துவருகிறது. அதேபோல், சந்தையை வேறுமாதிரி கையாள்கிறது இந்த நிறுவனம்.

“இந்தியாவின் பாரம்பரிய ஊடகங்களைப்போல் இல்லாமல், உள்ளூர் மொழியில் நவீனகால டிஜிட்டல் ஊடகங்கள் பிரகாசித்தாலும், ஆங்கிலத்தில் தான் வேரூன்றி வளர்ந்துள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 % மக்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, புரிந்துகொள்ளவோ தெரியாது. இதனால், மொழிகளுக்கு இடையில் நிலவும் மிகப்பெரிய இடைவெளியை நிரப்ப உள்ளூர் மொழியில் நவீனகால டிஜிட்டல் ஊடகங்களை வழங்கி வருகிறோம். இதில் ஒரு எல்லையைத்தொட இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது” என்கிறார் அவர்.

பிராசஸ் 9 நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் வேறுமாதிரி பார்க்கிறார். அதாவது மொழிப்பிரச்னையில், சிறிய நகரங்களில் வாழும் மக்கள் எது மாதிரியான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர். இவரது ப்ராசஸ் 9 நிறுவனம் இணையவழி, கிளவுட் அடிப்படையிலான எந்திர உதவியுடனான மொழி பெயர்ப்பு தொழில்நுட்பம். இந்த நிறுவனம் தற்போது 9 இந்திய மொழிகளை மொழிபெயர்க்க உதவுகிறது. இந்த நிறுவனத்தின் புதிய ரக கண்டுபிடிப்பான MOX மொபைல் - 21 மொழிகளை கையாளும் வசதி படைத்தது.

நீங்கள் ஒரு கோடி மதிப்புள்ள தொழிலை நடத்த விரும்புகிறீர்களா? என்ற கேள்வி பெங்களூருவைச் சேர்ந்த எக்ஸோடெல்லின் ஈஸ்வரிடம் முன்வைக்கப்பட்டபோது, ஒரு கோடிப்பேருக்கான தொழிலை கட்டமைப்பதாக தெரிவித்தார். ஈஸ்வரின் எக்ஸோடெல் நிறுவனம் ஒரு புதுவிதமான தொடர்பு சாதனத்தை வடிவமைத்துள்ளது. இந்த சாதனம் மூலம் எந்தவித கட்டமைப்பும் முதலீடு செய்யாமல், ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு குறுந்தகவல் அனுப்புவது, உரையாடல் நிகழ்த்துவது சாத்தியமாகியிருக்கிறது. டாஷ்போர்டு எனப்படும் இந்த வசதி விற்பனை, வாடிக்கையாளர் நலன்காக்க உதவவும், வியாபார உத்தியை மேம்படுத்தவும் உதவி வருகிறது. “இணையத்தை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் அதிக கவனம் செலுத்துப்படுகிறது. ஆனாலும், பல முறைகளில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு சேவைகளை வழங்க முடியும்”என்கிறார் ஈஸ்வர்.

ஏர்லாயல் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜா ஹுசைன்,மொபைலை அடிப்படையாகக்கொண்ட தொழிலுக்கும் மற்றவற்றிக்கும் உள்ள போட்டிகுறித்து பேசினார். மொபைல் செயலி தொழிலை பெரும்பாலானவர்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். இவரது ஏர்லாயல் புதிதாக தொடங்கப்பட்ட டிஜிட்டல் மொபைல் விளம்பர நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டு லாடூ என்ற மொபைல் விளம்பர செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தியது இவரது நிறுவனம். இது மொபைலில் டிஜிட்டல் விளம்பர உத்தியை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மொபைல் செயலி தொழிலில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்தல், மற்றும் அவர்களை தக்கவைத்துக்கொள்ளல் என இரண்டு விஷயம் குறித்து ராஜா பேசினார். "இரண்டுமே இதில் முக்கியமானவை, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்த பிறகு, அவர்களை தக்கவைத்துக்கொள்வது கடினமானது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அவர்களை கட்டிப்போட முடியாது. இதை மாற்ற இதுவரை யாருமே செய்யாத ஒன்றை செய்தாகவேண்டும். அதாவது, வாடிக்கையாளர்களின் கருத்தை பெற்றாகவேண்டும். இது கட்டாயம் இந்த தொழிலை மாற்றும் வல்லமைகொண்டது” என்றார் ராஜா.