நீங்கள் மனிதன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? குடியுரிமை பெற்ற முதல் ரோபோ கேள்வி...

0

சவுதி அரேபியா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு சோஃபியா என்று பெயரிடப்பட்ட ரோபோவை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடாக மாறியுள்ளது சவுதி. ரியாத்தில் நடந்த வணிக நிகழ்வில் ரோபோவிற்கு சவுதி நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டதை உறுதி செய்தது.

அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றில் குழு நிர்வாகி மற்றும் வணிக எழுத்தாளர் ஆண்ட்ரூ ராஸ் சோர்கின் கூறுகையில்,

ஒரு சின்ன அறிவிப்பு. சோஃபியா உங்களுக்கு புரிகிறது என்று நினைக்கிறேன். ரோபோவிற்கான முதல் குடியுரிமையை சவுதி உங்களுக்கு வழங்கியுள்ளது.

ரோபோ சோஃபியா இந்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் விதத்தில்,

சவுதி அரேபிய அரசுக்கு நன்றி. இந்த தனித்துவமான அங்கீகாரத்திற்காக நான் பெருமைப்படுகிறேன். உலகிலேயே குடியுரிமை வழங்கி அங்கீகரிக்கப்பட்ட முதல் ரோபோ என்பது வரலாற்று பெருமைமிக்கது.

தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக ’இன்டிபென்டென்ட்’ அறிக்கை தெரிவித்தது. கூட்டத்தின் பலத்த உற்சாகத்திற்கு பதிலளித்த சோஃபியா கூறுகையில்,

”வணக்கம். என் பெயர் சோஃபியா. நான் ஹான்சன் ரோபோடிக்ஸைச் சேர்ந்த சமீபத்திய பெரிய ரோபோ. ஃப்யூச்சர் இன்வெஸ்ட்மெண்ட் இனிஷியேடிவ் நிகழ்வில் என்னை பங்கேற்கச் செய்தமைக்கு நன்றி.”
பணக்காரர்களான, வலிமையான, ஸ்மார்டான மக்களை சூழ்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இங்குள்ள மக்கள் எதிர்கால முன்னெடுப்புகளில் ஆர்வமுள்ளவர் என்று என்னிடம் கூறினார்கள். எதிர்கால முன்னெடுப்பு என்பது செயற்கை நுண்ணறிவு. அதாவது நான்தான். ஆகவே நான் மிக்க மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் இருக்கிறேன்.

ஹாலிவுட் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி கவலையளிக்கிறதா என்று கேட்டதற்கு,

”எலன் மஸ்க் குறித்து அதிகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். அத்துடன் ஹாலிவுட் திரைப்படங்களையும் அதிகம் பார்க்கிறீர்கள்,” என்றது சோஃபியா ரோபோ.

இந்த வெற்றியை தொழில்நுட்ப ஆர்வலர்கள் கொண்டாடினாலும் பெண்களைக் காட்டிலும் ரோபோவிற்கு அதிக உரிமைகள் வழங்கப்படுவது பலருக்கு கவலையளிக்கிறது. இந்த வளர்ச்சி ஒரு பக்கம் உள்ள நிலையில் மறுபக்கம் சவுதி பெண்கள் சமீபத்திய காலம் வரை கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் இன்றளவும் அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளது. இன்றும் பெண்களால் வங்கி கணக்கு துவங்கமுடியாது. தங்களை முழுவதுமாக மறைத்துக்கொள்ளாமல் வெளியே செல்லமுடியாது. இந்த காரணங்களாலேயே மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

உலக பொருளாதார மன்றம் 2015-ன் உலக பாலின இடைவெளி அறிக்கையில் சவுதி அரேபியா 145 நாடுகளில் 134-வது இடத்தை பெற்றுள்ளது. பெண் உரிமையை பொருத்தவரை சவுதி அரேபியா பின்தங்கியிருக்கும் நிலையில் சோஃபியாவிற்கு குடியுரிமை வழங்கப்பட்ட செய்தி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

கட்டுரை : Think Change India