இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

0

கோடை விடுமுறை வந்துவிட்டது. குழந்தைகளுக்கு முழுவதுமாக ஒரு மாதம் விடுமுறை இருக்கிறது.குழந்தைகள் இந்த மாதம் முழுவதும் குதியாட்டம் போடப்போகிறார்கள். ‘குங்க்ஃபூ பாண்டா 3’ மற்றும் ‘ஜங்கிள் புக்’ போன்ற படங்களைக் காட்டி முதல் ஒன்றிரண்டு நாட்களை சமாளித்துவிடலாம். அடுத்த சில நாட்கள் தாத்தா பாட்டி வீட்டுக்குக் கூட்டிச் சென்று குதூகலமாக கழிக்கலாம். ஆனால் மீதமிருக்கும் நாட்களை என்ன செய்யப்போகிறீர்கள்? கவலை வேண்டாம். உங்களுக்கு உதவும் வகையில் சில பரிந்துரைகளை வழங்குகிறோம்.

அம்மாக்களுக்கான இரு தளங்கள்

மைசிட்டி4கிட்ஸ்.காம் மற்றும் பேரண்ட்ரீ என்ற இணையதளங்கள் அம்மாக்களுக்கு உதவுவதற்கென்றே இருக்கின்றன. இந்த தளங்களில் குழந்தைகளை கையாள்வது தொடர்பான தகவல்கள், அவர்களோடு விளையாட எளிய விளையாட்டுக்கள், கைவேலைப்பாடுகள் என பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒருமுறை இந்த தளங்களுக்குள் சென்றீர்கள் என்றால் வெளியே வரவே மனம் வராது. எக்கச்சக்கமான தகவல்கள் இதில் நிரம்பி இருக்கின்றன. நீங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய சின்ன சின்ன செயல்பாடுகள் இந்த தளங்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. மைசிட்டி4கிட்ஸில் குழந்தைகளுக்கென்றே இருக்கும் பக்கம் பிரசித்தி பெற்றது. இதில் சமையலில் இருந்து பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சம் வரை பல சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கானவை

பெற்றோர்களால் எல்லா நேரமும் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாது. குறிப்பாக அலுவலகம் செல்ல வேண்டிய நெருக்கடியான சூழலில், அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் மட்டுமே குழந்தைகளோடு செலவிட முடிகிறது எனும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இரு நிறுவனங்கள் இருக்கின்றன. ஃப்ளிண்டோபாக்ஸ் மற்றும் மேஜிக்ரேட் ஆகிய நிறுவனங்கள் குழந்தைகளுக்கான சில செயல்முறைகளை தயாரித்து அளிக்கிறார்கள். இவர்களிடம் மாதக்கட்டணமாக ஒரு தொகையை செலுத்திவிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் உங்கள் வீட்டுக்கே விளையாட்டுக் கருவிகளை வழங்குகிறார்கள். இவை இரண்டிலிருந்து எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கானவை. இந்த உபகரணங்கள் குழந்தைகள் மணிக்கணக்காக நேரம் செலவிடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் கற்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஒரே ஒரு மாதம் மட்டும் கட்டணம் செலுத்தி சேவை பெரும் வசதியையும் இந்நிறுவனங்கள் அளிக்கின்றன. இதன்மூலம் கோடை விடுமுறையில் மட்டும் இவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நிகழ்ச்சிகள்

கோடை விடுமுறைக்காகவே பிரத்யேகமாக சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளை குதூகலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாள் முழுவதும் ஆர்வமாக தங்கள் நேரத்தை செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சம்மர் கேம்ப் என்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கென்றே சில பிரத்யேக நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இவை சில மணி நேரங்களோ, சில வாரங்களோ குழந்தைகள் தங்கள் நேரத்தை செலவிடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், கதை வாசிப்பு, இயற்கையை நோட்டம் விடுதல் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கின்றன. புக்மைஷோ மற்றும் ஈவன்ட்ஸ்ஹை போன்ற நிறுவனங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கின்றன.

பொம்மைகள் வாடகைக்கு

பொம்மைகள் வாடகைக்கு விடும் துறை இந்தியாவில் மிகவேகமாக வளர்ந்துவரும் ஒன்றாகும். இந்த சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. சில நிறுவனங்கள் இணையத்தில் செயல்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இணையத்திற்கு வெளியே செயல்படுகின்றன. டாய்ஸ்ஆன்ரெண்ட் என்ற நிறுவனம் பொம்மைகளின் நூலகமாக செயல்படுகிறது .மாதக்கட்டணமாக ஒரு தொகையை செலுத்திவிட்டால் போதும். நூலகத்திற்கு செலுத்துவது போல ஒரு தொகையை செலுத்தி பொம்மையை எடுத்துச் செல்ல வேண்டும். ரெண்ட்ஷெர் என்ற நிறுவனத்தில் பொம்மைகள், உடைகள், ஏன் மருத்துவ உபகரணங்களைக் கூட வழங்குகிறார்கள். நமது தேவைக்கு ஏற்றார் போல இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக வெறும் ஒரே ஒரு பொம்மையாகவும் தருகிறார்கள், மொத்தமாக ஒரு பிறந்தநாள் விழாவுக்கென அதிக அளவிலான பொம்மைகள் வேண்டுமானாலும் அளிக்கிறார்கள். விழாக்களுக்குத் தேவையான மிட்டாய், பாப்கார்ன் ஸ்டால்கள், பலூன்கள், டேட்டூ வரைபவர்கள் என பலவற்றை அளிக்கிறார்கள்.

இது போன்ற பல விதமான சேவைகள் இருக்கின்றன. இவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் விடுமுறை நாட்களை பயனுள்ள விதத்தில் குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

(குறிப்பு : இந்த பத்தியில் இருக்கும் தகவல்கள் மற்றும் பார்வைகள் அனைத்தும் எழுத்தாளருடையதே. இதற்கும் யுவர்ஸ்டோரிக்கும் சம்பந்தமில்லை)

ஆங்கிலத்தில் : அபிஜித் ஷாஹா | தமிழில்: ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கோடை 2016 இங்கே, கேம்ப் எங்கே?

'கோடை விடுமுறை'- ஆறு சிறு சிறு குளு குளு மலை வாச ஸ்தலங்கள்..! 

சென்னையில் இந்தியாவின் முதல் 'தந்திரக் கலை அருங்காட்சியகம்'