இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான சிறப்புத் திட்டம்!

1

நாடு முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் முகமாக, இ.எஸ்.ஐ கழகம் 'SPREE' எனப்படும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. SPREE திட்டம் இ.எஸ்.ஐ. சட்டம், 1948 ன் கீழ் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பதிவு செய்து கொள்ள ஏதுவாக 20, டிசம்பர், 2016 முதல் 31“ மார்ச், 2017 வரை நடப்பில் இருக்கும்.

இந்த ஒருமுறை சிறப்புத்திட்டம், ஏதேனும் காரணத்திற்காக இதுவரை இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அனைவருக்கும் சமூக பாதுகாப்பு பலன்கள் கிடைக்கப் பெறுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

SPREE திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

1. இந்தக் காலக்கெடுவில் பதிவு செய்யும் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது தங்கள் குறிப்பிடும் தேதியிலிருந்தோ இ.எஸ்.ஐ சட்டத்தின் கீழ் வருவதாகக் (Coverage) கருதப்படும்.

2. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து இ.எஸ்.ஐ சட்டத்தின் கீழ் வருவதாக்க் கருதப்படுவார்கள்.

3. SPREE திட்டம், 20, டிசம்பர் 2016க்கு முன்னர் இ.எஸ்.ஐ சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட / அவசியமான நடவடிக்கைகளை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

இ.எஸ்.ஐ கழகம், தங்கள் தொழிற்சாலைகள்/ நிறுவனங்கள் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களைப் பதிவு செய்ய இந்த ஒருமுறை வாய்ப்பைப் பயன்படுத்தி, எந்தவித அபராதமும் இன்றி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறது.