புதிய அத்தியாயத்தின் தொடக்கம்!

0

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நாள் என் நினைவில் அச்சாக பதிந்து உள்ளது. மும்பையில் தொழில் முனைவோர் பலர் முன் நான் நிகழ்த்திய உரை அது. நான் தொடங்கவிருக்கும் முயற்சியை பற்றி அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அது சூப்பர் ஸ்டார்களுக்கான இடம் அல்ல முயற்சி, நம்பிக்கை மற்றும் உத்வேகம் உள்ள இளைய தொழில்முனைவோருக்கான மேடையை அமைத்து தரும் ஒரு ஊடகம் என அன்று அறிவித்தபோது சிலர் "உன்னால் முடியும் " என வாழ்த்தினர் ஆனால் பலர் "இது சாத்தியம் ஆகாத முயற்சி" என குறிப்பிட்டனர்.

"உன்னால் 6 மாதத்திற்கு மேல் நிலைக்க முடியாது. இது வெறும் சமூக பொழுதுபோக்கு, பிரபலமில்லாத தொழிமுனைவோரை பற்றி எழுதுவது வணிக ரீதியாக லாபத்தை எப்படி ஈட்ட முடியும்? "

ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணம் அது. என் மனது சொன்னதை பின்பற்றி "யுவர்ஸ்டோரி" யை (Yourstory) செப்டம்பர் 16 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு தொடங்கினேன். (என் இணையதளம் உயிர் பெற்றது).

யுவர்ஸ்டோரி, தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக, இந்த ஆகஸ்ட் மாதம் தனது 7 ஆம் ஆண்டை பூர்த்தி செய்வதோடு ஓர் அற்புதமான புதிய அத்தியாயத்தையும் தொடங்குகிறது. இதை பிரபலமான, மதிப்பிற்குறிய சிறந்த பங்காளிகள் உதவியோடு தொடங்குகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

கடந்த 7 ஆண்டுகளாக உங்களின் கதைகளை இடைவிடாமல் சொல்லி வந்துள்ளோம். அதை மிக்க ஆர்வத்துடனும், பேரானந்தத்துடனும் செய்து வந்துள்ளோம். இதற்கு மிக முக்கிய காரணம் எங்களுக்கு என்றும் துணை நின்றுள்ள தொழில்முனைவோர் தான். அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து அளித்த அன்பும், பேராதரவும் தான் இந்த உந்துதலுக்கு காரணம் என்றே சொல்லலாம்.

போராடும், கனவு காணும், தோல்வி மற்றும் வெற்றியடையும் எல்லா நண்பர்களுக்கும் நான் பகிர நினைக்கும் சில அனுபவங்கள்:

எனக்கு பல ஆண்டுகள் எடுத்துள்ளது இந்த இடத்தை பெற: கடின உழைப்பை போட்டிருக்கிறேன். பல முறை தனியாக போராடி இருக்கிறேன். மற்றவர்களின் வார்த்தைகளில் தளர்ந்து விடாதீர், என்னுள் எரிந்து கொண்டிருந்த தீ என்னை முன்னேற்றி தள்ளியது. பல சமயம் வாழ்வா சாவா என்ற நிலையும் இருந்துள்ளது. ஆனால் அது என்னை என்றுமே நிறுத்தியதில்லை.

கடந்து வந்த பாதையை நோக்கினால் நான் சம்பாதித்த விலைமதிக்க முடியாத செல்வம் எனது அனுபவம் தான். நல்லது, கெட்டது, மோசமானது என எல்லாவற்றையும் ரசித்து அனுபவித்துள்ளேன். எல்லாம் தெரிந்த அனுபவசாலிகளை நம்பத்தேவையில்லை. ஒரு சுவரோடு மோதியதை போல் உணருவீர்கள். எனவே உங்கள் அனுபவத்தில் வாழுங்கள். என்னை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும், நான் எத்தனை இன்னல்கள், போராட்டங்களை சந்தித்துள்ளேன் என்று. இருப்பினும் அந்த நேரத்தில் நான் வாழ்ந்து காட்டினேன். அதை தாண்டி இன்னும் வலிமையாகவே மேலே குதித்து எழுந்தேன்.

நான் முன்வினை பயனை நம்புபவள்: நாம் செய்த பயன் நிச்சயமாக ஒரு நாள் பலநூறு மடங்கு திரும்ப கிடைக்கும் என நம்புகிறேன். நான், பல தொழில்முனைவோர் மாறியுள்ளதை கண்டுள்ளேன் அது போல் இல்லாமல் நான் என்றும் மாறாமல் இருக்கவே விரும்புகிறேன். இருப்பினும் என்னை சுற்றியுள்ள பல மாறிக்கொண்டேதான் இருக்கும். என்னை பற்றி நான் நினைப்பது, என் குறிக்கோள்கள் இவை என்னை சரியான நிலையில் என்றும் வைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

நான் 7 ஆண்டுகளாக இயக்கதொடக்கத்தில் நிலைத்துள்ளேன். (பலர் இதை உரக்க சொல்லி எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்). இடைவிடாத முதலீடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் இயக்க தொடக்கத்திற்கு தகுந்த மரியதை கிடைப்பதில்லை. நான் 7 ஆண்டுகள் தாக்கு பிடித்து விட்டேன் இருப்பினும் முதலீட்டில் உதவ இதுவரை எவரும் முன் வந்ததில்லை. ஆனால் இதுவே என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது. நாமே அனைத்திற்கும் பொறுப்பு என்ற நிலை இருந்தால் கூடுதல் விடாமுயற்சியும் உழைப்பும் போடமுடிகிறது.

நான் வெளியிலிருந்து முதலீடு பெற முடிவு செய்ததன் நோக்கம் என் இறகுகளுக்கு கீழ் ஒரு வலுவான காற்று வேண்டும் என உணர்ந்ததன் பயனாகும். எல்லா கதைகளும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்பட வேண்டும் என நான் கண்ட கனவினை நினைவாக்க விரும்பியதே இதற்கு முக்கிய காரணம். அதே சமயம் இந்த உண்மையை நம்பியவர்கள் எங்கள் யுவர்ஸ்டோரியில் பங்கு வகிக்க வேண்டும் என எண்ணிணேன்.

நான் மிக்க அதிர்ஷ்டம் செய்தவள் எனவே இது போன்ற நல்ல உள்ளங்களை கண்டறிந்துள்ளேன். ரத்தன் டாடா அவர்கள், வாணி கோலா (கலாரி காபிடல்), கார்த்தீ மாடசாமி ( குவால்காம் வென்ட்சர்ஸ்) மற்றும் டி.வி.மோஹன்தாஸ் பாய் ஆகியோர் யுவர்ஸ்டோரியில் முதலீடு செய்துள்ளனர் இந்த செய்தியை எண்ணில்லா மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்.

எல்லா கதைகளும் முக்கியம் எனும் என் கனவை நினைவாக்கியதில் எல்லாருடைய பங்கும் இன்றியமையாதது. எல்லாருடைய பெயரையும் குறிப்பிடுவதைவிட இதற்கு காரணமாக இருந்த எல்லா நல்லுள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிக முக்கியமாக என் யுவர்ஸ்டோரி குழுவிற்கு நன்றி. எங்களுடன் கைகோர்த்து நடந்த எல்லா தொழில்முனைவோருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எல்லாருக்கும் நன்றி. உங்களுக்கும் இனி அதிக சக்தி கிடைக்கும் என நம்புகிறேன்.

அடுத்து மிக உற்சாகமான ஒரு அறிவிப்பு. 

யுவர்ஸ்டோரிக்கு எல்லார் கதைகளும் முக்கியம் என்பதால் நாங்கள் எல்லா மொழிகளிலும் விரைவில் அடி எடுத்து வைக்கிறோம். உங்கள் மொழியில் உங்கள் அனுபவ கதையை பகிருங்கள். இது இந்தியாவில் முதல்முறையாக தங்கள் மொழியில் எழுதி, படிக்க உதவும் முதல் தொழில்நுட்ப வசதியாகும். நம் மொழியில் நம் கதையை சொல்லி பல உண்மை கதைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவோம். இதை உங்கள் ஆதரவோடு செய்ய விரும்புகிறோம். உங்கள் ஒவ்வொரு வீட்டு கதையை உணர்வுப்பூர்வமாக, அதீத பேரார்வத்துடன் சொல்லுங்கள். யுவர்ஸ்டோரி க்கு உங்கள் அன்பு மற்றும் பேராதரவை அளித்து உங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக வைத்து எங்களை வெற்றி அடைய செய்ததற்கு மிக மிக நன்றி...

உங்கள் அளவில்லாத அன்பினால் மட்டுமே யுவர்ஸ்டோரி உயிர் பெற்று இன்று ஒரு பூந்தோட்டமாய் பூத்து குலுங்குகிறது…

காத்திருங்கள் எங்கள் கதை இப்போது தான் தொடங்கியுள்ளது. நாம் இணைந்து பல வாழ்க்கை கதைகளை உருவாக்குவோம்...

(இது ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரைஆங்கிலத்தில்: ஷ்ரத்தா ஷர்மா)