ஆர்வம், ஒளிவுமறைவின்மை, நற்செயல்களில் தனிக்கவனம் இவையே வெற்றிக்கான மந்திரம் என்கிறார் தீரஜ் ராஜாராம்

0

தீரஜ் ராஜாராம், எம்யூ சிக்மாவின், நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர், மாநாடுகளில் அரிதாக பங்கேற்கும் அவர், டெக்ஸ்பார்க்ஸ் 2015ன் இறுதி நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார். சர்வதேச அளவில் ஒரு நிறுவனத்தை தனக்கே உரிய தனி பாணியில் எப்படி வெற்றிகரமாக எடுத்துச் செல்ல கட்டமைப்பது என்பது குறித்து உரையாற்றினார் அவர். தீரஜ் தொழில்முனைவர்களுக்கான மூன்று வெற்றி மந்திரங்களை கூறுகிறார். எம்யூ சிக்மாவைத் தொடங்கி, அதை லாபகரமாக நடத்தி வரும் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து அவற்றை கூறுகிறார்.

1.உண்மையாக இருத்தல் அவசியம்

“உண்மையாக இருப்பதற்கு பல வகையிலும் மதிப்பு உண்டு” என்று தனது உரையைத் தொடங்கினார் தீரஜ், “இளம் தலைமுறையினர் நல்ல செயல்களை செய்ய விரும்புகிறார்கள், ஆனால் உண்மைக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. நான் உறுதியாகச் சொல்வேன் இந்தியாவில் இருக்கும் தேவை ஒளிவு மறைவில்லாத வாழ்க்கையே என்பதே, அதில் எனக்கு முழு நம்பிக்கையும் உள்ளது. அப்படி இல்லாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் மரியாதை நமக்குக் கிடைக்காது” என்கிறார் அவர். 

மேலும் இது பற்றி விரிவாகக் கூறும் போது, ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்லது சேவைகள் மக்கள் மனதில் நிலைத்து இருக்காவிட்டாலும் அதன் பண்பு மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஏனெனில் அது நிறுவனரின் நம்பிக்கை சார்ந்தது அதை மாற்ற முடியாது.

போட்டியாளர்கள் உங்களுடைய நடைமுறையை செயல்படுத்தலாம் ஆனால் அவர்களால் உங்களது நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது.

நாம் மாற்றம் சார்ந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் தெரிந்து கொள்வதை விட படிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்கிறார் தீரஜ். இந்த உலகில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவர்களுக்கு குழந்தைகளைப் போல அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், அதை செயல்முறைபடுத்தும் திறமையும் இருக்க வேண்டும். சுற்றுச்சூலலை பாதிக்காத வகையில் அனைவரும் விரும்பும் விதத்தில் புதிய எண்ணங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் புதிய சிந்தனைகள் அவர்களுடைய சொத்து மட்டுமல்ல, அது அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 500 ஆண்டுகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் பல்வேறு விஷயங்களின் ஊடாகவே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

2.நீங்கள் செயல்படுத்துபவரா அல்லது தயாரிப்பாளரா?

தயாரிப்பாளருக்கும் செயல்படுத்துபவருக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார் தீரஜ். செயல்படுத்துபவர் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் செயல்களை ஆர்வமாக செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி, நன்மதிப்பை பெற பெரிதும் முக்கியத்துவம் அளிப்பார். ஆனால் தயாரிப்பாளர்கள் பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் செயல்களிலேயே கவனமாக இருப்பார்கள். எம்யூ சிக்மா செயல்களை நல்ல முறையில் செய்ய வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கும், அதனாலேயே எங்களால் லாபத்தை பெற முடிகிறது என்று சொல்கிறார் தீரஜ் ராஜாராம்.

தொழில்முனைவர்களை எச்சரிக்கும் தீரஜ் நிதிகளைப் பெறுவது பற்றி யோசிக்காமல் அவை நம்மை தேடி வந்தடையும்படி செய்ய வேண்டும் :

நிதி கிடைப்பது மட்டுமே வெற்றிக்கான அடையாளம் இல்லை. நிதி ஒரு தொடக்கமே, அது ஆபத்தானது என்று கூட சொல்லலாம்.

எம்யூ சிக்மா இரண்டாம் நிலை முதலீடுகளை ஈர்க்கவே விரும்பியதாக நினைவுகூர்கிறார் தீரஜ். “எங்களுடைய திட்டம் லாபம் சம்பாதிக்கும் என்று எங்களுக்குத் தெரியும், அதனால் நாங்கள் நிதியை ஊக்கப்படுத்த விரும்பவில்லை” என்று சொல்கிறார் அவர். வாழ்வை இந்த கோணத்தில் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறும் தீரஜ் லாபம் ஈட்ட முடியாததை நினைத்து மனஉறுதியை கைவிட்டுவிடக்கூடாது என்றும் சொல்கிறார்.

3.அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு குறிக்கோளை அடைய நல்ல தெளிவும் தேவை

தீரஜ் நீடித்த வெற்றிக்கு உதாரணமாக ராக்கெட்டைக் கூறுகிறார் – ராக்கெட் விண்ணில் பாய்வதற்கு முன் நெருப்பை கக்கிக் கொண்டு மெல்ல விண் நோக்கி செல்லத் தொடங்குவது போல ஒருவரின் செயலும் தொடக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் அது பறக்கத்தொடங்கி விட்டால் எதையும் எதிர்பார்க்காமல் நீண்ட தூரம் பயணிப்பது போல அவர்களும் பயணிக்க வேண்டும் என்கிறார் தீரஜ். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் சரியானவை தான் என்று நினைக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் நல்லது கெட்டது என்ற இரு நிலையையும் ஆராய்பவராகவும் இருக்க வேண்டும், நீங்கள் ஏதேனும் தவறு செய்கிறீர்களா என்று உங்களுக்குள்ளாகவே தெளிவுபடுத்திக் கொள்ளவதும் அவசியம் என்று விளக்கமளிக்கிறார் அவர். உங்களால் செய்ய முடியும் என்ற ஆர்வம் இருந்தால் போதும், அது உங்களுக்கு தெளிவை ஏற்படுத்த உதவுவதோடு, பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்காமல் உங்களின் தேவை அறிந்து அதற்கு முக்கியத்துவம் அளித்து தனிக்கவனம் செலுத்த உதவும். உங்களுக்கு இந்த இரண்டு விஷயங்களையும் சமாளிக்கும் திறன் இருந்தால், அப்போது உங்களது பயணத்தை நீங்கள் தாராளமாகத் தொடங்கலாம்” என்பதும் அவர் கூற்று.

அதே சமயம் நீங்கள் நன்றி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். உங்கள் அதிர்ஷ்டத்துக்கும், குடும்பத்துக்கும் நன்றியோடு இருப்பது அவசியம், ஏனெனில் அது உங்களின் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருப்பவை என்று ஆலோசனை அளிக்கிறார் தீரஜ்.

மிக எளிமையான குறிப்பாக தீரஜ் கூறுபவை, நீங்கள் முதல் தலைமுறை தொழில்முனைவராக இருந்தால் உங்களுக்கு உதவியவர்கள் அனைவரையும் நினைவில் வைத்து நன்றி பாராட்ட வேண்டும் என்கிறார். அப்போது தான் உங்களுடைய வெற்றி தனிப்பட்ட முறையில் விரைவாக லாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். உங்களுக்கான அடையாளத்தை நீங்கள் ஏற்படுத்துவதும் அவசியம் என்று புன்னகை பூக்கிறார் தீரஜ்.