கூகுள் முன்னாள் ஊழியரும் இந்தியன் ஓஷன் நிறுவனரும் இணைந்து மேற்கொள்ளும் இசை பயணம்!

0

அவர் இறுதியாக கூகுளை விட்டு வெளியேறுவதாக கூறிய போது நான் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன்.

நேரம் வந்துவிட்டது என்றேன்...

“இது சுலபமான முடிவாக இருக்கவில்லை. இது போல அச்சத்தை உணர்ந்ததில்லை. இந்த தருணத்தில் மிகவும் நிச்சயமற்று உணர்கிறேன். மிகவும் அசெளகர்யமாக இருக்கிறது. அழ வேண்டும் போல உணர்கிறேன்” - என அவர் பதில் அளித்தார்.

நீங்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும். பல மாதங்களுக்கு முன். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். யாருமே தாங்கள் மனதளவில் தயாராகி, உறுதியாக இருப்பதற்கு முன் எதையும் செய்வதில்லை அல்லது அவர்களை தேடி எதுவும் வருவதில்லை. கூகுளை விட்டு வெளியேறியது தான் நீங்கள் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று., என நான் அவரிடம் கூறினேன்.

“ஏன்” என்று அவர் கேட்டார்.

ஏனெனில் உங்களிடம் ஒரு கனவு இருக்கிறது.

ஒரு அருமையான கனவு. அடைய முயல தகுதி வாய்ந்த கனவு.

தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனை.

இந்தியாவில் இசை மற்றும் இசைக்குழு மார்க்கெட்டிங் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை நீங்கள் மாற்ற முயல்கிறீர்கள். பாலிவுட்டுடன் மோத இருக்கிறீர்கள். இதைவிட உற்சாகமானது என்ன இருக்க முடியும். பாலிவுட்டின் அழுகிய சதையின் கீழ் புதிய காற்றை சுவாசிக்க துடித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்களின் ஆதரவு மற்றும் சக்தி உங்களுக்கு இருக்கும்.

கூகுள் இந்தியாவை விட்டு வெளியேறியது பெரிய விஷயமல்ல, என்னை நம்புங்கள். கனவு வீடு வேலை என்று ஒன்று இல்லை. உங்களிடம் கனவு இருக்கும் அல்லது வேலை இருக்கும். நீங்கள் எதையும் இழப்பதில்லை. நீங்கள் பெறுவதற்கு நிறைய இருக்கிறது. ஒரு மகத்தான பயணம் உங்களுக்காக காத்திருக்கிறது. நிறுவனரின் பயணம்.

ஆம், முக்கிய விஷயம் என்ன என்றால், மேதை, சுஸ்மித் சென்னின் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது.

ஆனால் எப்படி?

இந்தியாவின் நண்பர்கள்

ஒரு மனிதரின் கதையை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

அவரது பெயர் அக்‌ஷய் அஹுஜா. எனது நல்ல நண்பர். அக்‌ஷய் நான்கு மாதங்களுக்கு முன் கூகுளில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு வெளியேறினார்.

அவரது பகுதிநேர திட்டம் இனியும் விளிம்புகளில் இருக்காது. அது வளர்ந்து, உயிர் பெற்றிருக்கிறது. அதற்கு கவனம் தேவை. இல்லை அது அக்‌ஷய் கையை கோரியது.

அதற்கு அவர் பிக் பேண்ட் கோட்பாடு என பெயரிட்டார்.

ஒரு பிரம்மாண்டமான கனவு திட்டம், ஆனால் அதற்கான லோகோ தான் கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருக்கிறது.(இதை மேம்படுத்த நீங்களும் உதவலாம்). அறிமுகமில்லாத இசை கலைஞர்கள் தங்கள் கலையை வெளிப்படுத்திக் கொள்வதற்கான மேடை; இசைக்கருவிகள் அல்லாமல் இசை மொழிகளை சார்ந்த ஒரு இசைக்கலைவை. (இந்தியாவில் இவை நிறையவே இருந்தாலும் கவனிக்கப்படாமல் அழியும் நிலையில் இருக்கின்றன).

ஒரு மனிதர் அவருடன் உற்சாகமும் துடிப்பும் கொண்ட இளைஞர்கள் சிலர், யுவதிகளை கவர்வதற்காக அடிக்கடி கித்தார் இசைத்துக் கொண்டிருக்கும் இவர்களால் என்ன செய்துவிட முடியும்?

அதிகம் இல்லை தான். அதாவது ஒரு மேதை மூலம் கண்டறியப்படும் வரை!

இசை தொடர்பான சூத்திரங்கள் மற்றும் முறைகள் மீது நம்பிக்கை இல்லாத இசைக்கலைஞர்!

மறு கற்றலின் மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் கற்றவற்றை மறக்க அறிவுரை கூறும் ஒரு கலைஞர்.

'இந்தியன் ஓஷனின்' (Indian Ocean ) நிறுவனர்; சுஸ்மித சென்!.

தனது இசை வாழ்க்கையில் ஒரு முறை கூட நகலெடுத்திராத ஒரு இசைக்கலைஞர் மற்றும் படைப்பாற்றல் மிக்க மனது செயல்படும் விதத்தை உணர்த்தியவர் (இவரது ஓஷன் டூ ஓஷன் நினைவலைகள் பல்கலைக்கழகங்களுக்கான நிர்வாகவியல் வாசிப்புக்கு உகந்தவை) மற்றும் இசைக்கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிந்த அக்‌ஷய், அசாதாரணமான ஒன்றை அளிக்க கைகோர்த்தனர்.

இந்த திட்டதிற்கு 'தி ஐஸ்பர்க் பிராஜக்ட்' என பெயரிட்டனர்.

ஒரு பாடலின் ஒரு கீற்றை மட்டுமே உணரும் நமக்கு ஒரு இசை படைப்பு எப்படி உருவாகிறது என்பதை புரிய வைக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளாக சொல்லப்பட்ட இசைப்பயணம்.

அக்‌ஷ்யின் ஈடுபாடு மற்றும் எண்ணங்கள் இந்த திட்டத்திற்கான கருத்தாக்கம் மற்றும் மார்க்கெட்டிங்கை உருவாக்கியது. ஒலியின் மூலம் ஜாலங்களை செய்யும் சுஸ்மித்தின் ஆற்றல் மற்றவற்றை பார்த்துக்கொண்டது. இந்த இசை உருவாக்கம் நவம்பர் 8 வெளியானது. சுஸ்மித்தின் மறு வருகையை இது அறிவிக்கிறது. அவர் எங்கும் சென்றுவிடவில்லை.

இருவருடனும் நான் உரையாடினேன். இந்தியா இதுவரை கேட்டவற்றிலேயே மகத்தான இசையாக இது அமையும் என்று சுஸ்மித் கூறினார். இவ்வாறு அவர் கூறுவது இது இரண்டாவது முறை. முதல் முறை இந்தியன் ஓஷனை நிறுவிய போது கூறினார். அதன் பிறகு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும்.

பிக் பேண்ட் கோட்பாட்டை அறிந்து கொண்டு ஐஸ்பர்க் பிராஜக்ட்டை கேட்டுப்பாருங்கள். இதனிடையே அக்‌ஷயிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பது பற்றி ஒரு பார்வை:

  • அந்த ஒரு முக்கிய நபர், செல்வாக்கு மிக்கவர்! அந்த ஒரு நபரிடம் தாக்கம் ஏற்படுத்தும் வரை விடாமல் பாடுபடுங்கள். அதன் பிறகு எல்லாம் மாறிவிடும். ஸ்டே அங்கிளில் (StayUncle) இது தான் திகழ்ந்தது. பிக் பேண்ட் தியரியிலும் நிகழந்தது.
  • உங்கள் கண்களை அகல திறந்து பாருங்கள். யார் உங்களுடைய பங்குதாரர்? நீங்கள் நினைத்த வழக்கமானவராக அவர் இல்லாமல் இருக்கலாம். அறிவியல்-அறிவியல் மட்டுமே, வர்த்தகம்-வர்த்தகம் மட்டுமே, கலை-கலை மட்டுமே என்றும் தயாரிப்பு நிலையில் கலையும் வர்த்தகமும் ஒன்றாக கலக்காது என்ற தவறான புரிதலுக்காக பள்ளி கற்பித்தலை நொந்து கொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கியுள்ள மனிதர்களை ஸ்கேன் செய்யக்கூடிய கியூஆர் கோட் செயலி, சில மாற்றங்களுடன் பார்பவையற்ற கொடை வள்ளல்களுக்கான அருமையான பரிசாக மாறக்கூடும். உற்று கவனியுங்கள். உங்களை முழுவதும் கண்டு கொள்ளுங்கள்.

தி ஐஸ் பர்க் திட்டம், செயல் வடிவம் பெறுகிறது. நான் முதல் முறையாக முத்தமிட முயன்ற தருணத்தில் பெற்ற உணர்வை இப்போதும் பெறுகிறேன். (அவள் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டாள்). அக்‌ஷய், மான்சிம்ரன், விபுல் மற்றும் குழுவினரைச்சந்திதால் கைகுலுக்குங்கள், விசாரியுங்கள். அவர்கள் தகுதியானவர்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: Blaze Arizanov