பொறியியல் பட்டதாரிகள் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கிய கதை!

0

ஐஸ்கிரீம் தயாரிப்பிற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணி புரியும் ரோகன் பஜ்லா, டாயிஷ் வங்கியில் பணி புரியும் சரன்ஷ் கோயல், ஸாஸ் சான்று பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பகுதி நேர காமிக் புத்தக எழுத்தாளர் அனிருத் சிங் ஆகிய கல்லூரி கால நண்பர்கள் பாங்காக்கில் விடுமுறையை கழித்த பொழுது, இதுவே தங்களின் தொழில்முனை ஆர்வம் என தீர்மானித்தனர். உடனடி ஐஸ் கிரீம் நிலையமான 'செர்ரி காமட்' (Cherry Comet)உருவானது .

திரவ நைட்ரஜன் கொண்டு எந்த விதமான வண்ணமோ அல்லது செயற்கை உணவு பொருட்களோ இல்லாமல் ஃப்ரெஷான ஐஸ் கிரீம் தயாரிக்கிறோம். டெல்லி என் சி ஆர் இல் அமைந்துள்ள DLF cyberhub மற்றும் சங்கம் மாலில் புதிதாக ஒரு நிலையம் என தற்பொழுது இரண்டு நிலையங்கள் உள்ளன" என்கிறார் ரோகன்.

சந்தித்த சவால்கள், படிப்பினைகள்...

செயல் வடிவத்திற்கான எண்ணம் இருந்தாலும், அறிந்திராத வர்த்தகத்தில் கால் பதிப்பது சவால் தான். உடனடியாக ஐஸ்கிரீமை உரையவைப்பது என்பது சுலபமானது மற்றும் வலிமையானதும் கூட. "இந்த எண்ணத்தை பகிர்ந்து கொண்ட தருணம் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக எந்த விதமான ஐஸ் கிரீமையும் ஃப்ரெஷாக தயாரிக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் அறிந்ததே" என்கிறார் ரோகன்.

திரவ நைட்ரஜனின் நிபுண பயன்பாடு இது வரை அறிவியலில் மட்டுமே இருந்தது. இதை முதன் முதலாக உணவு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது செர்ரி காமட். இதற்கு தேவையான தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்களை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது கடினமான பணியாகவே இருந்தது.

பொறியியில் பின்புலம் இதன் அறிவியல் கொள்கைகளை புரிந்து கொள்ள பெரிதும் உதவியது. இந்த துறையின் தேர்ந்த நிபுணர்களின் வழி காட்டுதலுடன், ஒரு வருடத்திற்கும் மேலாக இதன் செயல் முறை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றியும் அறிந்து கொண்டோம்.

ருசிமிகு ஐஸ்கிரீம் உருவாக்குவது அடுத்த சவாலாக அமைந்தது. ஐஸ் கிரீம் தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு அதன் சரியான வழிமுறைகளை அறிந்திருத்தல் அவசியம். பாலின் கொழுப்புசத்தின் அளவு, அதனுடன் சேர்க்கும் சுவையூட்டி, சரியான அளவிலான இனிப்பு என்று அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.

அறிவியல் பூர்வமான அணுகுமுறை

இரண்டு வருடங்களாக திரவ நைட்ரஜன் கொண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முயற்சி இதன் சூட்சமத்தை அறிந்து கொள்ள உதவியது. "இதன் தயாரிப்பு வழிமுறை மனப்பாடம் ஆகிவிட்டது, எந்த பொருள் சேர்த்தால் என்ன மாதிரியான தயாரிப்பு வரும் என்று கனபொழுதில் கணிக்க முடியும்" என்கிறார் ரோகன். நிறைய நிறை குறைகள் அறிந்து கொண்டோம். ஜாமுன் மற்றும் ஜகேர்மிச்ட்டர் கொண்டு தயாரித்த ஐஸ்கிரீம் சிறப்பாக அமைந்தது, அதே சமயம் ஜிலேபி ஐஸ்கிரீம் தோல்வியில் முடிந்தது.

இதன் பின்னணி அறிவியல் ஒன்றும் கடினமானதல்ல. -196.4 டிகிரீ செல்சியஸ் வெப்பத்தில் திரவ நைட்ரஜன் கொதிநிலை அடைய வேண்டும். இதை ஐஸ் கிரீம் பேசில் ஊற்றும் பொழுது நொடிப்பொழுதில் வாயுவாக மாறி விடும் தன்மை கொண்டது, ஐஸ் கிரீம் பேசில் உள்ள வெப்பத்தை இழுத்துக் கொள்ளும்.

பேஸ் விரைவாக உரையூட்டப்படுவதால், உடனடி ஐஸ் கிரீம் சாத்தியப்படுகிறது. இந்த செயல் முறை மிகவும் வேகமவாக உள்ளதால், பாரம்பரிய ஐஸ்கிரீம்களை விட பனிக்கட்டி படிகங்கள் மிகவும் சிறியதாகவும் மென்மையான அமைப்பு கொண்டதாகவும் இருக்கும். "இந்த செயல்முறையில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப் படாதது, இத்தகைய ஐஸ் கிரீம்களை மேலும் சுவையுள்ளதாகவும், ஃப்ரெஷாகவும் அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் ஆக்குகிறது" என்கிறார் ரோகன்.

வளர்ச்சி

ஜூலை 2014 ஆம் ஆண்டு தனது முதல் நிலையத்தை திறந்தது முதற்கொண்டு வாடிக்கையாளர்களின் போற்றுதலை இவர்கள் பெற்றுள்ளனர். முதல் மாதத்திலேயே அவர்களின் செலவுகளை ஈடு கட்டும் அளவில் வர்த்தகம் இருந்தது. வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் இவர்களின் நிலையத்திற்கு வந்தனர், இவர்களின் ப்ரேத்யேக தயாரிப்புகளுக்கு தனி ரசிகர் வட்டமே உருவாகின.

"எந்த விதமான சந்தைப்படுத்தும் முயற்சியும் இல்லாமலேயே எங்களின் வளர்ச்சி சாத்தியமானது. சரியாக ஒரு வருடம் பின்னர் ஜூலை 2015 ஆம் ஆண்டு எங்களின் இரண்டாவது நிலையத்தை தொடங்கினோம். விரைவில் டெல்லியில் உள்ள மற்றொரு மாலில் எங்கள் நிலையத்தை தொடங்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது" என்கிறார் ரோகன்.

செயற்கை சுவையூட்டி சேர்க்கப்படாமல் செர்ரி காமட் நிலையங்களில் தற்பொழுது இருபது வகையான ஐஸ்கிரீம் உள்ளன. செயற்கை பொருட்கள் கலக்கப்படாத க்ரீம் நிறைந்த ஐஸ் கிரீம், மற்றும் இதன் தயாரிப்பு ஆகியவையே வாடிக்கையாளர்களின் திருப்திக்கான காரணமாக உள்ளது.

எதிர்கால திட்டம்

முதன் முறையாக இத்தகைய எண்ணத்தை செயல்வடிவம் கொடுத்துள்ளது, இந்த மூன்று பொறியாளர்களுக்கும் ஒரு சோதனை ஓட்டமாகவே அமைந்துள்ளது. முற்றிலும் சொந்த காசை கொண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் ஆரம்பித்துள்ளோம். கடந்த ஒன்றரை வருடங்களாக தளவாடங்கள் தொடர்பான சவால்களை நிவர்த்தி செய்துள்ளோம். மேலும் பல நிலையங்களை திறக்கும் திட்டமும் உள்ளது.

ஐஸ் கிரீம் கல்ச்சரை திரும்ப கொண்டு வருவதே எங்கள் எண்ணம். புது விதமான தயாரிப்புகளை சேர்ப்பதன் மூலம் ஐஸ்கிரீம் பற்றியான மக்களின் பார்வையை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறோம்.

இணையதள முகவரி: Cherry Comet