உலக எமொஜி தினத்தை முன்னிட்டு 70 புதிய ஸ்மைலிகள் அறிமுகம்!

0

சமூக வலைதளங்கள் நம்மை கட்டுப் படுத்தும் முன் இருந்த வாழ்க்கை நம்மில் பலருக்கு நினைவில் கூட இருக்காது. ஒரு 10 வருடத்திற்கு முன்பு எமொஜி என்கிற வார்த்தை கூட இல்லை ஆனால் இன்று எமொஜிக்கு என்ற தனி நாளே கொண்டாடப்படுகிறது. எங்கு பார்த்தாலும் எந்த வலைதளத்தை திறந்தாலும் எமொஜிகள் தான் நம் முன் நிற்கும். நம் மனதில் இருப்பதை பேசாமல் எடுத்துரைக்கும் எமொஜிகள் தினம் ஜூலை 17 அன்று கொண்டாடப்பட்டது.

பட உதவி: ஆப்பிள் நிறுவனம்
பட உதவி: ஆப்பிள் நிறுவனம்

எமொஜிப்பீடியா நிறுவனர் ஜெரேமி புரஜ் 2014 ஆம் ஆண்டு எமொஜி நாளை அறிமுகப் படுத்தினார். அப்பொழுது எமொஜிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், நம் உணர்வுகளை நம்மவர்களுக்கு பகிரும் நோக்கிலே இந்த தினத்தை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார் அவர்.

இதனையொட்டி இந்த ஆண்டு உலக எமொஜி தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் ஆப்பிள் நிறுவனம் 70 புதிய எமொஜிகளை அறிமுகப் படுத்தியுள்ளது. கூடிய விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் இந்த எமொஜிகளை பார்க்கலாம். மக்கள் முடியில் இருக்கும் வேறுபாட்டை காட்டும் வண்ணம் பல வகையான முடி தோற்றங்கள், சுருட்டை முடி, வழுக்கை போன்ற பலவற்றை இணைத்துள்ளனர். மேலும் இதுவரை இணைக்கப்படாத மயில், கங்காரு போன்ற மிருகங்கள் எமொஜிக்களையும் இணைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், சூப்பர் ஹீரோக்களும் எமொஜியில் வர உள்ளனர்.

பட உதவி: ஆப்பிள் நிறுவனம்
பட உதவி: ஆப்பிள் நிறுவனம்

பிரபலமான எமொஜி

முகநூலிலும், மெசஞ்சரிலும் அதிகமாகப் பகிரப்படும் எமொஜி இதய எமொஜிதான் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 2800 எமொஜிக்கள் உள்ளன அதில் ஒரு நாளைக்கு 2300 எமொஜிகள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் எமொஜி தினத்தை முன்னிட்டு ட்விட்டர் சிறந்த 10 எமொஜிகளை வெளியிட்டது அதில் ஹார்ட் ஐஸ்’ ஸ்மைலி, இதயம், நெருப்பு, தம்ப்ஸ் அப் ஸ்மைலிகள் இடம் பிடித்திருந்தன.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்