படிப்பைப் பாதியில் விட்டு ஸ்டார்ட்-அப் கனவை நோக்கிச் செல்லும் இளைஞர்களை ஊக்குவிக்கும் புதிய டிவி ஷோ ! 

1

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் பல திறமைகள் மற்றும் திறன்கள் வெளி வராமல் மூடிக் கிடக்கிறது. இது போன்ற திறமைகளை வெளி கொண்டு வரவே MTV Dropout Pvt Ltd. என புது நிகழ்ச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. ரகுராம் மற்றும் ராஜீவ் லக்ஷ்மன் என்ற பிரபலமான இரட்டையர்களே இது தொடங்கக் காரணமாகும். இந்நிகழ்ச்சியின் முதல் பதிவு ஜூலை 29, 2017-ல் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் தங்கள் படிப்பை அல்லது வேலையை பாதியிலே விட்டு தங்கள் கனவை தேடிச் சென்றவர்கள். 2000-க்கு மேலான இளைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தனர், அதில் 13 பேர் தேர்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்தது.

இது ஒரு சமூக பரிசோதனை ஆகும், அதாவது படிப்பையோ அல்லது வேலையை விட்டு, தங்களுக்கு பிடித்த கனவை தேடி செல்லும் போட்டியாளர்களின் நோக்கத்தை இந்நிகழ்ச்சி ஆவணப்படுத்தும். ஒரு தொழில்முனைவர் ஆக தேவையான பண்புகளை மெருகேற்றும் வகையாக இந்நிகழ்ச்சி அமையும். உலக தொலைக்காட்சி வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

'தொழில்முனைவர் ஆவது எப்படி'

கடந்த வாரம் இந்நிகழ்ச்சியின் முதல் சுற்று நடந்து முடிந்தது. அதாவது போட்டியாளர்கள் எவ்வாறு நேரம் மற்றும் வளத்தை மேலாண்மை செய்கிறார்கள் என்பதே முதல் சுற்றாகும். ஒரு அனுமானத்தின் படி பிறக்கும்போதே எவரும் தொழில்முனைவோருக்கான பண்புகளோடு பிறப்பதில்லை, ஆனால் ஒருவர் வெற்றிபெற்றால் முன்னேறுவதற்கு உதவக்கூடிய சில உள்ளார்ந்த திறன்களைக் அவர்கள் கொண்டிருப்பார். அதுபோல இந்நிகழ்ச்சியும் இளைஞர்களின் சிறந்த திறமைகளையும், உள்ளார்ந்த சிறந்த திறனையும் வெளி கொண்டுவரும்.

ஒரு தொழில்முனைவர் ஆக இதுவே வழி என்று தனித்துவமான முறை ஏதும் இல்லை. ஆனால் தொழில் தொடங்குவதற்கு முன்பு நாம் சிலவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களது தொழில் யோசனைக்கு உயிர் கொடுக்கவே இந்த மேடைக்கு வந்துள்ளனர். அதற்கு முதலில் தேவைப்படுவது, “சரியான மனப்போக்கு”. 

ஒரு தொழில்முனைவர் ஆவதற்கு முதலில் இதில் நிறைய ஆபத்து இருப்பதை அறிய வேண்டும் அடுத்து வெற்றி எளிதில் கிடைக்காது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு தொழில்முனைவரின் வாழ்க்கையில் தோல்வி ஒரு பகுதியாக அமையும், எனவே பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை.

ஒரு தொழில்முனைவோர் போல் சிந்திக்க, அவர்களிடமிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்!

ஒரு நல்ல வழிகாட்டியை கண்டுபிடிப்பதும், உங்கள் கனவை தொடர ஊக்குவிக்க ஒரு அனுபவமிக்கவரை தேர்ந்தெடுப்பதும்; ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான மிக முக்கியமான நடவடிக்கைகளுள் ஒன்று. இந்நிகழ்ச்சியிலும் கைத்தேர்ந்த சிறந்த தொழில்முனைவோர்கள் குழு பங்கேற்பாளர்களை வழிநடத்த உள்ளது. அதில் Droom.in நிறுவனர் சந்தீப் அகர்வால்; அனிஷா சிங்க் சி.இ.ஓ. மற்றும் இணை நிறுவனர் Mydala.com; அலோக் கெஜ்ரிவால், இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ, Games2win; மற்றும் ரகு ராம் மற்றும் ராஜீவ் லக்ஷ்மன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் 13 போட்டியாளர்கள் பலவிதமான போட்டிகளை சந்திப்பர். எல்லா போட்டியும் அவர்கள் திறன் மற்றும் திறமையை சோதிக்கும் வண்ணமாக அமையும். இதில் கொடுக்கப்படும் எல்லா டாஸ்க்கும் ஒரு நிறுவனம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை கொண்டே அமையும். இது கடுமையான போட்டியாகும், திறனை மட்டும் வைத்து இதில் முன்னேற முடியாது. போட்டியாளர்கள் தங்களது யோசனைகள் அல்லது கருத்துகளை பகுத்தாய்வு செய்து எது நடைமுறைக்கு ஏற்றது என்பதை அறிய வேண்டும். ஒரு நிறுவனத்தை தொடங்க பல ஆய்வு மற்றும் ஏற்பாடுகள் தேவை, யோசனை இருந்தால் மட்டும் போதாது.

வெற்றியை சார்ந்தது மட்டும் அல்ல 

தொழில்முனைப்பு என்பது நீங்கள் என்ன சிறப்பாக செய்கிறீர்கள் என்பது மட்டும் ஆல்ல உங்களை சுற்றி புத்திசாலியான சிறந்த வேலையாட்களை பொறுத்து அமையும். இந்நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி போட்டியாளர்கள் மார்க்கெட்டிங், கோடிங், வணிகத்தில் அனுபவம் போன்ற செயல்பாட்டுகளை கடந்தே வருவார்கள். அதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் குழுவாக பிரிந்து யாருடன் நிறுவனம் தொடங்கவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

தொழில் முனைவோர் வாழ்க்கை நிச்சயமாக ஒரு சிறந்த வாழ்க்கையே – நீங்களே உங்கள் முதலாளி, நீங்கள் கட்டமைக்கப்பட்ட விதிகள், உங்கள் நிறுவனம். ஆனால் அது சொல்வதை கேட்கும் அளவிற்கு இனிமையான பாதை அல்ல, அந்த இலக்கை நீங்கள் அடைய ஆபத்தான பாதையை கடந்து வர வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் MTV Dropout Pvt Ltd. நிகழ்ச்சி இளைஞர்களுக்கு இவை அனைத்தின் சுவையையும் காட்டும், மேலும் இந்த மேடையே அவர்கள் தங்கள் யோசனைகளை சோதனை செய்து பார்த்து நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் மற்றும் தங்கள் இலக்கை அடைய தேவையான படிகளை கற்றுக்கொடுக்கும்.

தமிழில் - மஹ்மூதா நௌஷின் 

Related Stories

Stories by YS TEAM TAMIL