ஸ்த்ரீ சக்தி: இமயமலை அடிவாரத்தின் கம்பளிக் குருவிகள்

0

மாற்றம், வீட்டில் இருந்து தான் துவங்கும் என்று சொல்வார்கள். சின்னி சுவாமிக்கும், உத்திராஞ்சலில் உள்ள புர்கல் கிராமத்தில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு அவர் ‘ஸ்த்ரீ சக்தி’ (Stree Sakthi)யை தொடங்கிய போது, உண்மையில் வீட்டில் இருந்து மாற்றம் துவங்கியது.

2001 ல் சின்னி சுவாமியும் அவரது கணவரும் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் எதாவது இடத்திற்கு சென்று வாழலாம் என யோசித்தார்கள். இதில் பலர் விரும்பும் இடங்கள் டெஹ்ராடூன் அல்லது முசௌரி பொன்ற மலைப் பிரதேசங்களாய் தான் இருக்கும். ஆனால், சுவாமி தம்பதியினர் முசௌரிக்கும், டெஹ்ராடூனிற்கும் இடையில் இருக்கும் புர்கல் கிராமத்தை தேர்ந்தெடுத்தனர். ‘புர்கல்’ கிராமத்தை வந்தடைந்த உடனே, சுவாமி,கிராமத்துக் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றை துவங்கினார். சின்னி, கிராமப் பெண்களுக்கு, தனக்கு தெரிந்த கைவினை கலையான கம்பளி செய்தலை அறிமுகப்படுத்த முடிவு செய்தார்.சில வருடங்கள் கழித்து, ‘ஸ்த்ரீ சக்தி’ மூலமாக உலகை அந்த கம்பளிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் நான் முதன்முறையாக ‘புர்கல்’ கிராமத்திற்கு சென்றேன்.அதைத் தொடர்ந்த ஒவ்வொரு வருடமும் இந்த துணிகர தன்னம்பிக்கையின் நிகழ்வை ஆதரிக்க சென்று கொண்டிருக்கிறேன்.இங்கே, சின்னி சுவாமியின் பிரமாதமான பயணத்தைப் பற்றிய உடையாடலில்.

அவருடைய எளிய தொடக்கத்தைப் பற்றி பேசும் பொழுது, “நான், எங்கள் கிராமத்தின் ஒரு ஏழைப் பெண்ணிற்கு உதவ நினைத்தேன்.எனக்கு தையல் வேலைகளில் ஆர்வம் அதிகம் இருந்ததால், இருவரும் சேர்ந்து ஒரு கம்பளி செய்தோம். அது பாராட்டப்பட்ட பின்னர் தான், கம்பளி செய்தலை கிராமப் பெண்களுக்கு ஒரு புராஜெக்டாக செய்யலாம் என்று முடிவு செய்தேன்”, என்கிறார் சின்னி சுவாமி.

இன்று ஸ்த்ரீ சக்தி, கம்பளி , தலையணை உறைகள், பைகள், துப்பட்டாக்கள் போன்றவைகளை உற்பத்தி செய்து, பெண்களை வலிமைப்படுத்தும், அரசு அங்கீகாரம் பெற்ற லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம். “எங்களுடைய சிறந்த தயாரிப்புகள் ஒட்டுவேலைப்பாடுகளும், ‘அப்லிக்’ கம்பளிகளும் தான்” என்கிறார் புன்னகையோடு.

ஒரு பெண்ணோடு துவங்கிய நிறுவனத்தில் இன்று நூற்றுமுப்பது பெண்கள் கொண்ட குழு இருக்கிறது. இதில் தயாரிப்புகளை உருவாக்குபவர்கள், வடிவமைப்பவர்கள், கணக்காளர்கள், கொள்முதல் மற்றும் விற்பனை பிரதிநிகள், விற்பனைக்கூட மேலாளர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், குவாலிட்டி கண்ட்ரோலர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அடக்கம். ஸ்த்ரீ சக்தி, தங்கள் தயாரிப்புகளை, புர்கலின் வுமன் செண்டரில் இருக்கும் கடை, ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் நடக்கும் கண்காட்சிகளின் மூலம் விற்பனை செய்கின்றனர்.


தொழில்முனைவும், சவால்களும்

ஒருபுறம் நிறுவனத்தின் வளர்ச்சி உயர்ந்துக் கொண்டே இருந்தாலும், தயாரிப்பிலும், சந்தையின் சீசன் பொறுத்த தேவைகளிலும் சில சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. "நாங்கள் ஒரு சீசனிற்கு ஏற்றார் போல் கணக்கு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டியிருக்கும். சில சமயம் தயாரிப்புகள் நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் கிடங்கில் கிடக்கும், இது எங்களுக்கான மூலதனத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது", என்கிறார் சின்னி.

ஸ்த்ரீ சக்தி சந்திக்கும் மற்றொரு சவால் பணப் பற்றாக்குறை. பணப் பற்றாக்குறை வியாபார அளவில் பெரிதாய் இல்லை எனினும், நலத்திட்டங்களில் அதிகமாகத் தான் இருக்கிறது என்கிறார் சின்னி. மேலும், இது குறித்து கூறும் அவர், “ நலத் திட்டங்கள் நிறுவனத்தின் முக்கியமான பங்கு. சில பெண்களுக்கு, பள்ளி செல்லாத சிறு குழந்தைகள் இருக்கின்றன. குழந்தைகளை நாங்கள் கவனித்துக் கொண்டால் தான் பெண்கள் நிம்மதியாக வேலை செய்ய முடியும்” என்கிறார். இதை தவிர, ஸ்த்ரீ சக்தி,பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ரீதியான ஆதரவையும் ஏற்பாடு செய்கிறது.


நெடும்பயணத்தின் மதிப்பு

இன்று, ஸ்த்ரீ சக்தி, ‘புர்கலை சுற்றியுள்ள பதினைந்து கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறது. இது, “ஒவ்வொரு மாதமும் பெண்கள் சம்பாதித்து வீட்டிற்கு பணம் கொண்டு போவதால், வீட்டில் அவர்களது மரியாதை கூடி இருக்கிறது, இதன் விளைவாக பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது” என்கிறார். பொரிளாதாரம் மற்றும், சமுகரீதியாக மட்டும் அல்லாமல், பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்து, பிறரோடு ஒன்றி இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கியதற்காக சின்னி பெருமிதம் கொள்கிறார்.

நான் முதன்முறையாக ‘புர்கல்’ சென்றபோது, அது ஒரு மிக நீண்ட பயணமாக தோன்றியது. டெல்லி வரை ஒரு விமானம், அங்கிருந்து டெஹ்ராடூனுக்கு ரயில், அங்கிருந்து ராஜ்பூர் எனும் ஒரு சிறு ஊருக்கு டேக்சி, இறுதியாக அங்கிருந்து ஒரு ஸ்கூல் பேருந்து என்னை ‘புர்கல்’ லுக்கு கொண்டு சென்றது. ஆனால், இந்த நிறுவனத்தின் தாக்கத்தால் பெண்கள், மற்றும் சிரித்து விளையாடும் குழந்தைகளையும், வண்ண வண்ண தயாரிப்புகளையும் பார்க்கும் பொழுது, இந்த நெடும்பயணம் இதற்கு தகுதியானது தான் என்று உணர்கிறேன் என மன திருப்தியுடன் முடிக்கிறார் சின்னி சுவாமி.

ஸ்த்ரீ சக்தி பற்றிய மேலும் தகவல்களுக்கு : http://www.purkalstreeshakti.org/