இளம் பெண்ணின் தொலைந்த அப்பாவை தேடித் தந்த ட்விட்டர் பதிவு!

0

செப்டம்பர் மாதம் 3-ம் தேதி தென் ஆப்ரிக்காவின் மிட்ரண்ட் பகுதியைச் சேர்ந்த Dlamini-Nkosi அவரது தந்தையின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அவரைத் தேடிக்கொண்டிருப்பதாக அதில் தெரிவித்திருந்தார் என்று ’டைம்ஸ் லைவ்’ தெரிவித்தது.

”நண்பர்களே, நான் என்னுடைய அப்பாவை தேடிவருகிறேன். நான் அவரை சந்திக்கவேண்டும். அவரைக் குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்காகவே மறுபதிவை வெளியிடுகிறேன். அவர் உங்களது அப்பாவாகவும் இருக்கலாம்,”

என்று @KatlehoMolai1 தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பதிவிட்டவுன் ட்விட்டர் துப்பறிவார்கள் சிலர் துப்புகளை வழங்கத் துவங்கினர். அவர் தனது அப்பாவைக் கண்டறிய அவை உதவியது. இந்தப் பதிவு இதுவரை 9,600-க்கும் அதிகமான முறை மறுபதிவிடப்பட்டது.

”மறுபதிவிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் என்னுடைய அப்பாவை கண்டுபிடித்துவிட்டேன். சிறிது நாட்களுக்குப் பிறகு அவரை சந்திக்க உள்ளேன். நன்றி Twitter.”

இவ்வாறு பதிவிட்டார். அவரது அப்பாவின் தற்போதைய வயது 70.

Nkosi தனது அப்பாவை கண்டறிவது எளிதாக இருக்கவில்லை. உதவிபுரிந்தவர்கள் மற்றும் முகம் தெரியாதவர்களும் எண்ணற்ற கேள்விகளை எழுப்பினர். அவரது தேடல் பல பிரச்சனைகளை எழுப்ப வாய்ப்புள்ளதாக சில ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

”உங்கள் அப்பாவிற்கு திருமணம் தாண்டிய உறவுக் காரணமாக குழந்தைகள் இருப்பது உங்களுக்கு தெரியவந்தால் நீங்கள் அவருடன் இணைந்து அந்த குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளும் சூழல் வரும். கற்பனை செய்து பாருங்கள்,” என்று பயனர் Nkosi-க்கு எழுதியிருந்தார். 

அதற்கு பதிலளித்த அவர், “நான் என் அம்மாவிற்கு ஒரே குழந்தை என்பதால் உடன்பிறந்தோரை அன்புடன் வரவேற்கிறேன்,” என்று பதிலளித்தார்.

Nkosi-ன் அம்மா, அப்பாவை ஒரு சந்திப்பிற்கு அழைத்துள்ளதாக தெரிவித்தார், மேலும் அவர்கள் அவரை சந்திப்பதில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL