'கிரேவாட்டர்' - உங்கள் தண்ணீரை பாதுகாக்கும்!

0

அருண் துபே ரூர்கி ஐ.ஐ.டியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஒரு மருந்துக் கம்பெனியில் வேலை செய்தார். பொது மருந்துகள் தயாரிப்பில் ஆய்வுப் பணி மற்றும் புதிய தொழில் நுட்பத்தை வளர்த்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டார். இதற்கிடையில் பிரத்யேகமான ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பாசியில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார். கிளீன் டெக்னாலஜி எனப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத சுத்தமான தொழில்நுட்பம் அப்போதுதான் முதன் முதலாக அவருக்கு அறிமுகமானது. அதுதான் அவருக்கு நிலையான தொழில் ஒன்றையும் அறிமுகப்படுத்தியது. ஸ்டான்ஃபோர்ட்டில் எம்பிஏவை முடித்து விட்டு மெக்கின்சி அன்ட் கோ நிறுவனத்தில் சிறிது காலம் பணி புரிந்தார். அது சோலார் நிறுவனங்களோடு தொடர்புடைய ஒரு நிறுவனம்.

“அப்போதுதான் நான் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் (sewage treatment plants [STP] –எஸ்டிபி) தொடர்பாக யோசிக்க ஆரம்பித்தேன்” என்கிறார் துபே.

இந்திய நகரங்களின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில் இதுதான் என சட்டனெ அவருக்குப் பட்டது. உடனடியாக அது தொடர்பான திட்டமும் கனவும் செயல்வடிவுக்கு வந்தது. துபே இந்தியாவுக்கு வந்தார். 2010 அக்டோபரில் நெக்சஸ் வென்ச்சர் பார்ட்னரின் ( Nexus Venture Partner) கீழ் உருவாகிய "கிரேவாட்டர் " (Grey Water) நிறுவனத்தில் சேர்ந்தார்.

இன்று அவர் அந்த நிறுவனத்தின் இயக்குனராக, நிறுவனத்தின் செயல்திட்டம், வர்த்தக வளர்ச்சி, நிதி போன்ற விஷயங்களைக் கையாள்கிறார். பரவலாக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான, நம்பகமான , செலவு குறைந்த தானியங்கி பிளக் அன் பிளே (automatic plug & play products) உபகரணங்களை கிரேவாட்டர் தயாரிக்கிறது.

“இந்தக் கருத்தாக்கத்தை செழுமைப்படுத்த விரும்பினேன். ஏனெனில் இந்திய நகரங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அத்தியாவசியத் தேவையை கிரே வாட்டர் நிறுவனம் மூலம் நாங்கள் கையாள்கிறோம். கழிவு நீரை நிர்வகித்தல், குறைந்த செலவில் தண்ணீரை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஆகியவற்றை மேற்கொள்கிறோம். ஒருபுறம் நகரமயமாக்கல் அதிகரிப்பு, மற்றொருபுறம் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நகராட்சிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கள் தயாரிப்பு காலத்தின் கட்டாயம். கழிவு நீர் தேக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பது மட்டுமல்ல, நமது வாடிக்கையாளர்களுக்கு 10ல் ஒரு பங்கு செலவில் தண்ணீரை மறுபயன்பாட்டுக்கு ஏற்றார்போல் மாற்றுகிறோம்.” என்கிறார் துபே

கிரேவாட்டரின் பணியாளர் குழுவிற்கு நல்ல தொழில் அனுபவம் இருக்கிறது. தொழில் நுட்பத்திலும் அதன் இயங்குமுறையிலும் ஏதேனும் புதிதாக வந்தாலும் அதனோடும் அவர்களால் பொருந்திக் கொள்ள முடியும். திரு. சுனில் டுப்பே(சிஇஓ) திரு.ராஜேஷ் நாயர்(இயக்குனர், விற்பனை) மற்றும் திரு.சச்சின் பர்தேசி (செயல் தலைவர் - Head of Operations) ஆகிய மூவரும் நிறுவனத்தின் மூளையாகச் செயல்படக் கூடியவர்கள். இவர்கள்தான் நிறுவனத்தின் அடிப்படைக் குழு. அபாரமான 108 ஆண்டு அனுபவத்தை கூட்டாக தன்னகத்தே கொண்டவர்கள்.

“கட்டமைக்கப்பட்ட மற்றும் முற்றிலும் தானியங்கி வடிவமைப்பு, சுத்திகரிக்கப்பட்ட மறுபயன்பாட்டுக்கு பயன்படும் தண்ணீர், குறைந்த வாழ்க்கை சுழற்சி செலவுக்க்கான (எந்திரத்தைப் பொருத்துதல் மற்றும் பராமரிப்பில் குறைந்த செலவுக்கான ) உத்தரவாதம், இந்தியா முழுவதிலுமுள்ள சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதலைப் பெற்றிருப்பது முக்கிய அம்சமாகும்” என்கிறார் துபே.

“மின்கட்டணத்திலும், எந்திர இயக்கம் மற்றும் பராமரிப்பிலும் 50% தள்ளுபடிக்கு உத்தரவாதம் உண்டு” என்கிறார் அவர். “எங்கள் தயாரிப்பு அதன் கடைசி நுகர்வோருக்கு கணிசமான சேமிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது தவிர எங்களது எந்திரங்களில் சில தனித்தன்மைகள் உண்டு. தண்ணீர் வரத்து எப்படி இருந்தாலும் அதைக் கையாளும் தன்மை உண்டு. கிரேவா-ஆர்எஸ் (GREWA-RS), தண்ணீர் வரத்தில் உள்ள மாறுபாடுகளை உணர்ந்து, அதற்கேற்றவாறு தானாகவே தன்னை மாற்றிக் கொண்டு சுயமாக இயங்கக் கூடியது. இந்த அம்சம் இந்தியாவில் வேறு எந்த தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரத்திலும் (sewage treatment plants [STP] –எஸ்டிபி) இல்லை” என்கிறார் துபே.

கிரேவாட்டர் நிறுவனத்திற்கு உள்ள ஒரே சவால் அல்லது தடை சமூகத்தில் கழிவு நீர் அபாயம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததுதான். துபேவின் அனுபவத்தில் பாரம்பரிய தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்தான் பெரும்பாலும் நிறுவப்படுகின்றன. அதன்மூலம் குறிப்பிட்ட வளாகத்தில் பொருத்துவதற்கான சான்றிதழைப் பெற முடிகிறது.

எனினும், தூய்மையான தண்ணீருக்குப் பற்றாக்குறை, அதிகரிக்கும் செலவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்தல் போன்ற காரணங்களால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி விட்டதாகச் சொல்கிறார் துபே.

"மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளி விபரப்படி, இந்தியாவின் முதல் தர நகரங்களில் (Tier-1 cities) 32 % கழிவு நீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட நகரங்களில் (Tier-2 cities) 9 % தான் சுத்திகரிக்கப்படுகிறது. இப்படியே போனால், 2018ல் நாளொன்றுக்கு 24 ஆயிரம் மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் இருக்கும். இதனால் நமது நகரங்களில் ஆரோக்கியக் குறைவு, சுற்றுச் சூழல் மாசு ஏற்படும். பல வகையான தொற்று நோய்கள் வராமல் தடுக்க நாடு முழுவதும் பரவலாக தண்ணீர் சுத்திகரிப்பு எந்திங்களை நிறுவுவதுதான் ஒரே வழி." என்கிறார் அவர்.

இப்படித்தான் கிரேவாட்டர் தொழில்நுட்பம் உருவானது. “கட்டிடங்களில் நீங்கள் பார்க்கும் டீசல் ஜெனரேட்டர்களைப் போல, எங்கள் உச்சபட்சமான பொறியியல் கண்டுபிடிப்பின் மூலம் நாங்கள் அந்த எந்திரங்களை உருவாக்குகிறோம். எங்கள் எந்திரங்கள் கச்சிதமான 'ஒற்றைத் தொட்டி முறையை'க் (single tank system) கொண்டவை. செயல்பாட்டிலும் சிக்கனத்திலும் சிறந்தவை. இதற்கு அற்பணிப்பு மிக்க ஆப்பரேட்டரெல்லாம் தேவை இல்லை. தண்ணீர் வரத்து எப்படி இருந்தாலும் அதைக் கையாளும் திறன் கொண்டவை எங்கள் எந்திரங்கள். அதில் சத்தம் வராது. துர்நாற்றம் இருக்காது. எந்திரத்தை இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே நிறுவிவிடலாம்.” என்கிறார் துபே.

இந்த வருடம் நெட்டெல் (இந்தியா) -Netel (India)- எனும் நிறுவனம் கிரேவாட்டருடன் பங்குதாரராக வந்து சேர்ந்திருக்கிறது. சுற்றுச்சூழல்சார் தயாரிப்புகள் மற்றும் அதுதொடர்பான சேவைகளில் முன்னணி நிறுவனம் இது.

"அவர்களால் தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்குக் கொண்டு சேர்க்க முடியும். கிரேவாட்டர் தராமான தயாரிப்பை உடையது. இந்த ஒற்றுமை வெளிப்படையானது. மிகவும் முக்கியமாக, நுகர்வோரை மனதில் கொண்டு நாங்கள் செயல்படுவதால், அவர்களால் எங்களது தயாரிப்பை எளிதாக சந்தைக்கு கொண்டு சென்று, தேவைப்படும் நுகர்வோருக்கு சென்று சேர்க்க முடிகிறது.

பாரம்பரியமாக தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளூர் மட்டத்தில் யாரேனும் ஒரு தனி நபருக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம்தான் பெரும்பாலும் விற்பனை செய்யப்பட்டுகின்றன. ஒவ்வொரு எந்திரமும் உதிரிபாகங்களாகக் கொடுக்கப்பட்டு, விற்பனையாளர்தான் அதைப் பெரும்பாலும் பொருத்தி நிறுவுவார். எங்கள் நோக்கம் தரமான பொருளை தரமான வழியில் விற்பனை செய்வதுதான். நிட்டில் எங்களது தரமான கிரேவா-ஆர்எஸ்(GREWA-RS)ஐ கடைசிக் கட்டத்தில் உள்ள நுகர்வோருக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும். இது இந்தியா முழுவதும் எங்கள் தயாரிப்பைக் கொண்டு செல்ல உதவும். இந்தக் கூட்டணி பரஸ்பரம் இருதரப்புக்கும் பயன்தரக் கூடியது. எனவே தொழில்துறையானது இந்த மாதிரியை அப்படியே நகலெடுத்துப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்." என்கிறார் துபே.

மற்ற போட்டி ஜாம்பவான்களை விட, கிரேவாட்டர் ஆரம்பித்ததில் இருந்தே வெற்றிகரமாக இயங்கி வருகிறது. டெல், கிளப்மகிந்திரா, பிபிசிஎல் மற்றும் வாத்வா பில்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் கிரேவாட்டரின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள். 

எல்லா நகரத்திலும் கிரேவாட்டர் அவசியம் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்வதுதான் அதன் இப்போதைய நோக்கம். தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், தண்ணீர் சுத்திகரிப்பு என்பது இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும்(கிராமப்புறப் பகுதிகளில் கூட) கிட்டத்தட்ட நடைமுறைக்கு வந்து விடும். கிரேவாட்டர் மற்றும் அது போன்ற நிறுவனங்கள் அவர்களின் வேலையைக் குறைத்திருக்கிறது. எனினும் இந்தப் பயணத்தில் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.