பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கறிஞர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை இந்தியா எவ்வாறு தண்டிக்கப்போகிறது என்பது குறித்த முழக்கங்களுக்கிடையே 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கலாம் என்கிற குறிப்பிடத்தக்க தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தீர்ப்பு வரவேற்கப்பட்டாலும் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட முக்கியக் காரணமாக இருந்த டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் நடந்து வந்தார்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என கோரி அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டெல்லியில் எட்டு மாத பெண் குழந்தை தனது 28 வயது உறவினர் ஒருவரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கோரி தாமாகவே முன்வந்து இந்த பொதுநல வழக்கைப் பதிவுசெய்தார் என ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.

”டெல்லி பல்கலைக்கழகத்தின் கேம்பஸ் லா சென்டரில் தங்கப் பதக்கம் பெற்ற இவர் பொது நல வழக்கு தொடர்ந்ததும் உச்சநீதி மன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஒரு மருத்துவக் குழுவை அமைக்க வழிவகுத்தது,” என்றார் அலாக்.

இந்த வழக்கு குறித்து நான் செய்தித்தாளில் படித்து அவரைப் பார்க்கச் சென்றேன். மிகவும் துயரமளிக்கும் அனுபவமாக இருந்தது. குழந்தையின் பெற்றோர் தினக்கூலிகள். அந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருந்தனர். அந்தக் குழந்தைக்கு நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என அப்போதே தீர்மானித்தேன். இப்படிப்பட்ட ஒரு கொடூரமான செயலுக்கு மரண தண்டனை மட்டுமே சரியான தண்டனையாக இருக்கும்.

இவரது பொது நல வழக்கைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றம் அந்தக் குழந்தையை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைத்தது. அத்துடன் முறையான சிகிச்சையளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அலாக் இதற்கு முன்பு அரசுத் துறையில் தனது பணியைத் துறந்து சட்டப்பிரிவில் இணைந்தார். அவருக்குத் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிய முன்னாள் தலைமை நீதிபதி எஸ் எச் கபாடியா ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு உதவவேண்டும் என்று உந்துதலளித்துள்ளார்.

2014-ம் ஆண்டு அவர் சட்டப்பயிற்சியைத் துவங்கியதாக Sivasat தெரிவிக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவான ஸ்ரீவஸ்தவா இளம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் அதிக கவனம் செலுத்தினார்.

”ஒரு அப்பாவாக இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் நிலையை நினைத்து வருந்துகிறேன். நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA