ஃபோர்ப்ஸ் நாளிதழின் ’30 அண்டர் 30’- பட்டியலில் நுழைந்துள்ள இந்தியாவின் இளம் சிங்கங்கள்

0

ஃபோர்ப்ஸ் நாளிதழ் தங்களின் ’ஃபோர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30’ பட்டியலை 2018ஆம் ஆண்டிற்கு வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வழிமுறை மற்றும் தேர்வு முறை இரண்டுமே கடிமாகிக்கொண்டு வருகின்றது.

"எங்கள் பட்டியலில் 15 பிரிவுகளில் இருந்து பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றோம். இந்தியாவின் பறந்து விரிந்த தன்மையை கணக்கில் கொள்ளும்பொழுது இந்த வேலை மிகவும் கடினமானது ஆகும். மிகவும் பிரபலமான பெயர்கள், இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர், செல்வாக்கு உள்ள குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என அனைவரையும் நாங்கள் ஒதுக்கிவிட்டு இந்த தேர்வை செய்துள்ளோம்.”

எங்களின் ஆய்வுகள் மூலமும், துறை வல்லுனர்களோடு கலந்தாலோசித்தும், எங்களின் 3 அடிப்படை விதிகளை பூர்த்தி செய்த பெயர்களை நாங்கள் எடுத்துள்ளோம்.

1. அவர்கள் சாதனைகளின் தாக்கம்

2. வழக்கமான பாணிகளில் இருந்து தனித்து நிற்பது

3. நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்பது

4. தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள்

1.சாஹில் நாயக், 26 வயது

26 வயதான சாஹில் நாயக், ஒரு சிற்பி. இந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறக் காரணம் அவரது கண்காட்சி ’கிரௌண்ட் ஜிரோ’ கொல்கத்தாவில் உள்ள எஸ்பிரிமெண்ட்டர் அரங்கத்தில் நடந்து வருகின்றது. நாயக் இதுவரை பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும் அடுத்தாக அவரது கண்காட்சி நிகழ உள்ள இடங்கள் லண்டனில் உள்ள டெலிபினா அறக்கட்டளை, கொல்கத்தாவில் மீண்டும் எஸ்பிரிமென்டர் அரங்கத்தில் ’தி இந்தியா ஆர்ட் பேர்’ (பிப்ரவரி 2018),கோஜோ சர்வதேச கலைஞர்களின் சங்கத்தால் நடத்தப்படும் "டர்ன் ஆன் டைட்" (பிப்ரவரி 2018) கண்காட்சியில் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

2.ஷீதிஜ் மார்வா, 29 வயது

வடிவமைப்பு சிந்தனையாளர் ஷீதிஜ், எம்.ஐ.டி மீடியா லேப் இந்தியா வை 2012-ல் துவங்கினார். 2016ஆம் ஆண்டு டெஸராக்ட் இன்க் நிறுவினார். இப்போது வரை புதுமைகளுடனும், வடிவமைப்பில் தனித்தன்மையுடனும் இருக்கும் பொருட்களை உருவாக்கி வருகின்றார். அவரது டெஸராக்ட் நிறுவனம் ’வோக்செல்’லை உருவாக்கியுள்ளது. வோக்செல் ஸ்மார்ட் போன்களுடன் பயன்படுத்தக்கூடிய ஹாலோகிராப்க் ஹெட் செட் ஆகும். அடுத்து குவார்க் 360, உலகின் மிகச்சிறிய விற்சுவல் ரியாலிட்டி புகைப்பட கருவியை உருவாக்கி உள்ளனர். மார்ச் 2017ல் எம்.ஐ.டியின் 35 வயதுக்கு உட்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் முதல் 10 நபர்களில் ஷீதிஜ்யும் ஒருவர்.

3. ரஞ்சன் பர்டோலி, 27 வயது

கவுஹாத்தியில் வசிக்கும் இவர் தனது ’பிடோலி’ என்ற நாற்காலிகளை அறிமுகப்படுத்தியபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ரஞ்சன் 

"அழிந்து வரும் பித்தளையில் பாத்திரங்கள் மற்றும் கலைப்பொருட்கள் செய்யும் அசாமிய கலைஞர்களின் கலைக்கு உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு இந்த நாற்காலிகளை வடிவமைத்துள்ளார்" என்கிறது ஃபோர்ப்ஸ். 

மேலும் கோட்ரெஜ் லேப் 2016 போட்டியில் பர்டோலியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. கவுரவ் முஞ்சால், ரோமன் சைனி, ஹிமேஷ் சிங், 26,27,25

கவுரவ் முஞ்சால் கணினியின் மூலம் வரைகலையை (கிராபிக்ஸ்) காணொளி மூலம் கற்பிக்க முயன்று ஒரு சிறிய காணொளியை ’யூடியுபில்’ பதிவேற்றம் செய்தார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி, செக்கோயா கேப்பிடல், நெக்சஸ் வெண்சர் பார்ட்னர், சைப் பார்ட்னர்ஸ், ப்ளூம் வெண்சர் துணையோடு சார்ட்டிங் ஹேட் என்ற நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம், அன்அக்காடமி, டிஜிட்டல் பயிற்றுவிக்கும் தளத்தை உருவாக்கியுள்ளார். இது, கைபேசிக்கான செயலி, வலைப்பக்கம், மற்றும் யூடியுப் சானலை உள்ளடக்கியது. இதில் 4000 கல்வியாளர்கள் இலவசமாகவும், கட்டணத்திற்கும் காணொளிகளை பதிவேற்றம் செய்துள்ளனர். 

”இந்த தளத்தில் 1.5 லட்சம் பயிற்றுவிக்கும் காணொளிகள் உள்ளன, மேலும் டிசம்பர் 2017ல் மட்டும் 20 மில்லியன் தரம் அவை பார்க்கப்பட்டுள்ளன," என்கிறது போர்ப்ஸ்.

5. ரோஹித் ராமசுப்ரமணியம், கரண் குப்தா, ஹிமேஷ் ஜோஷி, அரிஜித் குப்தா 27,28,29 & 29.

இந்த நால்வரும் பீஸீஜீ யில் படித்தவர்கள். ஆகஸ்ட் 2015ல் "செபோ" என்ற பழைய பொருட்கள் விற்கும் வலைத்தலைத்தை நிறுவினர், ஓஎல்எக்ஸ் மற்றும் குய்க்கர்கு போட்டியாக. மக்களிடமிருந்து பழைய பொருட்களை பெற்று அவற்றை புதுப்பித்து, விற்கின்றனர். மக்களிடமிருந்து மட்டுமல்லாது, ஃபிளிப்கார்ட், அமேசான், அர்பன் லாடர், பெப்பர் பிரை, மற்றும் மைக்ரோமாக்ஸ் மிடம் இருந்தும் வாங்கி புதுப்பித்து விற்கின்றனர். மேலும், விற்பதற்கு தேர்வையான அனைத்தும் இவர்கள் சொந்தமாக வைத்துள்ளனர். மாதம் 15 கோடி வருவாய் பார்க்கின்றனர். இத்துறையில் இப்படியொரு நிறுவனத்தை பார்ப்பது அரிது என்கிறது ஃபோர்ப்ஸ்.

6. பூமி பெட்நாகர், 28

பெட்நாகருக்கு 2017 அற்புதமாக அமைந்தது. "டாய்லெட் : ஏக் பிரேம் கதா", "சுப் மங்கள் சாவதான்" என அவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் மிகுந்த வரவேற்பை பெற்றன. தற்போது அபிஷேக் சவ்பேயின் அடுத்த திரைப்படமான சன் சைரியாவில் நடிக்க உள்ளார்.

7. விக்கி கௌஷல், 29 வயது

மஸான் படத்தில் நடித்த விக்கி கௌஷலுக்கு அமிதாப் பச்சனிடமிருந்து அவரது நடிப்பை பாராட்டி வாழ்த்து செய்தி கிடைத்துள்ளது. "மஸான் திரைப்படம் எனக்கு பல கதவுகள் திறக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது" என ஃபோர்ப்ஸிடம் கூறியுள்ளார். தற்போது ஆலியா பட்டோடு ராஷீ என்ற திரைப்படம், ராஜ் குமார் ஹிரானி இயக்கம் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம், கரண் ஜோஹரின் "லவ் & லஸ்ட்", அனுராக் காஷ்யப்பின் "மண்மர்சியான்" மற்றும் நெட்பிலிக்ஸ்யின் "லவ் பெர் சோகையர் பூட்" ஆகியவை இவரது கைகளில் தற்போது உள்ளது.

8.மிதிலா பால்கர், 25 வயது

மராத்திய பாடல் ஒன்றை கோப்பைகளின் தாளத்தோடு பாடிய காணொளி பிரபலமானது மிதிலாவிற்கு. அது முதல் பல படிகள் தாண்டி வந்துள்ளார் அவர். 

"இந்த மும்பைகரின் அழகும் வசீகரமும் அவருக்கு உதவியாக இருந்தது," என்கிறது ஃபோர்ப்ஸ். 

இணையத்தில் வெளியிடப்பட்ட சில தொடர்கள் (கேர்ள் இன் தி சிட்டி, அந்நாயிங் திங்ஸ் (2016), லிட்டில் திங்ஸ் (2016) ). மூலம் மூலை முடுக்கெல்லாம் மிதிலாவின் பெயர் பரிச்சயமானது. அத்தோடு விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களும் இவரை தேடி வந்தன (கட்டி பட்டி (2015), முரம்பா (2017).

9. ஆலன் அலெக்சாண்டர் கலீகள், 29 வயது

திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆலன், பாரிஸில் பேஷன் படித்தார். மேலும் ஜீன்-பால் காட்லியர், அஸிடைன் ஆலியா, மற்றும் ரிக் ஓவன்ஸ் போன்ற ஜாம்பவான்களிடம் வேலைபார்த்தார். பின்பு தன்னுடைய சொந்த லேபிள்லை துவக்கி அதில் கைநெசவு ஆடைகள், இந்திய கலைஞர்களின் கைவினை பொருட்களை மையப்படுத்தினர். லாக்மே பாஷன் வாரத்திலும் பங்கேற்றார். 

"அவருடைய பரிசோதனை வடிவங்கள் மூலம் அவரது ஆடைகள் இருபாலருக்கும் பொருந்துவது போன்று அமைந்தது,” என்கிறது ஃபோர்ப்ஸ். 

தற்போது திருவனந்தபுரத்தில், தனக்கான இடம் அமைத்து அதில், ஒரு கலை கண்காட்சி அரங்கம், வடிவமைப்பதற்கான இடம், நூலகம், மற்றும் பரிசோதனை ஆய்வக சமையலறையும் அமைத்துள்ளார். உலகம் முழுதும் தனது பொருட்களை கொண்டு செல்லும் கனவு அவருடையது.

10. சுஹானி பரேக், 26 வயது

லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ட்ஸ்மித்ஸ்ல் கற்றுத்தேர்ந்த சிற்பி இவர். ஃபேஷன் மற்றும் வடிவமைத்தல் தாண்டி நகைகள் செய்வதிலும் இவருக்கு பரிச்சயம் உண்டு. 

"க்ராசியா யங் பேஷன் விருது", "எல் கிராஜூயேட்ஸ் விருது" ஆகியவற்றை வென்றுள்ளார். வோக் பாரிஸ் இதழில் இவரது நேர்காணலும், வோக் அரேபியா இதழில் இவரது நகையை பாடகி ரிஹானாவும் அணிந்த புகைப்படமும் அட்டைப்படமாகவும் இடம் பெற்றிருந்தது," என்கிறது போர்ப்ஸ்.

11. அபினவ் பதக், சாக்கேத், யோகேஷ், சத்யா நாராயணன், 24,25,22,26

கடைகளில் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்க நீண்டு நின்ற மக்கள் வரிசையை கண்டு, இதற்கு ஒரு மாற்று உருவாக்க வேண்டும் என்று விரும்பினர் அபினவ் மற்றும் சாகேத். இருவரும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் சகஊழியர்களாக பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் பிறந்ததுதான் பெர்பியூல் 1பே செயலி. இதன் மூலம் கடைகளில் உள்ள பொருட்களை தங்கள் தொலைபேசிகளில் மக்கள் ஸ்கேன் செய்து நேரடியாக பணம் செலுத்த இயலும். தனியாக வரிசையில் நின்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது ஃபோர்ப்ஸ். 

தற்போது ஸ்பார், மோர், மேக்ஸ் ஆகிய கடைகள் இவர்களில் செயலியை பயன்படுத்துகின்றனர். கலாரி கேப்பிடல் நிறுவனம் அவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது. தற்போது 1 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்கு 30% அதிகரித்தும் வருகின்றனர்.

12. ஆதித்யா ஷர்மா 

பெருநிறுவனங்களில் மிக வேகமாக உயர்ந்த சிலரின் ஆதித்யாவும் ஒருவர். சேர்ந்த 7 வருடங்களில் மேக்கின்சீ & கம்பெனியில் பங்குதாரர் ஆகியுள்ளார். இந்தியாவில் வெறும் 20 நபர்கள் மட்டுமே இந்த பெருமைக்கு உரியவர்கள்.

13. சிராக் சாஜர், 29 வயது

பர்மா பர்மா உணவகத்தின் நிறுவனர் சிராக். ஆரம்பித்த 14 மாதங்களில், டெல்லி, மும்பை, குருகிராம் ஆகிய 3 நகரங்களில் பறந்து விரிந்துள்ளது இந்த உணவகம். தற்போது 4வதாக பெங்களுருவில் ஒன்றும் துவங்க உள்ளார். நாட்டின் மிகவும் பிரமிக்க வைக்கும் சில உணவகங்களில் சிரக்கின் உணவகமும் ஒன்றாக உருவாகியுள்ளது.

14. ஷ்ரதா பன்சாலி, 25 வயது

ஐவரும் உணவாக நிறுவனர் தான். சீனா மற்றும் ஐஸ்லாந்தில் இருந்து அருமையான சைவ உணவு வகைகளை இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளார் அவரது உணவகம் காண்டீ & கிரீன் மூலம். இதனில் உபயோகிக்கப்படும் பொருட்கள் தான் மிகவும் முக்கியம். நீண்ட பரிசோதனைகளுக்கு பிறகு தான் அவை சமையலுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் ஷ்ரதா. இந்த உணவகம் "கிளீன் ஈட்டிங்" என்ற தத்துவத்தை முன்வைக்கிறது என்கிறது ஃபோர்ப்ஸ். விரைவில் இந்த உணவகத்தின் மற்றொரு வடிவமும் திறக்கப்படவுள்ளது. அதில் செலவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15. சதீஷ் கண்ணன், இன்பசேகர் தீனதயாளன், 28

இருவரும் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள். நாட்டில் உள்ள 2000திற்கும் அதிகமான மருத்துவர்களை நோயாளிகளோடு மெய்நிகர் உண்மை (விருச்சுவல் ரியாலிட்டி) மூலம் இணைத்துள்ளனர். இதற்கு அவர்களது "டாக்ஸ்ஆப்" உதவியுள்ளது. அதனை தங்களது பாசோர்ஸ் டெக்னாலஜீஸ் மூலம் துவங்கியுள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு இருந்த மிகப்பெரிய சிக்கல் நீக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 2000 மேற்பட்ட நோயாளிகள் இவர்கள் செயலி மூலம் 150 முதல் 500 வரை பணம் கட்டுகின்றனர். அதில் இவர்களுக்கு கமிஷன் உண்டு.

16. தீபாஞ்சலி டால்மியா, 26 வயது

எர்ணஸ்ட் & யங் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதித்து வந்த தீபாஞ்சலி அதனை விடுத்து, நாட்டில் 87 பெண்களில் சிக்கலை தீர்க்க தனது ஹேடே கேர் நிறுவனத்தை துவங்கியுள்ளார். மாதவிலக்கு சமயத்தில் அவர்கள் உபயோகிக்க ஏற்றவாறு, "சானிட்டரி நாப்கின்" தயாரிக்க துவங்கியுள்ளார். அவற்றை மூங்கில் மற்றும் சோளம் ஆகியவற்றை கொண்டு உருவாக்குகிறார். தற்போது டெல்லி மற்றும் மும்பையில் கிடைக்கின்றன. விரைவில் இணையம் மூலமாகவும் நீங்கள் இவற்றை பெறலாம்.

17. கவுதம் பாட்டியா, 29 வயது

மத்திய அரசின் ஆதார் சட்டத்தின் தற்போதைய வடிவத்தை கடுமையாக எதிர்பவர்களில் முக்கியமானவர் கவுதம். அதற்காக ஒரு குழு அமைத்து கடுமையாக போராடி வருகின்றார். வக்கீல் அரவிந்த் தத்தாவை சந்தித்த பின்பு அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து ஆதார் சட்டத்தை எதிர்த்து வருகின்றார், மேலும் உச்சநீதிமன்றத்தில், ஆதார் மற்றும் பான் அட்டை ஆகியவற்றை இணைப்பதை எதிர்த்து வாதாடியுள்ளார்.

18. ஜூபின் நொவ்டியால், 28 வயது

சமீபத்தில் பிரபலமடைந்த இசை புயலின் "ஹம்மா ஹம்மா" பாடலின் மறுஉருவத்தை பாடியவர் இவர்தான். தேர்ச்சி பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர். இதற்கு முன்பு ஸ்ரேயா கோஷலுடன், "சம்மந்தர் மே" பாடலிலும், சுனிதி சவுகானுடன் "தேரே லியே" பாடலிலும் பாடியுள்ளார். மேலும் சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்படத்தில் படித்ததற்கு அவருக்கு மிர்ச்சி மியூசிக் விருதுகளில் சிறந்த பாடகர் விருதும் கிடைத்தது.

19. அன்கித் அகர்வால், கரண் ரஸ்தோகி, 28,29

கோவில்களில் இருந்து வெளியேறும் கழிவுகளில் அதிகமான பூக்கள் இருப்பதை பார்த்த கரண், அதற்கு ஒரு தீர்வு கண்டார். அவர் துவக்கிய நிறுவனம் "ஹெல்ப் அஸ் க்ரீன்". அதன் மூலம், அந்த பூக்களை கொண்டு குளிக்கும் சலவைக்கட்டி (சோப்பு), ஊதுபத்தி, உரம், மற்றும் ஸ்டைரோபார்ம் ஆகியவற்றை தயாரிக்கிறார். அதன் பின்னர் நிறுவனத்தில் அவரது நண்பரும் இணைந்தார். தற்போது டாடாவின் டிரஸ்ட்களான "சோசியல் ஆல்பா, க்ரீன்பீல்டு வென்ச்சர், மற்றும் எக்கோ க்ரீன்" ஆகிவற்றிடம் நிதியுதவி பெற்று நிறுவனத்தின் அடுத்த கிளைகளை வாரணாசி மற்றும் மதுராவில் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் துவக்க உள்ளனர். மேலும் தங்கள் நிறுவனத்தின் மூலம் அதிகமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

20. ஜான்வி ஜோஷி மற்றும் நுபுரா கிர்லொஸ்கர், 25

இருவரும் இணைந்து துவக்கிய நிறுவனமான ப்ளீடெக் மூலம் "ப்ளீவாட்ச்"ஐ அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் காது கேளாதோர், தங்களை சுற்றி நடக்கும் அல்லது ஒலிக்கும் விஷயங்களை அறிய இயலும். அழைப்புமணி ஒலி, அபாயமணி ஒலி, குழந்தையின் அழுகை, குக்கர் விசில் சத்தம் ஆகியவற்றை பதிவு செய்து பல்வேறு வண்ணங்கள் மூலம் இந்த கைக்கடிகாரத்தில் சமிக்ஞை ஒளிக்கும். மேலும் அவரச நிலையில் 5 பேருக்கு இதன் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப இயலும்.

21. ரோஹன் எம் கணபதி மற்றும் யஷஸ் கரணம் 25, 23

இவர்கள் இணைந்து பெலட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை துவக்கினர். 2016ஆம் ஆண்டு இஸ்ரோவிடமிருந்து ஒரு செயற்கைக்கோள் உந்துதல் அமைப்பை உருவாக்குவதற்கான ஆணை கிடைத்தது. தற்போது இவர்கள் நிறுவனம் சேட்டக் என்ற மீண்டும் உபயோகிக்கக்கூடிய 2 கட்டங்கள் கொண்ட செயற்கைக்கோள் உந்து வாகனத்தை உருவாக்கும் வேலையில் உள்ளனர். இதில் முதல் கட்டத்தை மீண்டும் உபயோகிக்க இயலும். 2 கட்டங்களும் திரவ மீத்தேனை எரிபொருளாக பயன்படுத்தும் என்கிறது போர்ப்ஸ்.

22. மனோஜ் மீனா, சிப்ரதா தாஸ், 29, 27

சாதாரண காற்றடியில் 70 வாட் மின்சாரம் தேவைப்படுகிறது மேலும் அதில் ஆற்றல் வீணாகிறது. ஆனால், 

“எங்களது ’கொரில்லா பேன்’ வெறும் 28 வாட் மின்சாரத்தில் ஓடக்கூடியது. இதுல ’பிரஷ்லெஸ் மோட்டார்’ பயன்படுத்தியுள்ளோம்," என மனோஜ் மீனா கூறுவதாக சொல்கிறது ஃபோர்ப்ஸ்.

தற்போது இவரது நிறுவனம் ஆட்டம்பர்க் டெக்னாலஜிஸ் தயாரிக்கும் இந்த காற்றாடிதான் இந்தியாவிலேயே ஆற்றலை குறைவாக உபயோகிக்கும் காற்றாடி என்ற பெயரை பெற்றுள்ளது.

23. விதித் ஆற்றே மற்றும் சஞ்சீவ் பரண்வால் 27, 28

இருவரும் இணைந்து 2015ல் "மீசோ"வை துவக்கினர். "மேரி ஷாப்" என்பதன் சுருக்கமே மீசோ ஆகும். இந்த நிறுவனம் மூலம் வணிகர்கள் தங்கள் பொருட்களை சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக விற்க இயலும். வர்த்தகர்கள் அல்லது, உற்பத்தியாளர்கள் இவர்கள் செயலியில் ஒரு சந்தையை உருவாக்க இயலும். மேலும் வீட்டில் உள்ள பெண்கள் இதில் உள்ள பொருட்களை தங்களது உற்றார் உறவினரிடம் சமூக வலைத்தளம் மூலம் கொண்டு சேர்க்க இயலும். அவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கினை இந்த செயலியில் இணைத்தால் போதும். மேலும் இதில் வடிக்கையாளரிடம் வாட்ஸ்ஆப் மூலம் பேசி, பின்னர் பணத்தை செலுத்தி வர்த்தகத்தை நிறைவு செய்ய இயலும். பொருட்களை கொண்டு சேர்க்கும் பணி, மீசோவுடையது. அதற்கு அவர்கள் வணிகர்களிடம் கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர்.

தற்போது இந்த தளத்தில், 1000 விற்பவர்களும், 30000 மறுவிற்பனையாளர்களும் உள்ளனர். மாதத்திற்கு 40% வளர்ச்சி காண்கிறது இந்த செயலி.

24. பவன் குப்தா, நிபுண் கோயல், முண்டித் விஜய்வெர்கியா 26, 27, 27.

இவர்கள் நிறுவனம் 911 இந்தியா ஹெல்த் கேர் "கியுரோபி" என்ற மருத்துவர்களுக்கான சமூக செயலியை உருவாக்கியுள்ளனர். இதில் அந்த மருத்துவர்கள் தங்களது தினசரி வாழ்வில் சந்திக்கும் வித்தியாசமான நோயாளிகளை பற்றியும் நோய்களை பற்றியும் பதிவிடுகின்றனர். தற்போது 200000 மருத்துவர்கள் தினமும் 400 பதிவிடுகின்றனர்.

25. ஜஸ்பிரீத் பும்ரா, 24 வயது

கடந்த இரண்டு வருடங்களில் பும்ராவின் வளர்ச்சி என்பது மிகவும் அதிகமாகும். அதன் காரணமாக டெஸ்ட் போட்டியில் அவரால் இந்திய அணிக்காக களம் காண முடிந்தது. மேலும் 2017 வருடம், 23 ஒருநாள் போட்டிகளில் 39 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதன் மூலம் ஐசிசி யின் ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவரது பெயரும் இடம் பெற்றது. 

“தனது திறமையை டீ20 போட்டிகளில் நிரூபித்துள்ளார். கடைசி ஓவர்களில் அவரது யார்கர் பந்துகளுக்கு பதில் கூறுவது மிகவும் கடினம்," என்கிறது ஃபோர்ப்ஸ். 

இந்தியாவில் இப்படி ஒரு வேகப்பந்து வீச்சாளர் உருவாகி இருப்பது மிகவும் சிறப்பான விஷயம். அவருடைய திறமைகளை வைத்து பார்க்கும் பொழுது, வெகு விரைவில் பல சாதனைகளை அவர் புரிவார் என கூறலாம்.

26. ஹர்மன்ப்ரீத் கவுர், 28 வயது

இங்கிலாந்திற்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை போட்டியில், ஹர்மான்ப்ரீத் கவுரின் ஆட்டம் அபிரிமிதமாக அமைந்திருந்தது. இந்த பஞ்சாப் சிங்கம் அர்ஜுனா விருது பெற்றுள்ளது. ஃபோர்ப்ஸ் அவரை "பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்தவர்" என வருணிக்கிறது.

27. சவிதா புனியா, 27 வயது

ஹாக்கி களத்தில் தனது அணிக்கு எதிராக எவரும் கோல் அடிக்க விடாது பார்த்துக்கொண்டதால், சீனாவை வென்று இந்தியா ஆசியா கோப்பை கைப்பற்றியது மேலும் 36 வருடங்களுக்கு பிறகு ரியோ ஒலிம்பிக்ஸ் வாய்ப்பும் கிடைத்தது. என்கிறது ஃபோர்ப்ஸ். மேலும் அதன் காரணமாக சவிதாவிற்கு சிறந்த கோல்கீப்பர் விருதும் கிடைத்து.

28. ஹீனா சிந்து, 28 வயது

விரலில் காயம் இருந்தாலும், தனது குறியை தவறவிடாது காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார் ஹீனா. மேலும் 2014 மற்றும் 2016-ல் டெஹ்ரான் செல்ல மறுத்த போதும் அவரது உறுதி வெளிப்பட்டது. தெஹ்ரானில், ஆசிய ஏர் பிஸ்டல் போட்டிகளில் கலந்து கொள்ள அவர் மறுத்ததற்கான காரணம், அங்கு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணியவேண்டும் என்ற கொள்கையே. அடுத்தாக அவருடைய தற்போதைய குறி ஒலிம்பிக்ஸ் என்கிறது ஃபோர்ப்ஸ்.

29. தருண் மேத்தா , ஸ்வப்னில் ஜெயின், 28

இருவரும் இணைந்து "அத்தர் எனர்ஜி" என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர். அதன் மூலம் ஒரு இரு சக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளனர். மின்சாரத்தில் ஓடக்கூடிய இந்த வாகனம், சாதா வண்டிகளுக்கு நிகராக உள்ளது. பெயர் ’எஸ்-340’ இந்த வருடத்தில் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றி ஃபோர்ப்ஸ் கூறியிருப்பது, ஒரு மணி நேரத்தில் 15 ஆம்பியர் அளவிற்கு இதற்கு மின்சாரம் ஏறிவிடும். 

ஒரு முறை நாம் சார்ஜ் ஏற்றினால் அதிக பச்சமாக 70கிலோ மீட்டர் செல்ல இயலும். 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல இயலும். தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா ஆக்ட்டிவா அல்லது வெஸ்பா போன்ற வாகனங்களின் அளவில் இதன் விலை இருக்கும் என கருதப்படுகிறது.

30. ரஞ்ஜீத் பிரதாப் சிங் :

ரஞ்ஜீத் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் இணைந்து, ப்ரதிலிபி என்ற தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், இந்திய மொழிகளில் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வெளியிட இயலும். தற்போது இதனில் 15000 எழுத்தாளர்களும், 13 மில்லியன் வாசகர்களும் உள்ளனர்.  

ஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா

Related Stories

Stories by YS TEAM TAMIL