ஒரு லட்சம் சுய முதலீட்டில் தொடங்கி 100 கோடி வரை: மிராவ் நிறுவன பயணம்!

4

நாம் துவங்கும் நிறுவனத்திற்கு நம் கைகளில் இருந்து முதலீடு போடுவது எளிதான காரியமாக இருக்காது. ஆனால் அவ்வாறு செய்வதே சரியான காரியமாக இருக்கும். அலகு பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துவது தொழிலில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் ஆனால் வளர்ச்சி என்பது வேகமாக இராது. கடினமான நேரங்கள் போக மற்ற வேளைகளில் மாதா மாதம், 20 சதவித வளர்ச்சி கண்டுள்ளோம். இந்த வளர்ச்சி நம்பத்தகுந்த முறையிலும் உண்மையானதாகவும் இருக்கும்.

2011இல் ஒரு லட்சம் ரூபாய் நிறுவனத்தில் முதலீடு செய்து துவக்கினோம். முதலில் நகைகளை தேர்வு செய்து அதனுள் ஆழமாக பயணித்தோம். ஒரு வருடம் இவ்வாறான பயணத்திற்குப் பிறகு, அதே வாடிக்கையாளரை குறிவைத்து, சேலை, சல்வார், மற்ற பாரம்பரிய உடைகள் என விற்பனையை விரிவு செய்தோம். கிடைக்கும் லாபங்கள், அடுத்த மாத கடை விளம்பரத்திற்காக உபயோகித்தோம். இம்முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றி, எங்களை நான்கு ஆண்டுகளாக பயணிக்க வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டை நாங்கள் 100 கோடி என்ற வருவாய் மதிப்போடு நிறைவு செய்ய உள்ளோம்.

எனவே எங்கள் முடிவு சரியா தவறா என தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு செயல்பட்டுள்ளது.

anoop nair
anoop nair

செலவுகளை குறைத்தல்

ஆரம்ப நாட்களில் நிறுவன செலவுகளை குறைத்து கட்டுக்குள் வைப்பது கடினமான காரியமாகும். அனைத்து வேலைகளையும் நாமே செய்யவேண்டி இருக்கும். எங்கள் பொருட்களை நாங்களே தயாரிப்பதால், முதல் வருடம் எங்களுக்கு அந்த செலவு மிச்சமானது. கடைசியில், செலவுகளை கட்டுக்குள் எந்த எந்த முறையில் வைக்க இயலும் என்பது தெரியும் பொழுது அது ஆச்சர்யம் தரும் விதமாக அமையும்.

அடுத்ததாக நிறுவனம் வளர வளர, நிறுவனத்திற்காக ஏற்படும் செலவுகளும் வளர ஆரம்பித்தன. எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருக பெருக, அவர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய, நாங்கள் வேலையாட்களை அமர்த்தும் நிலை உருவானது. அப்போது, பணிக்கு வேலையாட்களை அமர்த்த, அவர்கள் பற்றிய தகவல்களுக்கு நாங்கள் செலவு செய்தோம். பணியாட்கள் கிடைப்பதற்கு அரிதாக உள்ள இந்நிலையில், நாங்கள் செய்த செலவு அர்த்தமானதாக அமைந்தது. மேலும் அதன் மூலம் கிடைக்கும் பணியாட்களை வைத்து வேலை வாங்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

வர்த்தக அடையாள மீது அதிக கவனம் தேவையில்லை

நம் நிறுவனம் வளர வளர, அதனை விளம்பரபடுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். தினசரி நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, நிகழ்சிகளை வழங்குதல் மூலம் நம் விளம்பர அடையாளங்களை பிரபலபடுத்தும் முறை என பல வழிகள் இருப்பினும், அவை நமக்கு தேவையா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இங்கு அமைந்துள்ள விளம்பர நிறுவனங்கள் அனைத்தும், அவர்கள் கூறும் முறையில் நாம் விளம்பரம் செய்தால், அடுத்த அமேசானாக நமது நிறுவனம் மாறும் என அவர்கள் சத்தியம் செய்ய வாய்ப்புண்டு. எனவே இப்படிப்பட்ட சூழலில், விளம்பரப்படுத்துவது எளிது ஆனால், அவற்றின் தாக்கத்தை சரியான முறையில் அளவிடுவது கடினம். அப்படிப்பட்ட விளம்பர முறைகளிடம் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்கவே செய்கிறோம். மேலும் எங்கள் விளம்பர யுத்திகள் மூலம் செலவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பைசாவும் லாபமாக மாறியது.

மேலும் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் போது, அதற்காக அதிக பணம் ஒதுக்க இயலாமல் இருப்பது நல்லதே. சிறிய சிறிய பரிசோதனைகள் செய்து எங்களுக்கு ஏற்றவாறு இயங்குவதை கண்டுகொண்டு அவற்றின் மீது மேலும் முதலீடு செய்வது எங்கள் முறையாகும்.

பொருளின் மீது கவனம் கொள்தல்

அடுத்த மாதம் நிறுவன விரிவாக்கத்திற்கு தேவைப்படும் பணம் கைகளில் இல்லை என்றால், நமது பொருளை மேம்படுத்துவதை தவிர வேறு வழி நமக்கில்லை.

நமது தளத்திற்கு 1000 பார்வையாளர்கள் வருகிறார்கள், அவற்றில் 5 பேர் நமது வாடிக்கையாளராக மாறுகிறார்கள் என்றால், நமக்கு அந்த புள்ளியில் இருந்து 2 வழிகள் நாம் பயணிக்க கிடைக்கும். ஒன்று, பார்வையாளர்களை 2000ஆக மாற்ற அதிகரிக்க மேலும் விளம்பரங்களில் முதலீடு செய்வது, அல்லது 1௦௦௦ பார்வையாளர்கள் என்ன எதிர்பார்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களுக்கு ஏற்றாற்போல் நமது பொருளை மேம்படுத்துவது.

இதில் இரண்டாம் முறை கடினமானதாக இருந்தாலும், தொலைநோக்கத்தில் சரியான தேர்வாக அமையும்.

ஓர் எண்ண அலைவரிசை கொண்ட மக்கள்

விளம்பரங்களுக்காக பல நிறுவனங்களை அணுகினோம். ஆனால் எங்கள் நிறுவன விளம்பர பிரிவினர் கொடுக்க முடிந்த தரத்திற்கு அவர்களால் கொடுக்க இயலவில்லை. சந்தையின் நம்பிக்கைகளில் மூழ்கி அவர்கள் கரைந்து போயிருந்தனர்.

இத்துறையில் வெற்றி பெற மிக முக்கிய ஆயுதம் சரியான ஆட்களை தேர்வு செய்வதே. அப்படி தேர்வு செய்த ஆட்கள் கொண்டு, அதிக செலவு வைக்கும் முறைகளுக்கு மாற்று முறைகளை நாங்கள் கண்டுகொள்ள முயற்சித்தோம்.

அப்போது நிறுவனத்திற்கு முதலீடு செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அர்த்தமாகுமா? இல்லை. ஒரு நிறுவனம் வேகமாக வளர்ச்சி காண முதலீடு அவசியம். ஆனால் நிறுவனர்கள் முதலீட்டை தாங்களே செய்வது நிறுவனத்திற்கு மதிப்பு கூட்டாகும். எனவே முதலீட்டை பெற முயற்சிக்கும் முன்பு, அதனை எதற்கு உபயோகிப்பது என்பதனை சரியாக ஆராய்ந்து உணரவேண்டும்.

இக்கட்டுரையை எழுத காரணம்

1. மின் வணிக முறையில் முதலீடு இன்றி யாரும் தொழில் முனைய இயலாது என்ற நம்பிக்கையை உடைக்க வேண்டும்.

2. புதிதாக தொழில் முனைவோரை தங்கள் வாடிக்கையாளர் மீது கவனம் செலுத்த உத்வேகப்படுத்துவது.

ஆக்கம் : அனூப் நாயர் | தமிழில் : கெளதம் s/o தவமணி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற தொழில்முனைவு தொடர்பு கட்டுரை:

சிறு, குறு வர்த்தக பொருட்கள் டெலிவரியில் முத்திரை பதிக்கும் ஷிப்ளர்!

தொலைதூரக் கல்விக்கான மேடையாக திகழும் 'ஸ்கூல்குரு