மின்சாரம் இல்லாத இடத்தில் மின் வணிகத்தில் நுழைந்த மார்க்கெட் வார்கெட் கதை

0

விதர்பா, விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன வறண்ட பகுதி. இங்கு விளையும் உணவுவகைகளை ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்து வருவது, அமராவதியில் உள்ள மார்கெட் வார்கட். 23 வயதுடைய இரு பொறியாளர்கள் தொடங்கிய இது, வீட்டு வாயிலுக்கு காய்கறிகள் மற்றும் பலசரக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததாகும். பிரஷான்த் மஹல்லே மற்றும் புஷ்பக் தேஷ்முக் இதை "மார்கெட் வார்கெட்" (MarketWarket) தளத்தை துவக்கினர்.

கிராமத்தில் பிறந்த இவர்களது பின்னணி விவசாயம் ஆகும். பொறியியல் முதலாம் ஆண்டு பயிலும் போது, இருவரும் சந்தித்து, தங்கள் தொழில் முனையும் சிந்தனைகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் சரியான ஒரு வழி, 2011ல் தான் கிடைத்துள்ளது. அது புஷ்பக், காய்கறிகள் வாங்குவதை, கடினமாக உணர்ந்தபோது, ஒருவர் இவற்றை நம் வாயிற்படியில் தந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பின் வாயிலாக நடந்துள்ளது.

யோசனை தந்த புது துவக்கம்

முன்னால் ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்கள், புஷ்பக் படித்த கல்லூரிக்கு விருந்தினராக வந்திருந்த போது, தொழில் முனைவதை பற்றி பேசியுள்ளார். அந்த பேச்சு, புஷ்பக்கை ஈர்க்க, அவர் தொழில்முனையும் எண்ணத்தை, தன் மனதில் விதையாக விதைத்து, மெதுவாக வளர்த்துள்ளார். அதன் விளைவாக, வீட்டுக்கு தேவையான சேவைகளை அளிக்கும் ஒரு நிறுவனம் மற்றும் மின் வணிகம் நடத்த ஒரு தளம் தேவை என விரிவாக ஆய்வு புரிந்துள்ளார். பின்பு டிஐஇ- நாக்பூர் சென்ற போது, தொழில் முனைவை ஊக்கப்படுத்துவதர்க்கு பதில் அவர்களை இவை நடைமுறைக்கு சாத்தியமற்றது என நிராகரித்துள்ளனர்.

அதில் துவளாது, அந்த யோசனையை, தன் நண்பன் பிரசாந்திடம் புஷ்பக் பகிர்ந்த போது, அவர் உடனடியாக, அதை ஒப்புக்கொண்டு அதற்காக உழைக்கத் துவங்கினார். அந்த நாட்களில் மின் வணிகத்திற்கான வரவேற்பு மெதுவாக அதிகரித்து வந்தது. அந்நேரத்தில் இவர்கள் மனதில் உதித்த கேள்வி, நமக்கு தேவையான காய்கறிகளை யாரோ ஒருவர் நம் வாயிலில் கொடுக்கும் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் நாமே கொடுக்க கூடாது?? இப்படித்தான், மார்கெட் வார்கட் பிறந்தது.

தாங்கி நிற்கும் படிக்கற்கள்

அவர்கள் மார்க்கெட் வார்கட் ஆரம்பிக்கும் பொழுது, வேறு எந்த மின் வணிக தளமும் அங்கு இல்லை. மேலும், மனிதனின் வாழ்வில், வேறு முக்கியமான பிரச்சனைகள் இருந்தன. மின்சாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, மற்றும் விவசாயிகளின் தற்கொலைகள் என, பல பிரச்சனைகள் இருந்தன.

எனவே அப்படி பட்ட நேரத்தில், ஆட்டோவின் பின்புறம் மராத்தியில் விளம்பரம் ஓட்டுவது, உள்ளூர் நிகழ்சிகளுக்கு ஆதரவு தருவது, வீடு வீடாக சென்று, பொருளை பற்றி எடுத்துரைப்பது என அனைத்து வகைகளையும் கையாண்டனர்.

தடைகற்கள்

என்னதான் எடுத்துக்கூறினாலும், மக்களின் நம்பிக்கையை பெறுவது சுலபமாக நடக்கவில்லை. "நாங்கள் கொடுக்கும் பொருட்களை பார்த்து, இது திருடப்பட்டதா? என்று கேட்பார்கள். மேலும் இலவசமாக வாசல் வரை கொடுப்பதாலும், சலுகைகள் அதிகம் தருவதாலும், நாங்கள் வரி கட்டுவதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு.

அடுத்ததாக, எப்எம்சிஜி நிருவனங்களோடு ஒப்பந்தம் போடுகையில், உள்ளூரில் இருந்த வியாபாரிகளை சமாளிப்பது கடினமாக இருந்தது. ஏன் என்றால், 2012ல் இது போன்று, வேறு எவரும் இல்லை. பொருளின் விலை மற்றும் அதன் தரம், இதற்கிடையில் ஒரு சமநிலை கொண்டுவர நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் என்கிறார் பிரஷாந்த்.

ஒரு விநியோக சங்கிலியை கட்டமைத்து, அதில் பெறப்படும் பொருட்களுக்கு, மலிவு விலை வைத்து விற்பது என்பது, பல சிக்கல்களை கொண்ட ஒரு காரியமாகும். மேலும் மளிகை பொருட்கள் என்பது குறைந்த லாபமுள்ள பொருட்கள். பெரிய அளவில் சலுகைகள் தருவது இயலாத காரியம், என்கிறார் பிரஷாந்த். நாங்கள் பெரிய அளவில் வளரவில்லை என்பதை அறிவோம் ஆனால் விதர்பா போன்ற பகுதியில் எங்கள் சேவை இருப்பதும், 95% வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்களிடம் வருவதும் எங்களுக்கு வெற்றி என்றே சொல்லவேண்டும்.

இணையத்தை உபயோகிப்பது, வயதில் சிறியவர்கள் என்பதால், இன்றும், எங்களது தாக்கம் குறைவாக தான் உள்ளது. மேலும், ஆன்லைன் கட்டண வழிமுறையை விடுத்து, பொருள் சேர்கையில், கையில் பணம் கொடுப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால் அப்பகுதியில் மின் வணிகம் தொடங்க நிறைய காரணங்கள் இருப்பதாக, அவர் கூறினார். அவை, குறைவான செலவு, அதிக செலவு இல்லாத மனித சக்தி, சிறிய நகரம் என்பதால், குறைவான போக்குவரத்துச் செலவு, மற்றும், வாடிக்கையாளர்களின் விசுவாசம் இப்படி ஏராளம். சரியாக திட்டம் தீட்டினால், லாபம் பார்க்க இயலும். இது வரை இவர்களிடம் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 1500. கொடுக்கப்படும் ஆர்டரின் சராசரி மதிப்பு 1450 ருபாய் ஆகும்.

வருகாலத் திட்டம்

தற்போதைக்கு எங்கள் தேவை, அனுபவம் மிக்க முதலீட்டாளர்கள், எங்களை வழிநடத்தி, எங்கள் சேவைத்திறனையும் பெரிதாக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களை போல் இல்லாமல், நாங்கள் வெறும் 3 மணி நேரத்தில் பொருட்களை கொடுத்துவிடுகிறோம். மேலும் பொருட்கள் மீதும், அவற்றின் தரம் மீதும் எங்கள் முழு கவனம் உள்ளது, என்கிறார் பிரஷாந்த்.

அடுத்ததாக ஒரு செயலிக்கான திட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், அதில் விவசாயிகளையும் நேரடியாக இணைக்க முடிவு செய்துள்ளனர்.

சிறிய மற்றும் மிகச்சிறிய ஊர்களில் மின் வணிகம்

இந்தியாவின் மின் வணிகச்சந்தை 6 பில்லியன் மதிப்பை தொடும் என்று எதிர்பார்க்கப் படும் இந்நேரத்தில், சிறிய மற்றும் மிகச்சிறிய நகரங்களில் கூட மின் வணிகம் நுழைவது ஆச்சிரியம் அளிக்கும் விஷயமல்ல. மேலும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றின் வளர்ச்சியை தொடர்ந்து, மின் வணிகம் மேலும் 51% வளரும் என எதிர்பார்கப்படுகிறது.

இணையதள முகவரி: MarketWarket

Story teller who loves to talk more and now write a little bit :D

Stories by Gowtham Dhavamani