தங்கம் பாண்டுகள் தபால் நிலையங்களில் விற்பனை: மத்திய அரசு அறிவிப்பு! 

0

இந்திய அரசாங்கம், தங்கம் நாணயமாக்குதல் திட்டத்தின் கீழ் ’சவரன் கோல்ட் பாண்ட்ஸ்’ வெளியிட முடிவு செய்து அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள எல்லா தபால் நிலையங்களில் இன்று முதல் அதாவது 27/02 முதல் 3-ம் தேதி மார்ச் வரை பெறப்படும். பின்னர் பாண்டுகள் 17-ம் தேதி மார்ச் மாதம் வழங்கப்படும் என்று செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  

தங்க பாண்டுகளின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2893 என்று ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது. சவரண் தங்கம் கிராம்கள் அடிப்படையில் வகுக்கப்பட்டு, பாண்டுகளாக விற்கப்படும். குறைந்த இலக்காக ஒரு கிராம் தங்கத்தில் முதலீடு செய்யமுடியும். அதிகபட்சமாக, ஒருவர் 500 கிராம் அளவில் ஒரு ஆண்டிற்கு (ஏப்ரல்-மார்ச்) முதலீடு செய்யமுடியும். இதற்கான சுய உறுதி ஆவணம் பெறப்படும்.

மக்கள் உட்பட ஹிந்து அன்டிவைடட் ஃபேமிலி, ட்ரஸ்ட்கள், பல்கலைகழகங்கள், அறக்கட்டளை நிலையங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது குறைந்தகால சலுகை மட்டுமே என்பதால் தேவைப்படுவோர் விரைவில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.