நவீன உலகில் மாற்றாக உலவும் ஷிவிகா சின்ஹா

நவீன உலகில் மாறாக உளவும் ஷிவிகா சின்ஹா

0

ஷிவிகா சின்ஹா என்னும் இசைக்கலந்த பெயர் பல்லக்கை குறிக்கிறது. "இதன் பொருள் பொருத்தமற்றதாக எனக்கு இருக்கிறது, இருப்பினும் சிவன் மற்றும் படைப்புள்ள உணர்ச்சிகளுக்கிடையே உள்ள இணைப்பு, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

இந்த உரையாடலில் அவருடைய கண் கவரும் ஞானத்தைப் பற்றி அறியப் போகிறோம். நிறுவன வாழ்க்கையில் சுட்டியாக இருந்தாலும், பெரிய ஃபேஷன் நிறுவனத்திற்கு சமூக ஊடக பணியில் உள்ளார். படைப்பாற்றலும், கலைநயமிக்க பார்வையும் தான் இவரை ஆள்கிறது. அழகாக இருக்கும் இவர், தன் நாடோடி சிறுவயது வாழ்கையைப் பற்றியும், கலை மீதான காதலைப் பற்றியும் இந்த பதிவில் கூறுகிறார்.

என்னுடைய வளர்ப்பு மிகவும் உலகளாவியதாக இருந்தது. என் போன்று வாழும் குழந்தைகளை மட்டுமே பார்த்து வாழ்ந்ததால் எதை பற்றியும் சிந்தித்ததில்லை, எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன்.

ஆனால், அந்த தொடர் இடமாற்றம் என்னிடம் ஒரு உண்மையான மனித உணர்வை வளர்த்தது. மனிதர்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளின் காரணங்களை உணர்ந்தேன்.

ஆப்பிரிக்காவில் உள்ள என் நண்பர்களும் அதே நோக்கங்கள், நம்பிக்கை, கனவுகளோடு இருந்தனர். வியட்நாம், வங்காளம், இந்தியா, அமெரிக்க நாடுகளின் மக்கள் பெற்ற மகிழ்ச்சியை தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தனர்.

இரண்டு வயதாகும் போது இந்தியாவை விட்டு சென்றேன். நைஜீரியா, ஜிம்பாப்வே, வியட்நாம் மற்றும் வங்காளம் ஆகிய இடங்களில் குழந்தை பருவத்தைக் கழித்தேன். நியூயார்க் மன்ஹாட்டென்வில் காலேஜில் இளங்கலை பட்டம் வாங்குவதற்கு முன்னர், இந்தியாவின் இமாலயத்தில் உறைவிட பள்ளியில் படித்தார். பின்னர், ஒரு வருடத்திற்கு, நடன கலைஞராக மன்ஹாட்டனில் வேலை செய்தார். அங்கிருந்து மேற்படிப்பிற்காக நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், சிகாகோவிற்கு சென்றார்.

பல்வேறு தொழில்கள் மனதில் இருந்தாலும், நடன கலைஞராக இருப்பதே இவருக்கு ஆர்வமாக இருந்தது. மக்களுக்கு முன் மேடையில் நடனம் ஆடுவதே ஒரு கனவாக இருந்தது. இன்றைக்கும், மார்கெட்டிங் செய்வதற்கான காரணம் அதுவே. இது அனைத்தும் எதில் முடியும் என்று தெரியவில்லை.

இளங்கலை பட்டத்திற்கு, கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார். உடனே மேற்படிப்புற்கு செல்லாமல், எனக்கு பிடித்த நடனத்தை ஒரு வருடத்திற்கு ஆடினேன்.

இப்போது, இன்டர்மிக்ஸ் என்னும் நிறுவனத்திற்கு, விற்பனை அதிகரித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவி செய்து பணிபுரிகிறேன். பெரிய வடிவமைப்பு நிறுவனங்களுக்கு வேலை பார்ப்பதால், புது எண்ணங்களும், பகுப்பாய்வும் செய்ய முடிகிறது. என் வாழ்க்கையின் வரை வடிவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். சந்தைப்படுத்தல் துறையில் ஆரம்பித்த போது, பத்திரிகை வெளியிடுதல் முதல் யுனிசெஃப் நிறுவனத்திற்காக இலாபமில்லா வேலையையும் பார்த்து விட்டேன். இப்போது சில்லரை வணிகத்தில் இருக்கிறேன். கலைஞராக இருப்பதால், பல அனுபவங்கள் இருக்கின்றது.

ஏணியில் ஏறுவது பொறுத்தவரை, இருபதுகளிலேயே நன்றாக உழைத்து விடுங்கள். இடர்களை சந்தியுங்கள், ஆர்வமாக இருக்க வேண்டும். "பசியுடன் இரு", என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது போல் தொடர்ந்து கற்பிப்பதும், கேள்வி எழுப்புவதும், மக்களிடம் பேசுவதும் செய்ய வேண்டும்.

சமூக மூலதனத்தை என்றைக்கும் குறைவாக எண்ணாதீர்கள். இருபதில் உழைத்ததிற்கு, ஐந்திலிருந்து பத்தாண்டிற்குள் பலன்கள் தேடி வரும். முயற்சி செய்யாவிட்டால், வருத்தப்பட வேண்டிய நிலை வரும்.

முப்பதிலும், நாற்பதிலும், முடிவெடுப்பது மிகவும் கடினம். அன்றைக்கு ஒரு ஆண்டு இடைவெளி விட்டு நடனம் செய்து பின்னர் இந்த வேலைக்கு சேர முடிவு எடுக்கவில்லை என்றால், இன்றைக்கு வருத்தப்பட்டிருப்பேன்.

சந்தைப்படுத்தல் என்பது இன்றைய காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அதுவே என்னுடைய லட்சியம். என்னுடைய மற்றொரு லட்சியம், என் திறனை முழுமையாக உபயோகப்படுத்துதல்.

இந்த வருடம், என் நிறுவனப் பெயரை வளர்ப்பதும், வருவாயை அதிகரிப்பதும் மட்டுமே. அதை நோக்கி, பல திட்டங்கள் செய்து விட்டேன்.

என்னுடைய ஆர்வமே, நான் வடிவமைப்பு துறைக்கு வந்ததற்கான காரணம். ஒரு சில வருடத்திலேயே, இதற்கான பாராட்டையும் பெற்றேன். பெண்ணுக்கும் வடிவமைப்புக்கும் தொடர்பு உண்டு. ஒரு பெண், கண் கவரும் வகையில் ஆடை அணிந்து பார்ப்பவர்களை திக்குமுக்காடச் செய்வாள். தினத்திற்கு ஏற்றவாறு ஆடை அடையும் பெண் அந்நாள் சொல்ல நினைப்பதை தன் உடையின் மூலம் சொல்லி ஒரு அழுத்தத்தை ஏற்படுத்திவிடுவாள்.

என் தனிப்பட்ட பாணி சில ஆண்டுகளில் மாறிவிட்டது. நான் வேலை செய்யும் பாணி, முறையாக இருக்கிறது. வழக்கமாக, உறை உடையும், உயர்ந்த காலணியும் அணிவேன். இல்லையெனில், நல்ல காற்சட்டையும் அதற்கேற்ப ஜாக்கெட் மற்றும் சட்டையையும் அணிவேன். எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்! வார இறுதியில், வண்ணமயமான உடைகளை அணிவேன்.

அணிகலன்களும் எளிமையாகவே அணிவேன். ஒரு உன்னதமான கடிகாரம் அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும். வண்ணமிக்க காதணிகளும் என்னிடம் இருக்கும்.

கல் ரத்தினம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனுடைய நிறமும், அழகும் எனக்கு ஆர்வமூட்டுகிறது.

வேலை இல்லா நேரம், பல்வேறு பின்பற்ற வேண்டிய படைப்புகளை தேடுவேன். நான் பயிற்சி பெற்ற கலைஞர் அதிகமாக ஓவியம் வரைவேன். இன்னும், நடனத்தில் ஆர்வம் இருக்கிறது. வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவேன்.

நடனம் ஆடும் காலத்தில் கடுமையான பின்தண்டு பிரச்சனையிலிருந்து வெளிவருவதே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. இனி என்னால் சுதந்திரமாக இருக்க முடியாது என்று மருத்துவர் கூறினார். ஆனால், என் விடா முயற்சி என்னை உற்சாகப்படுத்தியது, மனமும் திடமாகியது.

தோல்வி என்பதே எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தது. பல்வேறு இடர்களைச் சந்தித்து, புதிய விஷயங்களில் சாதித்தேன். என் வெற்றியிலிருந்து அதிகமாக கற்றுக்கொள்ளவில்லை அதை கொண்டாடினேன். ஆனால், தோல்வியே எனக்கு நம்பிக்கையும், வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்தது. சில வருடங்களுக்கு பின்னர், நடனம் செய்ய மீண்டும் தொடங்கினேன்.

இளைய சமூகத்திற்கு ஆலோசனை கொடுக்க முடிந்தால், என்னை நானே ரசிப்பேன். என் உடலினல் பேச்சை வலியிருந்த போது கேட்டேன். ஓய்வு நேரம் பல எடுத்திக்கொள்வேன். இருபதிலிருந்து தொடங்கிய கடின உழைப்பு, இன்று வரையில் நிலைத்திருக்கிறது. ஆனால், அதனிடையே சமநிலை கொண்டு வர வேண்டும்.

பெரிய திட்டங்கள் சிறிதாக நொருங்கிவிடும். தினசரி நல்ல பழக்கம் பின்பற்றுவது நீண்ட தூர பயணத்தில் உபயோகமாக இருக்கும்.

உங்களுக்கு நீங்களே உண்மையாக இருப்பதே மகிழ்ச்சிக்கான இரகசியம். இது கேட்க எளிது, ஆனால் பின்பற்றுவது கடினம். நாம் பல்வேறு கடமைகளும், அழுத்தங்களும் சமாளிக்க வேண்டும். இதனிடையே தைரியமாக முன் வருவதே மகிழ்ச்சிக்கான இரகசியம்.