மீதமுள்ள உணவை ஏழைகளுக்கு வழங்கும் அமைப்பு...

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவர் ஆற்றலின் பின் இந்த திருக்குறளை நிருப்பித்து வருகிறார்கள் பசியாற்றல் குழுவினர்!

0

திருமணமண்டபங்கள், சுபநிகழ்ச்சிகள், அரங்குகள், உணவகங்கள், போன்ற இடங்களில் மீதமாகும் உணவை பசியுடன் இருப்போருக்கு அளிக்கும் மகத்தான சேவையை செய்துவருகின்றனா் ஓசூரைச் சேர்ந்த பசியாற்றல் குழுவினர்.

பசிக்கு புசிக்க உணவு இல்லாத வேளைகள் மிகவும் கொடியது. நாம் அன்றாடம் 3 வேலை நன்கு உண்டு உறங்கும் இதே சமூகத்தில் தான் இன்னமும் ஒரு வேளை சோற்றிக்காக ஏங்கும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மில் எத்தனை போ் அவா்களை பற்றி நினைத்து பார்த்திருக்கிறோம்? அப்படி நினைத்தாலும் நாம் காட்டும் பரிதாபத்தால் அவர்களின் பசி அடங்கி விடுமா என்ன?

பரிதாபப்படுவதை விட பசித்தவர்களின் பசியை ஆற்ற வழி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவானது தான் ஓசூரை சேர்ந்த ’பசியாற்றல் அமைப்பு’.

உணவகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மீதமாகம் உணவு வீணாக வீசியெறியப்படுவதை கண்ட செல்வராஜ் என்பவர் அந்த உணவை தேவைப்படுவோருக்கு கொண்டு சென்று பசியாற்றினால் என்ன என்று யோசித்ததில் உருவானது தான் பசியாற்றல் அமைப்பு.

வெவ்வேறு பணிகளில் இருக்கும் தன் நண்பர்களிடம் இது குறித்து பேசி பசியாற்றல் என்ற அமைப்பை தொடங்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்தார் செல்வராஜ். ஒசூரில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு சென்று மீதமாகும் உணவை முதலில் தான் சுவைத்து சோதித்த பிறகு அதனை அங்கிருந்து சொந்த செலவில் வாடகை வண்டி வைத்து சாலையோரம் பசிக்கு உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தார். 

இதுவே ஒரு அமைப்பாக மாற இந்த அமைப்பினரின் செல்பாடு ஓசூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும், திருமண நிகழ்வுகளுக்கு சென்று மீதமாகும் உணவை கேட்கும் நிலை மாறி அவா்களாகவே தொடர்பு கொண்டு கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

முதலில் சாலையோரம் இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமே உணவளித்து வந்த இவர்கள் தற்போது ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 32 ஆதரவற்ற இல்லங்களுக்கும் மனநல காப்பகத்திற்கும் உணவு அளிக்கிறார்கள்.

ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு அளிக்க இவா்கள் ஒரு நாளும் தவறியது இல்லை. ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு சென்று மீண்டும் காப்பகத்திற்கு திரும்வதற்கு முன்பு இவா்களின் உணவு இல்லங்களை சென்றடைந்து விடுகிறது. தன்னலம் கருதாத பசியாற்றல் அமைப்பினரின் இந்த சேவை போற்றுதலுக்குரியது.

Related Stories

Stories by Jessica