சிறுவர்களுக்கான ஆங்கிலத் திறன்பயிற்சியை எளிதாக்கும் "வோர்ட்ஸ்வொர்த் ப்ராஜெக்ட்" - இளம் மாணவியின் முயற்சி

0

ஆங்கில மொழியில் புலமை படைத்தவர்களை வோர்ஸ்வொர்த் "wordsworth" என்று கூறுவது வழக்கம். ஆங்கில திறனை மேம்படுத்தும் திட்டத்திற்கு வோர்ஸ்வொர்த் "Wordsworth" என்று பெயர் சூட்டியது மிகையில்லை. புது டில்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயிலும் வர்ஷா வர்க்ஹீஸ் கடந்த அக்டோபர் 2014 இல் வோர்ட்ஸ்வொர்த் திட்டத்தை தோற்றுவித்தார்.

தற்பொழுது யங் இந்தியா பெலோஷிப் (Young India Fellowship) மூலமாக தாராளவாத ஆய்வுகள் மற்றும் ஆளுமை பற்றி (Liberal studies and leadership) பயிலும் இவர் "எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம், என் கையிலுள்ள பணத்தில் பெரும் பகுதி புத்தகம் வாங்கவே செலவிடுவேன்" என்று கூறுகிறார்.


தனது பள்ளிப் படிப்பை துபாயில் முடித்த இவர் பட்டப்படிப்பு பயில புதுடில்லி வந்தார். "ஒரே குழந்தை என்பதால் மிகவும் சொகுசாகவே வளர்ந்தேன். எனக்கென்று தனித்தன்மையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது." கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும், மலையாள மொழியை தவிர வேறெந்த தொடர்பும் இவருக்கில்லை. ஐக்கிய அரபு நாடுகளில் குடியுரிமை பெற முடியாத காரணத்தால், அங்கிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் பிற நாட்டுக்கோ அல்லது இந்திய நாட்டிற்கு திரும்புதல் வழக்கம். இந்தியா செல்ல சரியான தருணம் அமைந்ததால், தாய் நாடு திரும்பவே ஆசைப்பட்டேன்" என்கிறார் வர்ஷா.

தாய்நாடு திரும்பிய அனுபவத்தை பற்றி வர்ஷா கூறுகையில் "துபாயில் நல்ல பள்ளியில் பயின்றாலும்,இந்தியாவில் இருக்கும் ஊக்குவிப்பிற்கு இணையாகாது. வாழ்க்கை மிகவும் வசதியாக இருப்பதால், பெரிய சவால்கள் ஏதுமின்றி இருந்தது. பள்ளிப் பருவத்தில் நான் சுட்டிப் பெண்ணாகவே இருந்தேன். மாணவர் குழுவின் தலைவராக இருந்தது பெரும் சாதனையாக கருதினேன். ஆனால் இங்கு எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் சாதனை படைத்தவர்களாக, மிகவும் புத்திசாலியாக இருப்பதை உணர்ந்தேன். மூன்று வருடத்திற்கும் மேலான டில்லி வாழ்க்கை என்னை நிறைய மெருகேற்றி உள்ளது.”

பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டிலேயே பொருளாதார படிப்பு தனக்கு ஏற்றதில்லை என்று தெரிந்து கொண்டார் வர்ஷா. "எனக்கு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியும் ஆர்வம் அறவே இல்லை என்று கூறும் வர்ஷா, மற்றவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியதாக கூறுகிறார். "Make a Difference" (MAD) என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து கல்வி கற்பித்தார். தனது கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே பல பேருக்கு பயிற்சியும் அளித்தார். இந்த தொண்டு நிறுவனத்தின் ஆங்கில திட்டத்தை வழி நடத்த ஆரம்பித்தார். இதன் மூலம் வார இறுதியில் ஆங்கிலம் கற்பித்தார்.

"கற்பித்தல் எனக்கு விருப்பமான துறையாக உணர்ந்தேன். MAD நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர்களுடன் பணி புரியும் சந்தர்ப்பம் இருந்தபோது, வயது ஒரு தடையில்லை என்று உணர்ந்தேன். என் வாழ்கையை வரையறுக்கும் தருணமாக இருந்தது" என்கிறார் வர்ஷா

ஒரு வகுப்பறையில் சில மணி நேர பயிற்சி கொடுப்பது பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்காது என்று வர்ஷா உணர்ந்தார். "எதை செய்தால் ஒரு பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்க முடியும் என்று சிந்திக்க தொடங்கியதாக கூறுகிறார்.

அவரின் அந்த தேடலுக்கு "மொழி" மட்டுமே சாத்தியமாக பட்டது. எந்த பாடத்தை பயின்றாலும் மொழியே பிரதானமாகிறது. வர்ஷா இதைப் பற்றி கூறுகையில் "நான்காம் வகுப்பில் நீங்கள் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்கினாலும் ஆங்கில புலமை இல்லையென்றால் மாணவர்கள் பொருள் தெரியாமல் பாடத்தை மனப்பாடம் தான் செய்ய வேண்டியிருக்கும்."

ஆங்கில மொழியும் அதன் சொற்றொடர்களும் வர்ஷாவின் மிகப் பெரிய பலம். அதில் மாணவர்கள் தடுமாற்றம் காண்பது வர்ஷாவிற்கு கடினமாக இருந்தது. இந்த சூழ்நிலையை களைய ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று எண்ணினார், "மொழி கொடுக்கும் தாக்கம் அந்த மொழியை விட வலிமையானது." என்கிறார் வர்ஷா.

ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்த காரணத்தை கூறும் அவர் "பெரும்பாலான இடங்களில் ஆங்கிலமே பயன்படுத்தப் படுகிறது. கீழ்நிலை குடும்பங்கள் கூட ஆங்கில வழிக் கல்வியில் பயின்றால் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் அமையும் என்று எண்ணுகின்றனர். வேற்று மொழியை சிறிது நேரமே பயிலும் மாணவர்கள் வீடு திரும்பியதும் தாய்மொழிக்கு மாறுவதால் ஆங்கில மொழி புரிதல் கடினமாகிறது"

"தொண்டு முயற்சியின் மூலமாக பெறப்படும் புத்தகங்கள் மற்றும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதில்லை. அவர்களின் விருப்பத்திற்கேற்ற புத்ததங்களை தெரிவு செய்வது மிக முக்கியமாகும். நாற்பது ரூபாயில் கூட புத்தகங்கள் வாங்க முடியும். இதைப் பற்றி ஓரளவு தெரிந்ததாலும் MAD இல் பணியாற்றிய அனுபவம் மூலமாகவும், கல்லூரி மாணவர்கள் இது போன்ற சேவையாற்ற முன்வருவர் என்று அறிந்திருந்தேன்." ஆனால் இந்த சேவையை தன் வாழ்நாளின் பிற்பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்று தான் நினைத்திருந்ததாக வர்ஷா கூறுகிறார்.

யங் இந்தியாபெலோஷிப்Young India Fellowhsip ல் லாபம் ஈட்டும் திட்டம் அல்லது சமுதாய நோக்கம் கொண்ட திட்ட செயல்வடிவம் கொடுப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. குறைந்தபட்சம் மூன்று பேர் கொண்ட குழுவாக, ஏதேனும் ஒரு தீம் மற்றும் யோசனையை சமர்ப்பிக்க வேண்டும். "நான் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க, பிரியங்கா என்னுடன் இணைந்து செயல்பட முன்வந்தார். அவளும் என் கல்லூரியை சார்ந்தவர் , ஏற்கனவே நூலகம் அமைக்கும் திட்டம் தொடங்கி அவர் நினைத்த படி அமையததால் அதை கைவிட நேர்ந்தது. ஒரு வருட முன் அனுபவமும், முதியோர் இல்லத்தில் தன்னார்வ தொண்டு அனுபவமும் பெற்ற ராகுல் எங்களுடன் இணைந்தார். அவர் எங்கள் அமைக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ள, நானும் பிரியங்காவும் திட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தினோம்" என்கிறார் வர்ஷா.

திட்டத்தை மேலும் வளர்க்க அவர்களுக்கு இடம் தேவைப்பட்டது. குடும்ப நிறுவனம் மற்றும் சமுதாய கூடம் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர். அக்டோபர் 2014ல் இவர்கள் முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தனர்.

"பெரும்பாலும் தன்னார்வ முறையில் நடத்தப்படும் திட்டங்களில், நடந்த செயல்பாடுகளை பதிவு செய்வது சவாலாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தன்னார்வ தொண்டில் ஈடுபடுபவர்கள் சில மணி நேரமே ஒதுக்க முடியும். இந்த குறைபாடு அறவே இருக்க கூடாது என்று முடிவு செய்தேன். "

முதலில் பீட்டர் ராப்பிட் (Peter Rabbit) என்ற புத்தகத்தை வாசித்தலுக்கு தேர்ந்தெடுத்தோம். ஆங்கில சொற்கள் புதிதாக அறிமுகம் செய்த போது அது கடினமாகவும் தாய்மொழிக்கு ஈடாக அது உட்கொள்ளப்பட்டதாலும், இந்த முயற்சி பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆதலால் மிக எளிதாக புரியும் வகையிலும் அதே சமயம் கற்பித்தலுக்கும் எளிதாக இருக்கும் புத்தகத்தை தெரிவு செய்ய முடிவெடுத்தோம். இதில் நானே நேரடியாக ஈடுபட்டு, மாணவர்களுக்கான சரியான புத்தகத்தை தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்" என்கிறார் வர்ஷா.

அவர் மேலும் கூறுகையில் "நிறைய மாணவர்களுக்கு அடிப்படை சொற்கள் தெரிந்திருந்தது. ஆனால் அர்த்தமுள்ள வாக்கியமாக சேர்ப்பதில் சிரமப்பட்டனர். "

வோர்ட்ஸ்வொர்த் திட்டத்தில் கற்பித்தலின் மூலம் முன்னேற்றத்தை அறிந்து கொள்ளும்படி வடிவமைத்துள்ளோம். தன்னார்வ தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு "ஆம்/ இல்லை " என்ற வகையில் கேள்விகள் கொடுக்கப்படும். உதாரணமாக "மாணவர்கள் வகுப்பில் தீவிரமாக பங்கேற்றார்களா?" , "வாசிப்புக்கான நேரத்தில், மாணவர்கள் அமைதியாக வாசித்தார்களா?" போன்ற கேள்விகள் இடம் பெற்றிருக்கும். 0 - 5 என்ற முன் வரையறுக்கப்பட்ட அளவுகோலின் மூலம் இந்த பணியில் ஈடுபடுவர்களை பாகுபாடின்றி மதிப்பீடு செய்கிறோம் என்கிறார் வர்ஷா

தன் எதிர்கால திட்டத்தை பற்றி பகிரும் வர்ஷா "ஒன்று அல்லது இரண்டு வருடம் டில்லியில் உள்ள கல்வி சார்ந்த நிறுவனத்தில் பணி புரிவேன். இது வோர்ட்ஸ்வொர்த் திட்டத்தை விரிவு படுத்த உதவும். கல்வியில் முதுகலை பட்டம் (திட்ட வேளாண்மை) படிக்க விருப்பம். பயணம், எழுத்து மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படவே எனக்கு ஆவல்" என்கிறார்.

"1. நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த நிலையான வருமானம் மற்றும் மானியம், நன்கொடை பெற வேண்டும். 

2) தற்பொழுது இருக்கும் செயல்முறையை மேம்படுத்தி, பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். புது மையங்களை உருவாக்கவும் ஆழமான முன்னேற்றம் அவசியம்.

3) வோர்ட்ஸ்வொர்த் திட்டத்தை அவரவர் இடங்களில் தொடங்க ஏதுவாக விரிவான தொடக்க உத்திகள் கொண்ட ஸ்டார்ட்டர் கிட் தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறது' என்று இந்த திட்டத்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் பற்றி வர்ஷா பட்டியலிடுகிறார்.