இந்தியாவின் அடுத்த யூனிகார்னாக உருவாக விருப்பமா? டெக்30 2018 க்கு விண்ணப்பிக்கலாம் 

0

திறமை வாய்ந்த ஸ்டார்ட் அப்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு வெற்றியை தேடிக்கொள்வதற்கான இந்தியாவின் நன்கறியப்பட்ட மேடையாக டெக் 30 (TECH30) விளங்குகிறது. டெக் 30 நிறுவனங்கள் அண்டுதோறும் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த குழுவில் இடம் பெறுவது என்பது ஸ்டார்ட் அப்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடியதாக இருக்கும்.

கடந்த பல ஆண்டுகளாக யுவர்ஸ்டோரி, எண்ணற்ற ஸ்டார்ட் அப்களை ஆதரித்து வந்திருக்கிறது. டெக்30 ல் தேர்வாகி பிரகாசித்த நிறுவனங்களில் சில: பிரெச்ஜ்வொர்க்ஸ், மூன்பிராக், கேபில்லரி மற்றும் லிட்டில்லேப்ஸ். இன்று பிரெஷ்வொர்க்ஸ் நாட்டின் நன்கறியப்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

பில்லியன் டாலர் குழுவில் இணைய

கடந்த 8 ஆண்டுகளில் டெக்30 பட்டியலில் 240 ஸ்டார்ட் அப்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் மொத்தமாக பில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டியுள்ளன. இப்போது, நீங்களும் கூட, இந்த பிரத்யேக குழுவில் அங்கம் வகித்து உங்கள் ஸ்டார்ட் அப்பை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லலாம்.

டெக்30 பற்றி, இந்த பட்டியலில் இடம்பெற்று நிறுவனங்கள், இது தங்கள் வாழ்க்கையை மாற்றிய அனுபவம் தொடர்பாக, தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ:

@YourStoryCo ஸ்டார்ட் அப்களுக்கு தேவைப்படும் ஆற்றலாக இருக்கிறது. கடந்த ஆண்டு @WidelyHQ #tech30 உருவாக்கியதற்கு நன்றி. #tsparks @SharmaShradha @EmmanuelAmber- @anshulix
யூனோகாயின் #Tech30 ஸ்டார்ட் அப்பில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறது #tsparks 2017 - @YourStoryCo #BringingBitcoinToBillions. -@Unocoin
#tsparks நிகழ்ச்சியின் இன்னொரு அருமையான தினம். சிறப்பான விவாதம். எல்லாவற்றுக்கும் மேல் #Tech30- @rohinbhargava
வாழ்த்துக்கள் @innovaccer மற்றும் @QustnTech - இந்த 2 #Tech30 நிறுவங்களில் ஆதரிக்கும் தேவதையாக இருப்பதில் மகிழ்ச்சி. @YourStoryCo http://yourstory.com/2015/10/tech30-2015-top-30-startups/ …-@kpowerinfinity

டெக்30 போன்ற மேடையில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் தவிர, டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம், ஸ்டார்ட் அப் சூழலில் செயல்பட்டு கொண்டிருப்பவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பாகவும் அமையும். வழிகாட்டிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், துறை வல்லுனர்கள் உள்ளிட்டவர்களை சந்திக்கலாம். 

உங்களுக்கு கிடைக்கும் பலன்கள்;

• டெக்ஸ்பார்க்ஸ் 2018 நிகழ்ச்சி மூலம் உங்கள் ஸ்டார்ட் அப்பை உலகின் முன் வெளிப்படுத்துங்கள்.

• டெக்ஸ்பார்க்ஸ் மீடியா, முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், பங்குதாரர்களை சந்திக்கும் வாய்ப்பு.

• இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழலில் உள்ள முன்னணி வல்லுனர்கள் பங்கேற்கும் விவாதங்கள், ஊக்கம் தரும் உரைகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள், பயிலறங்குகள் மற்றும் ரவுண்ட் டேபிளில் முன்வரிசையில் இடம்பிடியுங்கள்.

• உங்கள் திட்ட முன்வடிவுகளுக்கு பரிசுகளை வெல்லலாம் (இது கடைசி நாளில் அறிவிக்கப்படும்).

டெக்ஸ்பார்க்ஸ் 2018 அக்டோபர் 5 மற்றும் 6 ம் தேதி பெங்களூருவில் தாஜ் யஷ்வந்த்பூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வழிமுறைக் பற்றி: 

தேர்வு முறை

ஒவ்வொரு ஆண்டும், மிகப்பெரிய பட்டியலில் இருந்து, உலகளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ள அருமையான 30 ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்கிறோம். கடந்த ஆண்டு மட்டும், டெக்30 ல் இடம்பெற விரும்பு 2,000 ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பித்தன. நீங்களும் கூட டெக் 30ல் அங்கம் வகிக்கலாம். ஸ்டார்ட் அப்கள் தேர்வு செய்யப்படும் அம்சங்கள்:

• பொருள் அல்லது சேவையில் புதுமை (தற்காப்புத்தன்மை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு )

• சந்தை வாய்ப்பு (இலக்கு வாடிக்கையாளர்கள், போட்டி, வளர்ச்சி வாய்ப்பு, லாபத்திற்கான பாதை)

• குழு ஆற்றல் (நிறுவனர்கள் பின்னணி. குழுவின் திறன்கள் மற்றும் அமைப்பு)

• வருவாய் மாதிரி (உருவாக்ககூடிய மதிப்பு, நிலைத்த தன்மை, லாப சாத்தியக்கூறுகள்).

• நிறுவன அல்லது சேவையின் வாழ்க்கை சக்கரம் (வாடிக்கையாளர் அறிதல், தயாரிப்பு வெர்ஷன், உருவாக்கும் காலம், ( மாற்றங்கள், மேம்பாடுகள்) விரிவாக்க திட்டம்)

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய புகழ்

இதில் இணைய விண்ணப்பிக்க 15 நிமிடங்கள் தான் ஆகும். செப்டம்பர் 12 வரை  விண்ணப்பிக்கலாம். .

யுவர்ஸ்டோரி குழு | தமிழில்;சைபர்சிம்மன்