ஏன் நல்ல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள்?

4

ஒரு நிறுவனத்தை பொருத்தவரை நல்ல ஐடியாவை தேர்ந்தெடுத்து நிறுவனத்தை உருவாக்குவது, முதலீடு என்பதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது நல்ல குழுவை உருவாக்குவது. அது தான் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவும். குழு என்பது மனிதர்களால் ஆனது, ரோபோக்களால் அல்ல. இந்த மனிதர்கள் உணர்வுகளால் உருவானவர்கள். நாம் அவர்களிடம் என்ன சொல்கிறோம் என்பதைவிட அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதே பணியாளர்கள் நம்மிடம் நெருக்கமாவதை தீர்மானிக்கும். நாம் அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்தும், நடத்தும் விதமே அவர்கள் நீண்டநாட்கள் நிறுவனத்துடன் இருக்க விரும்புவதை தீர்மானிக்கும்.

ஒரு நிறுவனம் என்பது பல மேடு பள்ளங்களைக் கொண்டது. வேலை நெருக்கடி, பண நெருக்கடி போன்ற பலவற்றை சந்திக்க நேரிடும். அப்போதெல்லாம் பக்கபலமாக இருக்கப் போகிறவர்கள் பணியாளர்களே. அவர்கள் அப்போது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதே நிறுவனம் அடுத்தகட்டத்திற்கு செல் உதவும். எனவே பணியாளர்களோடு நேரம் செலவிடுவது முக்கியமான ஒன்றாகும். அவர்களது குறைகளை கேட்க அது உதவும். நெருக்கடியான சமயத்தில் அவர்களுக்கு அளிக்கும் நம்பிக்கை அவர்களை மேலும் உத்வேகத்தோடு பணியாற்ற உதவும். உங்களின் எண்ணம் கடைசி பணியாளர் வரை சென்று சேர வேண்டுமென்றால் அவர்களை அடிக்கடி சந்தித்து உரையாடுவது அவசியம்.

ஏன் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி அடிக்கடி சொல்லும் காரணங்கள் இரண்டு!

1) நிறுவனத்தில் இருக்கும் குழுவுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. இலக்கு இல்லை. நிறுவனம் ஏன் துவங்கப்பட்டது என்பது கூட தெரியவில்லை.

2) முதலீட்டாளர்களின் பணமெல்லாம் முடிந்துவிட்டது. சில மாதங்கள் தாக்குபிடித்து பார்த்தேன், எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. எனவே வெளியேறினேன்.

நேர்மறை அதிர்வுகள் 

நிறுவனத்திற்குள் எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்கள் இருப்பது ஒரு அதிர்வை உண்டாக்கும். உதாரணமாக எல்லோரும் சந்தோசமாக பேசிக்கொள்வது. ஒருவருக்கு ஒருவர் உதவுவது. இவையெல்லாம் ஒரு ஆக்க சக்தியை உருவாக்கும். நிறுவனத்திற்குள் சந்தோசமாக நுழைந்து, சந்தோசமாக வெளியேறும் ஒருவருக்கு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது. நிறுவனத்திற்கு பணம் மட்டுமே முதலீடு அல்ல. நல்ல பணியாளர்கள் இன்னொரு வகையான முதலீடு.

ஒரு முதலாளியாக அவர்கள் நம்மை பார்த்து பயந்து, பவ்யமாக இருப்பதைவிட நண்பர்களைப் போல அவர்களை நடத்துவது நல்ல பலனளிக்கும். அவர்கள் நம்மிடம் எதையும் தயங்காமல் பேச உதவும். உணர்வுரீதியாக நம்மோடு பிணைக்க இது உதவும். பணியாளர்களுக்கு அளிக்கும் மரியாதை, அவர்கள் மீது செலுத்தும் அக்கறை இவையெல்லாம் அவர்கள் நம்மோடு நெருக்கமாக்க உதவும். அவர்கள் பணியை முழு சுதந்திரத்தோடு செய்ய அனுமதித்தால், அவர்களின் முழு படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவர முடியும். அவர்களோடு நாம் நல்லவிதமாக இருந்தாலே போதும். நிறுவனத்திற்கு ஒரு மேஜிக் தானாவே நடக்கும்.

________________________________________________________________________

படிக்கவேண்டிய தொடர்பு கட்டுரை:

2016ல் எவ்வளவு செழிப்பாக இருக்கப் போகிறீர்கள்?

________________________________________________________________________

நல்ல பணியாளர்களை தொடர்ந்து தக்கவைக்க சில யோசனைகள்.

1) உங்களின் எதிர்பார்ப்பை பணியாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்: தங்களிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன, என்பதை குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் தெளிவாக உணர்ந்து கொண்டாலே போதும். அவரவர் தங்கள் பணியை சிறப்பாக செய்யத் துவங்கிவிடுவார்கள்.

2) ஒவ்வொன்றையும் அவர்களிடம் விளக்காதீர்கள்: பணியாளர்கள் மிகவும் திறமைசாலிகள். ஒவ்வொரு வேலையையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை. அவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் போதும். அவர்களே அதை திறம்பட முடித்துவைப்பார்கள். ஒவ்வொருமுறையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால் அது வீணான பிரச்சினையையே ஏற்படுத்தும்.

3) சின்னச்சின்ன விஷயங்களையும் கொண்டாடுங்கள்: நிறுவனத்திற்குள் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்க இது உதவும். கொண்டாட்டங்கள் நேர்மறை அதிர்வை உண்டாக்கும் என்பதால் பணியாளர்களை இது ஊக்குவிக்கும். எனவே இது நிறுவனத்தை மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

4) எல்லோருக்கும் வாய்ப்பளியுங்கள்: எல்லோர் எண்ணங்களுக்கும் மதிப்பளியுங்கள். அது சரியோ,தவறோ. உயர்ந்ததோ, தாழ்ந்ததோ. நாம் அவர்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோம் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். அவர்களே புதிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ள உதவுங்கள். அவர்கள் சுதந்திரமாக பணியாற்ற இது உதவும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இது உதவும்.

நிறுவனங்கள் தங்கள் சகநிறுவனர்களை எப்படி நடத்துவார்களோ, அது போலவே தங்கள் பணியாளர்களையும் நடத்தினால் போதும். நல்ல பணியாளர்கள் நீண்ட நாட்கள் இருப்பார்கள். வேறு எந்த நிறுவனத்திற்கு செல்வது பற்றியும் அவர்களுக்கு யோசனையே வராது.

ஆங்கிலத்தில் : Ashish Kumar | தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற தொழில்முனை நிறுவனங்களுக்குத் தேவையான குறிப்புகள வழங்கும் தொடர்பு கட்டுரைகள்:

நிறுவனர்கள் இடையே கூட்டு முயற்சிக்கே ஜனநாயகம் ஏற்றது; முடிவெடுக்க அல்ல!

சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து தொழில்முனைவர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?