நம்மை ஊக்கப்படுத்தும் 10 பெண் தொழில்முனைவர்கள்!

0

மன உறுதியோடும், வலிமையோடும் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் தொழில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களை இன்று இங்கு யுவர்ஸ்டோரி பட்டியலிட்டுள்ளது.

இந்த பெண்கள் புதிய இந்தியாவை உருவாக்க முயலுகிறார்கள், இந்த இந்தியா தைரியமானது, சவால்களை சமாளிக்கவும், அவர்களது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளது.

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பெண்கள் சிலர் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்தவர்கள். இவர்கள் தொழில்முனைப்பை சிறந்த ஆற்றலோடு கையாண்டது மட்டுமல்லாமல் எவ்வாறு வணிகம் செய்ய வேண்டும் என்பதையும் காட்டியுள்ளனர். சமூகத்தில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியதிலிருந்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புது வாய்ப்புகளை உருவாக்குதல் வரை தங்களை தாங்களே ஊக்குவிற்று இன்றைய தலைவர்களாக திகழ்கின்றனர்.

ரதி ஷெட்டி, துணை நிறுவனர், பேங் பஜார்

பேங் பஜார் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாகும், இது வாடிக்கையாளர்களிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பல்வேறு நிதியியல் பொருட்களின் தனிப்பயனாக்கப்பட்ட விலைகளை உடனடியாக காட்டுகிறது.

ஹேமலதா அண்ணாமலை, நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஆம்பியர் வாகனங்கள் பிரைவேட் லிமிடெட்

கோயம்புத்தூரை சேர்ந்த இவர் இந்தியாவில் மின்-வாகனகங்களை அறிமுகப்படுத்தி நேர்த்தியாக நடத்தி வருகிறார். மேலும் தன் நிறுவனத்தில் 30 சதவீதத்திற்கு மேலான பெண்களை பணிக்கு அமர்த்தி மற்ற பெண்களை ஊக்குவிக்கிறார்.

சுனிதா மஹேஷ்வரி, சீஃப் டிரிமர், டெலி ரேடியாலஜி சொலியுசன் (TRS) மற்றும் RXDX சிறப்பு சிகிச்சை மையம்

மருத்துவர் மற்றும் தொழில்முனைவரான சுனிதாவிற்கு டெலி மெடிசன் மீது ஆர்வம், அதனால் டெலி ரேடியாலஜி சொலியுசன் (TRS) மற்றும் RXDX சிறப்பு சிகிச்சை மையத்தை பெங்களூரில் அமைத்தார். இந்த டெலிஹெல்த் துறை ஸ்டார்ட்-அப்களை இணைப்பதோடு மட்டுமல்லாமல் டெலி-ஆலோசனை மற்றும் மக்களுக்காக மக்கள் என்னும் அமைப்பை துவங்கி நிதி திரட்டி அரசு பள்ளிகளில் 560 விளையாட்டு மைதானத்தை அமைத்து கொடுத்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோய்கள் கண்டறிந்து பழைய முறையை மாற்றுகிறார்.

அஸ்வினி அசோகன், இணை நிறுவனர், மேட் ஸ்ட்ரீட் டென்

இந்நிறுவனத்தின் முயற்சி உயர்தர சாதனம் முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்திலும் கணிணி பார்வையை கொண்டு வருவதுதான். கிலவ்ட் அடிப்படையிலான இயந்திர கற்றல் தளத்தை கொண்டு மாற்ற முயல்கின்றனர். இவர்களது தனியுரிமை கட்டமைப்பானது பிளக்-அன்-பிளே முறையில் நேரடி வீடியோ பகுப்பாய்வை வழங்குவதாக வாக்களித்தது. இது வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பயன்பாடுகளில் பல்வேறு முறைகளை அங்கீகரிக்கும் பணிகளை எளிதில் இணைக்க உதவுகிறது.

இவரைப்பற்றி மேலும் படிக்க: அஸ்வினி அசோகன்

எல்சா மேரி டி சில்வா, நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, சேஃப்சிட்டி

சேஃப்சிட்டி, GIS அடிப்படையில் அமையும் அதாவது மேப்பிங் / புவிப்பாறை தொழில்நுட்பம் மூலம் இது தகவல் வரைபடத்தை உருவாக்க எளிதாக்குகிறது. இது பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு குறித்த தனிப்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தும் ஒரு தளமாக உள்ளது. கொடுக்கப்பட்ட தகவல்களில் இருந்து ஹாட்ஸ்பாட்டுகள் அல்லது இருப்பிடத்தினை பயன்படுத்தி வரைபடத்தில் இருக்கும் இடத்தை காட்டுகிறது.

நேஹா ஜூனேஜா, இணை நிறுவனர், கிரீன்வே கிராமீன்

கிரீன்வே கிராமீன் இந்தியாவின் மிகப்பெரிய அடுப்பு விற்பனை நிறுவனம், இது நேபால், பங்களாதேஷ் மற்றும் மெக்ஸிகோ போன்ற சர்வதேச சந்தைகளிலும் நுழைந்துள்ளது. இது ஒற்றை பர்னரை கொண்ட உயர் செயல்திறன் சமையல் அடுப்பு மேலும் இது 70 சதவிகிதம் எரிபொருள் செலவை சேமிக்க உதவுகிறது (மரம், வேளாண் கழிவு, மாட்டுசாணம், மற்றும் கரியை பயன்படுத்துகிறது). அதுமட்டுமின்றி தீங்கு விளைவிக்கும் உமிழ்வை வெளியிடுவதை குறைக்கிறது.

ரஷ்மி தாகா, நிறுவனர், ஃப்ரெஷ்மெனு

இந்த நிறுவனம் பெயருக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு தினமும் புதிய மெனுவை அளிக்கிறது. தங்கள் சொந்த சமையல் அறையில் சமைத்து ஆர்டர் செய்த 45 நிமிடத்தில் விநியோகம் செய்கின்றனர். பல பெரும் நிறுவனர்களும் இவர்களோடு இணைந்துள்ளனர்.

அனு ஆச்சார்யா, நிறுவனர், மேப் மை ஜினோம்

அனு ஆச்சார்யா இந்நிறுவனத்தை 2011ல் துவங்க மிக முக்கிய காரணம் மரபணு ஒப்பனை மற்றும் நோய்களைத் தடுப்பதற்க்கான விழிப்புணர்வை மக்களுக்கு அளிக்கவே. இந்நிறுவனத்தின் மைய கருத்து தனிநபரின் மரபணு அறிக்கை மற்றும் சுகாதார வரலாறை அறிந்து அதற்கு ஏற்ப மற்றும் மரபணு ஆலோசனைகளை வழங்கி ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும்.

ராதிகா அகர்வால், இணை நிறுவனர், ஷாப்கிலூஸ்

இந்தியாவின் அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஷாப்கிலூஸ். ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைலில் கவனம் செலுத்தும் ஷாப்கிலூஸ் உள்ளூர் மற்றும் பிராண்ட் அல்லாத சந்தைகளில் தன் கவனத்தை செலுத்துகிறது.

நய்யா சகி, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர், பேபி சக்ரா

மகப்பேறு மற்றும் குழந்தை மீது கவனம் செலுத்தும் பேபி சக்ரா, ஆன்லைன் மூலம் இதுவரை 30 மில்லியன் பெற்றோர்களுக்கு சிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள், தண்டு இரத்த வங்கிகள், விளையாட்டு பள்ளிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க உதவியுள்ளது. வலுவான சமூக ஒருங்கிணைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப தளம் மற்றும் மதிப்புரைகளில் கவனம் செலுத்தும் பேபி சக்ரா பெற்றோர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க எளிமையாக்கியுள்ளது.

தமிழில் - மஹ்மூதா நெளஷின்