சுபநிகழ்ச்சிகளில் தரப்படும் ரிட்டெர்ன் கிஃப்ட்ஸ் பிரிவில் அசத்தும் Wedtree

1

வீட்டு விசேஷங்கள் சிறியதோ பெரியதோ அந்த நிகழ்வை திட்டமிட செலவழிக்கும் அதே முனைப்பு, வருபவர்களுக்கு எந்த வகையான ரிட்டெர்ன் பரிசை அளிக்கலாம் என்ற திட்டமிடதலிலும் மேற்கொள்ளப்படுகிறது.

திருமணம் போன்ற பெரு நிகழ்வுகளுக்கு மட்டுமே வந்தவர்களுக்கு 'பரிசுகளை' திரும்ப அளிக்கும் காலம் மாறி இப்பொழுது பிறந்த நாள் முதல் நவராத்திரி என வருடம் முழுவதும் இதற்கான தேவை அதிகரித்திருப்பதே இந்த துறையின் வளர்சிக்கும் வித்துட்டள்ளது.  வளர்ந்து வரும் இந்தத் துறையில், தனது அஸ்திவாரத்தை பலமாக்கியுள்ளது சென்னையைச் சேர்ந்த தொழில்முன்முனை நிறுவனம் வெட்ட்ரீ Wedtree

ஆனந்த் மற்றும் பிருந்தா
ஆனந்த் மற்றும் பிருந்தா

துவக்கமும் வளர்சியும்

ஒன்பது வருடம் நிதித்துறை விற்பனை பிரிவில் அனுபவம் கொண்ட ஆனந்த் , அவர் மனைவி பிருந்தா இணைந்து நிகழ்ச்சிகளுக்கான பரிசுப் பொருட்கள் வணிகத்தை தொடங்கினர்.

”முப்பது விதமான பொருட்களுடன் துவங்கினோம். முதலில் சோர்ஸிங் முறையிலும் பின்னர் நாங்களாகவே சொந்தமாக வடிவமைக்க ஆரம்பித்தோம்,”

என்று ஆரம்பக் கட்டத்தை பற்றி பகிர்ந்தார் ஆனந்த். துவங்கிய மூன்றே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கின. இன்று வரை 25%க்கு மேல் ஆர்டர்கள் அங்கிருந்து தான் வருகிறது.

தற்போது 2500 வகையான பொருட்களை விற்பனை செய்யும் இத்தளத்தில் பாதிக்கு மேல் வகை வகையான கைப்பைகள் தான் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாம். பெரும்பாலும் கல்யாண நிகழ்வுக்கான ஆர்டர்கள் உள்ளதால் 2015 ஆண்டு முதல் மூகூர்த்த பத்திரிக்கை மற்றும் பட்ஷனங்கள ஆகியவற்றையும் சேர்த்தனர்.

ஆன்லைன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் சென்னை தி நகரில் ஷோரூம் ஒன்றையும் திறந்துள்ளது. இது வரை 15000த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்களின் பொருட்களை கொண்டு சேர்த்துள்ளதாகவும், 1500 புதிய வாடிக்கையாளர்களை மாதந்தோறும் பெற்று வருவதாகவும் கூறுகிறார் ஆனந்த்.

எதிர்காலத் திட்டம்

நவம்பர் 2016 ஆம் ஆண்டில் விஸ்தரிப்பிற்கான யுக்தியாய் பிரஷாந்தி சாரீஸ் நிறுவனத்தை வாங்கியது வெட்ட்ரீ. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பத்து முதல் பதினைந்து புதிய கடைகளை திறக்க திட்டமிடுள்ளதாக கூறுகிறார்.

இந்தியாவில் கிஃப்டிங் சந்தை கிட்டதிட்ட முப்பது பில்லியன் டாலர் என்ற அளவில் கணிக்கப்பட்டுள்ளது. இதில் நானூறு மில்லியன் டாலர் அளவுக்கு ஆன்லைன் வர்த்தகமாக இருக்கும். நிகழ்வுகளில் தாங்கள் தரும் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தங்களின் அந்தஸ்தையும் பிரதிபலிக்கும் என்பதால் இது கூடுதல் கவனமும் பெறுகிறது.

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Related Stories

Stories by Sandhya Raju