பன்முக கலைஞர் மனோஜ் குமார் திவாரி மக்களவை எம்.பி. ஆன கதை!

போஜ்புரி மொழி பாடகர், பின்னர் நடிகர், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்..!

0

'இந்த உயரத்தை அடைய அவர் தாண்டிவந்த வழிகள் இலகுவானது அல்ல' என்பதை யுவர் ஸ்டோரி இடம் மனோஜ் குமார் திவாரி பகிர்ந்து கொண்ட போது தெளிவானது...

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் இவரது பூர்வீகம். நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

ஆனால் தினமும் எட்டு கிலோமீட்டர் நடைப்பயணம் தவிர்க்க முடியாதது. அரைக்கால் நிக்கர், பனியன் இதுதான் கிராமத்து மாணவர்களின் உடை. சிறு வயதிலேயே அப்பாவை இழந்ததால் அம்மாதான் அனைத்துமாக இருந்தார். இன்று நான் யாராக உருவாகி இருக்கிறேனோ அதற்கு அவர்தான் காரணம். இன்று வரை என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் உதவி, ஆலோசனை கிடைத்து வந்திருக்கிறது. அம்மாவும் அவரே அப்பாவும் அவரே... என்று தாய் லலிதா கன்வார் பற்றி அவர் பேசும் போது அவரது கண்கள் பனிக்கின்றன. உணர்ச்சி வசப்படுகிறார்.

"பள்ளி படிப்பு முடியும் வரை அரசின் உதவித்தொகை கிடைத்து வந்ததால் அதுவரை எந்த சிக்கலும் இல்லை. மேற்படிப்புக்கு சேர்ந்த போதுதான் மிகவும் சிரமப்பட்டேன். அம்மா வீட்டில் இருந்த உணவு தானியங்களை விற்று பணம் அனுப்புவார். இதனால் வீட்டிலும் பட்டினி தாண்டவமாடியது. ஒரு வழியாக நான் பனாரஸ் பல்கலைகழகத்தில் 1992 - ல் பட்டப் படிப்பினை முடித்தேன். பிறகு, வேலை தேடும் படலம். செல்லும் இடமெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த நாட்களில்தான் என்னால் பாடமுடியும் என்பதை நானே உணர்ந்து கொண்டேன். 

"தற்செயலாக ஒரு நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு கிடைத்து. அன்று 1400 ரூபாய் கையில் தந்தார்கள். இவ்வளவு பணம் கிடைப்பதாக இருந்தால் பாடுவதையே ஏன் முழு நேர வேலையாக்க கூடாது என்று நினைத்தேன். அப்பாவின் இசை பாரம்பரியம் கைகுடுக்க அந்த திசையில் பயணிக்கத் தொடங்கினேன்" என்று இளைமை கால நினைவுகளை விளக்கினார்.

பின்னர், டெல்லி வந்தவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வேலை ஆட்கள் தங்கும் குடியிருப்பில் தங்கியவாறு வாய்ப்புக்களை தேடி அலைந்திருக்கிறார்.

"பல இடங்களுக்கு பயணித்தேன். 4 ஆண்டுகளில் பல பல நிராகரிப்புகள். சிலர் சிறிய சிறிய வாய்ப்பினை தந்தார்கள். வேறு சிலரோ உன் திறமைக்கு ஒரு நாள் பலன் கிடக்கும் என்று ஆறுதல் சொன்னார்கள். கடைசியாக அந்த நாள் வந்தது. டி-சீரிஸ் ஆல்பத்தில் பாட இந்தி இசை உலகின் ராஜா குல்ஷன் குமார் வாய்ப்பு குடுத்தார். அந்த முதல் பாடலே சுப்பர் ஹிட் ஆனது." 

என்று தான் ஒரு பாடகன் ஆன கதையை விவரித்தார். ஒரு நல்ல நாள் கண்டிப்பாக வரும் என்கிற மன உறுதியோடு உழைத்தால் வெற்றி நிச்சயம். உடைந்து போனால் கூட மனதை திடப்படுத்திக் கொண்டு முன் நோக்கிச் செல்லவேண்டும் என்கிறார்.

போராட்டங்கள்தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். அதே நேரத்தில், வானத்தை தொட்ட பிறகு கடந்து வந்த பாதையை, கஷ்டப்பட்ட வாழ்க்கையை ஒரு போதும் மறந்து விடக்கூடாது. இதனை மனதில் கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம் என்றார்.

மனோஜ் திவாரியின் இந்த கொள்கைதான் பிற்காலத்தில் ஒரு நடிகராகவும், இன்று வட கிழக்கு டெல்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவரை உருவாக்கி இருக்கிறது. டெல்லி வந்த பொது எம்.பி.களின் வேலை ஆட்கள் தங்கும் குடியிருப்பில் தங்கியவருக்கு இன்று குடியரசு தலைவர் மாளிகை அருகே நார்த் அவென்யூ பகுதியில் 159 ஆவது வீட்டை அரசு இல்லமாக ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

போஜ்புபூரி மொழிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தர வேண்டும் என்பதே மனோஜ் திவாரியின் தற்போதைய ஆசை. சுமார் இரண்டரை கோடி மக்கள் போஜ்புபூரி பேசுகிறார்கள். எட்டு நாடுகள் இந்த மொழியை ஏற்றுக் கொண்டுள்ள போது நமது நாட்டில் அங்கீகாரம் வழங்காதது ஏன் என்பது இவரது கேள்வி.

"நான் நிகழ் காலத்தில் பயணிக்கவே விரும்புகிறேன். இன்று செய்யும் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். அதுதான் ஒருவருக்கும் வெற்றியைத் தரும். பாடல்கள்தான் சோறு போடும் என்று நான் முழுமையாக நம்பியதால் அதில் முழு ஈடுபாடு கொண்டு பாடல்களை பாடிவந்தேன். வெற்றி கிடைத்தது. அதனால்தான் நிகழ்காலத்தில் பயணிக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் சொல்லிவருகிறேன்"

என்று கூறும் மனிஷ் திவாரி, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை முதலில் இளைஞர்கள் முடிவு செய்து கொண்டு அந்த திசையில் பயணிக்க வேண்டும் என்கிறார். ஒரு போதும் குறிக்கோள் எனும் கனவை கைவிடக்கூடாது என்கிறார் மேலும்.

நான் மூன்று கனவுகளை கண்டேன். வசதி படைத்த பெண் முன்னால் நான் பாட வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. பின்னர் நடிகர் அமிதாபச்சனை சந்திப்பதாக கனவு கண்டேன். அது மும்பை யெஸ்ராஜ் பிலிம் நிறுவனத்தில் நனவானது. அவரோடு அபிஷேக் பச்சனையும் சந்திக்க முடிந்தது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. பின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதாக கனவு கண்டேன். அவர் உடல்நலக் குறைவாக இருப்பதால் பார்க்கமுடியவில்லை. இன்று பிரதமர் அலுவலகம் வழியாக போகும் போதெல்லாம் வாஜ்பாய் அங்கு இருப்பதாகவே உணர்கிறேன்.

இசை மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டிலும் இவர் அசத்துகிறார். போஜ்புபூரி தபாங் செலிபிரிட்டி அணியின் கேப்டனாக கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறார் யாரெல்லாம் தனக்குத் தானே உண்மையாக இருக்கிறார்களோ அவர்களால்தான் வெற்றி பெற முடியும். அதோடு தன் குறைகளையும் உணர்ந்து செயல் பட வேண்டும்.

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து நிர்ப்பவர்களால் மட்டுமே தொடர் வெற்றி பெற முடியும். இந்த மூன்று விஷயங்கள்தான் வெற்றியின் ரகசியங்கள்.

இந்த ரகசியங்கள் மற்றவர்களுக்கு ஊக்கமாக அமைய வேண்டும் என்பதுதான் இந்த 44 வயது எம்.பி. மனிஷ் திவாரியின் ஆசை.!

ஆக்கம்: அர்விந்த் யாதவ் | தமிழில் ஜெனிட்டா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்