ப்ரிட்டிஷர்களை எதிர்த்து நூற்றாண்டுகள் முன்பே மனித வெடிகுண்டாகிய தமிழக வீராங்கனை!

0

ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட பெண்களில் முக்கியமாக நாம் கருதுபவர் ஜான்சி ராணி. தமிழகத்தை பொறுத்தவரை வேலு நாச்சியாரும் வரலாற்றில் இடம் பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை. ராணி லட்சுமி பாய்-க்கு முன்னரே வீரு கொண்டு எழுந்து போராடியவர் வேலு நாச்சியார். இருப்பினும் ஜான்சி ராணிக்கு கிடைத்த அளவு பேரும், புகழும் அவருக்குக் கிடைக்கவில்லை.

ராணி வேலு நாச்சியாரைப் போலவே அவரது குழுவில் இருந்த குயிலி என்ற வீராங்கனைப் பற்றியும் பலர் அறிந்திருக்கவில்லை. இந்திய போர் வரலாற்றில் குயிலி, மனித வெடிகுண்டாக செயல்பட்ட முதல் வீராங்கனை என்பது கூடுதல் தகவல். 

1700-களில் போர் மூண்டபோது, வேலு நாச்சியரின் கணவர் ப்ரிட்டிஷர்களால் கொல்லப்பட்டார். அதற்கு பழி தீர்க்கவும், தங்கள் ராஜ்ஜியத்தை காக்கவும், ஆங்கிலேய படைகளை எதிர்த்து போராடினார். அவர் ஒரு ராணுவப் படையை உருவாக்கி இதை செய்தார். அதற்கு அருகாமை ராஜிய அரசர்களான கோபாலா நாயக்கர் மற்றும் ஹைதர் அலியின் உதவியை பெற்றார். வேலு நாச்சியார் பெண்கள் படை என்று தனியாக அமைத்ததாகவும் நப்பின்னை கூறுகிறது. பெண்கள் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வீரத்துடனும், ஒழுக்கத்துடனும் இருந்துள்ளனர். 

வேலு நாச்சியாரின் படை ஆங்கிலேயர்களின் படைக்கு இணையாக இல்லை. அவர்களிடம் இருந்த துப்பாக்கிப் படையை எதிர்க்க முடியவில்லை. அப்படி ஒரு முறை தங்கள் படையைக் காக்க, குயிலி என்ற வீராங்கனை தானே மனித வெடிகுண்டாக மாறி எதிரிகளை கொல்லத் துணிந்துள்ளார். 

ஆங்கிலேயர்கள் ஆயுதங்களையும், குண்டுகளையும் ஒரு கோவிலில் ஒழித்து வைத்திருந்தனர். அங்கே பெண்களுக்கு மட்டும் அனுமதி இருந்தது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு குயிலி, தன் சக பெண் வீராங்கனைகளுடன் கோவிலுள் நுழைந்து கடவுளை வழிபடுவது போல நடித்தனர். பின்னர் தாங்கள் எடுத்துச் சென்ற எண்ணையை குயிலியின் உடலில் கொட்டினார்கள். குயிலி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் வைத்திருந்த அறையில் நுழைந்து தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டார். அந்த அறையில் இருந்த அத்தனை ஆயுதங்களும் தீக்கிரை ஆனது. இதை அடுத்து வேலு நாச்சியாரின் படையும் போரில் வெற்றிக்கொண்டது. தன் நாட்டுக்காக உயிரைவிட்டார் குயிலி. 

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 2008-ம் ஆண்டு வேலு நாச்சியாரின் உருவ ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. வீராங்கனை குயிலியின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டும் இதுவரை கட்டப்படவில்லை. 

கட்டுரை : Think Change India