உலகில் பணக்கார நாடுகள் பட்டியல்: இந்தியா 7ஆவது இடத்தை பிடித்து முன்னேற்றம்!

0

இந்தியா உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில், முதல் 10 இடத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. தனிப்பட்ட சொத்து மதிப்பாக 5,600 பில்லியன் டாலர்கள் கொண்டு இந்தியா 7 ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

'நியு வோர்ல்ட் வெல்த்' (New World Wealth) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலக செல்வந்தர் நாடுகள் பட்டியலில், கனடா ($4,700 பில்லியன்) நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா ($4,500 பில்லியன்) பெற்று எட்டாம் இடத்திலும், இத்தாலி ($4,400 பில்லியன்) ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. தனிப்பட்ட செல்வச்செழிப்பு மொத்த மதிப்பில், அமெரிக்கா ($48,900 பில்லியன்) கொண்டு, உலகின் அதிக செல்வந்தர் நாடாக முதல் இடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது. சீனா இரண்டாம் இடத்தில் 17,400 பில்லியன் டாலர் செல்வத்துடனும், ஜப்பான் 15,100 பில்லியன் டாலர் செல்வத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள மற்ற நாடுகள்: 4ஆவது இடத்தில் யுனைடெட் கிங்க்டம்- 9,200 பில்லியன் டாலர், ஜெர்மனி- 9100பில்லியன் டாலர் பெற்று 5ஆம் இடம் மற்றும் பிரான்சு- 6ஆம் இடத்தில் 6,660 பில்லியன் டாலர் செல்வத்துடன் பட்டியலில் உள்ளது. இதில் சொத்தின் மதிப்பு என்பது ஒருவரது நிகர சொத்து மதிப்பாகும். அதாவது சொத்துக்கள்- இடம், பணம், தொழில் வாய்ப்புகளின் மதிப்பு, இதிலிருந்து கடன்பாடு கழிக்கப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது. அரசு நிதி இந்த கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முதல் 10 இடத்தில் வந்ததற்கு முக்கியக் காரணமே அதன் அதிகமான மக்கள் தொகை ஆகும். 

"ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா திடமான வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா கடந்த 12 மாத காலத்தில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது," என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, தனிநபர்கள் கொண்டுள்ள தனிப்பட்ட சொத்து மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்ட போது, 20 பணக்கார நாடுகளில் இந்தியா 10ஆவது இடத்தில் இருந்தது. இந்தியாவில்  தனிநபர் சொத்து மதிப்பு, 2000 ஆம் ஆண்டு இருந்த 900டாலர் என்பதில் இருந்து 2015 இல் 2800 டாலர்களாக உயர்ந்துள்ளது. 2015இல் 211 சதவீதம் உயர்வை இந்தியா கண்டுள்ளது. 

நன்றி: பிடிஐ