டெக்ஸ்பார்க்ஸ் 2015 ல் கவனத்தை ஈர்த்த முன்னணி டெக் 30 தொழில்நுட்ப நிறுவனங்கள்

0

மூன்று நாட்களாக நடைபெற்ற தீவிரமான, துடிப்பான விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஆறாவது டெக்ஸ்பார்க்ஸ் 2015 முடிவுக்கு வந்துள்ளது. இந்திய ஸ்டார்ட் அப் பரப்பில் செயல்பட்டு வரும் பங்குதாரர்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 29 ல் ஹேக்கதானுடன் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்கள் வல்லுனர் உரைகள், கலந்துரையாடல்கள், ஸ்டார்ட் அப் கோரிக்கைகள் என சுறுசுறுப்பாக அமைந்தன. மாலையில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்த துறையின் முக்கிய பிரமுகர்களான இன்மொபியின் நவீன் திவாரி, மு சிக்மாவின் தீரஜ் ராஜராம், பிராக்டோவின் ஷசாங்க், டி.வி.மோகந்தாஸ் பை மற்றும் மேலும் 50 வல்லுனர்கள் உரை நிகழ்த்தினர்.

நூறு கோடி மக்களுக்கு கற்பிப்பது, தொழில்நுட்பத்தை கொண்டாடுவது, நூறு கோடி மக்கள் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தக்கூடிய புதுமை படைத்தல் மற்றும் ஐடியாக்கள் ஆகியவை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அமைந்தன. இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்து டெக் 30 பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்களின் பட்டியல்: (வரிசைப்படி அல்ல)

டெக் 30 ஸ்டார்ட் அப்கள் 2015
டெக் 30 ஸ்டார்ட் அப்கள் 2015

1. ஆரவ் அன்மேண்ட் சிஸ்டம்ஸ் (ஏயூஎஸ்) (Aarav Unmanned Systems (AUS) ) பல்வேறு பணிகளுக்கு ஏற்ற உயர் பிரிவு ஆகாய ஆள் இல்லா விமானங்களை ( UAV) இந்நிறுவனம் தயார் செய்கிறது.இந்நிறுவனம் குறுகிய தொலைவிலான யூ.ஏவிக்கள் மூலம் சிவில் மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டிற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

நிகில் உபாத்யாய, சுஹாஸ் பன்ஷிவாலா, விபுல் சிங் மற்றும் யஷ்வந்த் ரெட்டி ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனம் ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி பாம்பே ஆகிய கல்வி நிறுவனங்களிடம் இருந்து தனது குழுவை உருவாக்கியுள்ளது.

2. பன்யன்போட் டெக்னாலஜிஸ் (Banyanpod Technologies) கோரிக்கைக்கேற்ற பொழுதுபோக்கை வழங்கும் மீடியா தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது. இதன் ஃபிராப்கார்ன் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை மூலம் உயர் தர உள்ளடக்கத்தை வழங்கும் உள்ளூர் சார்ந்த விநியோக அமைப்பாக செயல்படுகிறது.

இதன் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கார்தி போடார் கோம்லி மீடியா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் பிராடக்ட் நிர்வாகம் மற்றும் மார்கெட்டிங்கில் பணியாற்றியுள்ளார். மற்றொரு இணை நிறுவனர் மற்றும் சிடிஓ கார்திக் பன்சல் தொழில்நுடப் ஆர்வலர். ஷிங்டிக் மற்றும் மைக்ரோசாப்டில் பணியாற்றி இருக்கிறார்.

3. பேசில் சிஸ்டம்ஸ்சின் (Basil Systems) வீட்டு உபயோகத்திற்கான தானியங்கி தயாரிப்பான குலோவர் போர்ட் (CloverBoard) வைஃபை இணைப்பு கொண்ட ஸ்விட்ச்போர்டாகும். இது பயன்பாட்டு எளிமை, எரிசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பை அளிக்கிறது. இதில் உள்ள சென்சார்கள் நாளின் நேரத்திற்கு ஏற்ப செயல்படும் தன்மை கொண்டிருப்பதோடு, பயன்பாட்டுத் தன்மையையும் புரிந்து கொள்கிறது.

என்ஐடி ஜெய்பூரைச் சேர்ந்த சாப்ட்வேர் வல்லுனர்கள் மற்றும் பொறியாளர்களான ரித்திகா தயவாலா, நிர்மலா குமார் மற்றும் குமார் நிஷாந்த் ஆகியோரால் துவக்கப்பட்ட நிறுவனம் எஸ்.ஏபி, டாடா பவர் மற்றும் ஸ்டார்ட் அப்களில் பணியாற்றியவர்களை தனது குழுவில் கொண்டுள்ளது.

4. பிஃபோனிக்ஸ் (Bfonics) அருகாமை மார்கெட்டிங் சேவையாகும். ஆப்பிளின் ஐபிகான் மற்றும் கூகுளின் எட்டிஸ்டோன் நுட்பத்தை இது பயன்படுத்திக்கொள்கிறது. இந்த சேவை பங்குதாரர்கள் வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள வழி செய்கிறது.

நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஐபிஎம் மற்றும் எச்பி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய ஐடி அனுபவசாலி. லெண்டென் மற்றும் என்போனிக்ஸ் ஆகியவற்றின் இணை நிறுவனராகவும் இருந்தவர். இதன் குழுவில் சி.ஓ.ஓ பினாய் மேத்யூ,சி.டி.ஓ அருண் ராஜ் மற்றும் சி.எம்.ஓ ரோமி மேத்யூ ஆகியோர் உள்ளனர்.

5. மொபிசை டெக்னாலஜிசிஸ்ன்(Mobisy Technologies) மொபைலை பிரதானமாக கொண்ட கிளவுட் சேவையான பைசம் (Bizom)விற்பனை, வியூகம், மனிதவளம் மற்றும் பிராண்டிங் குழுக்களுக்கு உடனடி தகவல் தொடர்பு மற்றும் ஆனல்டிகல் முடிவுகளை வழங்குகிறது. நிறுவனர் லலித் ஹைசே (Lalit Bhise) பைசம் தலைவராக இருக்கிறார். இவர் ஹைபிரிட் புரோகிராங் மொழியை உருவாக்கியவர். இணை நிறுவனர்கள் வாசுதேவ் மஞ்ச்நாத், சுப்ரீத் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹைசே (Shree Bhise)ஆகியோர் மொபைல், கிலவுட் மற்றும் மென்பொருளில் அனுபவம் உள்ளவர்கள்.

6. கேபாகிலவுட்டின் (Capacloud) இகோடாப் (Ecotop ) 2×2 அடி பிளோர் டைலாகும். அதிக பராமரிப்பு இல்லாமல் எந்த செடியையும் வளரச்செய்யக்கூடியது.

நிறுவனர் ஜெயபாரதா பகதூரி ஆய்வு, உற்பத்தி, மார்க்கெட்டிங், சோர்சிங், சப்ளை சைன் ஆகிய துறைகளில் பல்வேறு நிறுவனங்களில் 7 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். தூய்மையான தொழில்நுட்பத்தின் மீதான ஈடுபாடு காரணமாக இந்த நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

7. சைக்லாப்ஸ் மெட்டெக் (Cyclops MedTech) சர்ஜிகல் மற்றும் ஐடிராக்கிங் தீர்வுகள் வழங்கும் மெட்டெக் ஸ்டார்ட் அப். வெர்டிகோ போன்ற நரம்பியல் பாதிப்புகளை கண்டறிவதற்கான அணியக்கூடிய ஐ-டிராக்கிங் சாதனத்தை நிறுவனம் முதலில் உருவாக்கியுள்ளது.

இணை நிறுவனர்கள் டாக்டர்.ஸ்ரீனிவாஸ் டோர்சலா மற்றும் டாக்டர்.ரவி நாயர் இ.என்.டி சர்ஜன் மற்றும் வெஸ்டுபுலார் வல்லுனர்கள். மற்றொரு இணை நிறுவனர் நிரஞ்சன் சுப்பாராவ் பல நிறுவனங்களை துவக்கிய தொழில்முனைவர். மார்கெட்டிங் தலைவராக இருக்கிறார். பொறியல் வல்லுனரான சேத்தன் ஜக்கோஜு கம்ப்யூட்டர் விஷன் மற்றும் மெஷின் லேர்னிங்கில் நிபுணத்துவம் உள்ளவர். தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார்.

8. டெய்லி ரவுண்ட்ஸ் (Daily Rounds) டாக்டர்களுக்கான வலைப்பின்னலாகும். இதில் 1,80,000 டாக்டர்கள் இணைந்துள்ளனர். டாகடர்கள் இந்த வலைப்பின்னலை கிளினிக்கல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் கற்றுக்கொளவும், மருத்துவத்துறை செய்திகள் மற்றும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள பயன்படுத்துகின்றனர்.

டாக்டர்.தீபு செபின், நிம்மி செரியன் மற்றும் பிரியங்க் செளபே ஆகியோர் இதன் நிறுவனர்கள். தீபு மருத்துவத்துறையில் பணியாற்றியுள்ளார். நிம்மி மற்றும் பிரியங்க் கம்ப்யூட்டர் சயன்ஸ் பட்டதாரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களில் பணியாற்றியுள்ளனர்.

9. பர்டோ (Furdo) உள் அலங்காரத்தை எளிமையாக்கித்தருகிறது. வாங்குவதற்கு முன் முயன்று பார்கும் 3-டி உள் அலங்கார தீர்வுகளை வழங்குகிறது. இதன் மூலம் புதிய வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளின் உள் அலங்காரம் எப்படி தோற்றம் தரும் என்பதை 3-டியில் பார்க்க முடியும்.

ஈஸ்வர் சுந்தரராமன், கிரண் சிங் மற்றும் அரவிந்த் பிரகாஷ் சிங் இதனை வழிநடத்துகின்றனர். கிரண் 3-டி நுட்பத்தில் 18 ஆண்டு அனுபவம் உள்ளவர். ஐஐஎம்-பி யை சேர்ந்த ஈஸ்வர் ரேவு மற்றும் கிலப்டி ஆகிய நிறுவனங்களை துவக்கியவர். அரவிந்த் விரிக்சை ( Vrixx) நிறுவியவர்.

10. கிரிடில் (Gridle ) பணி மேம்பாட்டிற்கான திறன் மேம்பாடு மேடையாகும். இந்த கிளவுட் சார்ந்த சேவையை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.

யாஷ் ஷா, அனுபமா பன்சால் மற்றும் அபிஷேக் டோஷி ஆகியோர் இதன் நிறுவனர்கள். இவர்கள் பத்தாண்டுகளாக அறிமுகமானவர்கள். 12 திட்டங்கள் மற்றும் தோல்வி அடைந்த ஸ்டார்ட் அப்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். கிரிடிலை கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளனர். சீட் நிதி பெற்றுள்ளனர்.

11. கெஸ்டாரண்ட் (Guesstaurant) உணவு அனுபவத்தை கேமிங் அனுபவத்துடன் இணைக்கிறது. உணவுக்கான புதிய இடங்கள் கண்டறிதலை வினாடிவினா மூலம் நிறைவேற்றித்தருகிறது.

ஐஐடி-கான்பூரைச்சேர்ந்த நிறுவனர் பாலகிருஷ்ண் பிர்லா இன்போசிஸ் மற்றும் அமேசானில் பணியாற்றி ஸ்டார்ட் அப் பக்கம் வந்தவர். ஆஸ்க் லைலா, ஜாப்நவ், அடால்படால், சாங்க்பெடியா, போலே பிஸ்ரே கீத் போன்ற ஸ்டார்ட் அப்களின் நிறுவனர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.

12. ரங்க்தேவின் ஹப்பா (Habba ) கிராமப்புற கைவினை கலைஞர்களுக்கான ஆன் -லைன் ஸ்டோராகும். நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ராமகிருஷ்ணா என்.கே 2012ல் அசோகா லெலோவாக தேர்வு செய்யப்பட்டவர். ரங்க்தே மூலம் கடன் பெறுதலுக்கான செலவை குறைப்பதில் கவனம் செலுத்தியதற்காக இந்த அங்கீகாரத்தைப்பெற்றார்.

13. இன்அக்செல் (InnAccel ) குறைந்த மற்றும் மத்திய வருமான பிரிவினருக்கான தீர்வுகளில் கவனம் செலுத்தும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமாகும். இது சொந்தமாக புதுமையான மேடையை உருவாக்கி ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சிராஜ் தனன் வெற்றிகரமான தொழில்முனைவோர். (பார்மா ஏஆர்சி), முதலீட்டாளர் மற்றும் மருத்துவத்துறை வல்லுனர். இணை நிறுவனர் மற்றும் சி.டி.ஓ ஏ.விஜயராஜன் 30 ஆண்டு அனுபவம் மிக்க மெடிக்கல் டெக்னாலஜி அனுபவசாலி. (ஜிஆர் மெடிகா சிஸ்டம்சில் இருந்தவர்). இ.என்.டி சர்ஜனான ஜகதீஷ் சதுர்வேதி கிளினிகல் இன்னவேஷன் இயக்குனர்.

14. இன்னோவ் ஆக்சர் (InnovAccer ) நிறுவனங்கள் டேட்டா சயன்ஸ் திறனை பயன்படுத்திக்கொள்வதற்கு உதவும் நிறுவனமாகும். இதன் முக்கியமான சேவையான டேட்டா ஷாப் (Datashop) வேறுபட்ட தரவுகளை ஒருங்கிணைத்து அவற்றை செயல்பாட்டிற்கு உரிய புரிதலாக மாற்றித்தரும் வகையில் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் தகவல்களை திரட்ட உதவுகிறது.

நிறுவனர்கள் அபினவ் ஷாசங்க், கனவ் ஹஜிசா, சந்தீப் குப்தா டேட்டா அனல்டிக்ஸ், டேட்டா வேர்ஹவுசிங்கில் அனுபவம் உள்ளவர்கள். இங்சால் ராண்ட் மற்றும் ஹாரவர்டு மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழங்களில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

15.மெல்டேக் (Meltag ); இந்தியாவில் பிராண்ட்களுக்கு வாடிக்கையாளர் லாயல்டி திட்டம் மற்றும் சிஆர்.எம் தீர்வுகளை வழங்கும் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் மேடையாகும்.

வினில் வாடி, கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இ-பிஸ்னஸ் மற்றும் நுகர்வோர் இணையப்பிரிவில் ஆசெர்னா, வெப் எம்டி, பி.என்.காம், வால்கிரீன்ஸ் மற்றும் டைசன் புட்ஸ் போன்ற பார்டியூன் 500 நிறுவனங்களுக்கு விர்வாக்ககூடிய அடுத்த தலைமுறை பொருட்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

16. ஸ்டோர்ஃப்ரண்ட் டிஸ்பிளே டெக்னாலஜிசின் நிஃப்டி விண்டோ ( Storefront Display Technologies’ Nifty Window )வழக்கமான வர்த்தகங்களுக்கு தேடல், சமூக ஊடகம் மற்றும் மொபைல் மூலம் விற்பனையை தேடித்தருவதற்கான எஸ்.ஏ.ஏ.எஸ் மேடையை அளிக்கிறது.

இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ தாமஸ் ஜக்காரியா இதற்கு முன்னர் யாஹூவில் பிராடக்ட் இயக்குனராக இருந்தவர். இணை நிறுவனர் மற்றும் தலைவர் ராகேஷ் ரகுவன்ஷி லைவ்1 இந்தியா ரிடைல் ஆலோசனை நிறுவனத்தை நிறுவியவர் மற்றும் ஷோடைம் குழும சி.இ.ஓவாக இருந்தவர்.

17. நிக்கி.ஏஐ (Niki.ai ) மொபலில் செயற்கை அறிவு உதவியுடன் வாங்கும் அனுபவத்தை பெற உதவுகிறது. டிக்கெட் புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது என எல்லாவற்றுக்கும் ஆன் -லைன் சாட் முறையில் உதவுகிறது.

சிஐடி -கராகபூரின் நான்கு பட்டதாரிகளால் துவங்கப்பட்டுள்ளது. சச்சின் ஜெய்ஸால் இன்னோவேசரின் இணை நிறுவனர். கேஷவ் பிரவாசி அமேசானில் பணியாற்றியவர். நிதின் பாபெல் ஐப்சாசில் இருந்தவர். ஷிஷீர் மோடி இந்தியாரீட்ஸ்.காமில் இருந்தவர்.

ஆம்னி (Omni ) சுற்றுப்புறங்களுக்குள் நெருக்கமான சமூகங்களை உருவாக்க உதவும் நுகர்வோர் இணைய நிறுவனம். அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் பயன்படக்கூடிய உள்ளூர் அளவிலான தகவல்களை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இணை நிறுவனர் ஜேக்சன் பெர்னாண்டஸ் தனது குழு விற்பனை நிறுவனம் கையகப்படுப்படுத்தப்பட்ட பிறகு ஸ்னேப்டீலில் துணைத்தலைவராக இருந்தவர். அதற்கு முன்னர் அவர் இந்தியாவி. வெகோ.காமை அமைத்து நிர்வகித்தார். இணை நிறுவனர் பாலமுருகன் பாலசுப்பிரமணியன் பிட்ஸ் பிலானியைச்சேர்ந்தவர். சமூக ஊடகம், இ காமர்ஸ் ஆகிய துறைகளில் சேவைகளை உருவாக்கி இருக்கிறார்.

19. பிளவுட்.ஐஓ (Ploud.io) மெய்நிகர் தன்மை, ஆழ் கற்றல், உணரும் தன்மை மற்றும் செயற்கை அறிவு சார்ந்த எதிர்கால சேவையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இணை நிறுவனர் ரகு வெங்கடேஷ் தொழில்நுட்ப எல்லைகளை விரிவாக்க விரும்பும் தொழில்நுட்ப தூதராவார். கேம் உருவாக்கம், புதுமை செயல்பாடு என பல துறைகளில் அனுபவம் மிக்கவர். இணை நிறுவனர் பாசில் வி.என் இளம் வயது முதல் டபிள்யூ 3 கிராபிக்ஸ், ஆப்சூட், ஸ்கெட்ச்மாங்க்.காம் உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களில் தொடர்பு கொண்டுள்ளார்.

20. குஸ்டன் டெக்னாலஜிசீன் குஸ்டன் (Qustn Technologies’ Qustn) மொபைல் அடிப்படையிலான எஸ்.ஏ.ஏ.எஸ் மேடையாகும். நிறுவனங்கள் தொலை தூர ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உதவுகிறது. இது விற்பனை மற்றும் லாபத்திற்கு வழிவகுக்கிறது.

இணை நிறுவனர் மிரிகாங்க் திரிபாதி பல நிறுவனங்களை துவக்கியவர். தொலைதொடர்புத்துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஆலிவர் வைமேன் மற்றும் ரிலையன்ச் இன்போகாம், ஸ்விஸ்காம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டுள்ளார். இணை நிறுவனர் சச்சின் குரோவர் யாஹு சர்வதேச மொபைல் முகப்பு பக்கத்தை நிர்வகித்தவர். மைக்ரோசாப்ட், யாஹூ, சத்யம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

21. சத்வா மெட்டெக்கின் (Sattva MedTech) சத்வா ஃபெடல் லைப், ஒரு கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய மருத்துவ சாதனமாகும். நவீன சென்சார்கள் மூலம் உடல்நல தரவுகளை சேகரிக்கிறது. இந்திய சூழலுக்காக உருவாக்கப்பட்ட இந்த சாதனம் உடலுக்குள் ஊடுருவும் தேவை இல்லாதது மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான ஐ.இ.சி தர நிர்ணயத்தை பூர்த்தி செய்பவை.

இணை நிறுவனர்கள் வைபவ் ஜோஷி மற்றும் சுமேத் கவுல்காத் பிட்ஸ் கோவாவில் மின்னணு பொறியியல் பயின்றவர்கள். நியூ வென்சர் கிரியேஷன் புரோகிராம் மற்றும் ஜனா கேர் போன்ற ஸ்டார்ட் அப்களில் செயல்பட்ட அனுபவம் மிக்கவர்கள்.

22. சேவ் இந்தியன் கிரைன்.ஆர்க் (Save Indian Grain.org )நவீன தானிய சேமிப்பு வசதி, நீடித்த சந்தை, சிறு விவசாயிகளுக்கான கிளஸ்டர் வரைபடங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள சமூக தொழில் நிறுவனமாகும்.

நிறுவனர் அனுராக் அவஸ்தி வாஷிங்டன்னில் லாப நோக்கில்லா அமைப்புகளில் பணியாற்றியவர். ரோட் ஐலாண்ட் பல்கலையில் இருந்து தணிக்கை துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

23. ஷேப்கிரஞ்ச் (Shapecrunch ) 3 டி பிரிண்டிங் மூலம் ஷூக்களை வாங்கும் அனுபவத்தை மாற்றி அமைக்கிறது. பலர் தட்டை பாதம், பிலானடர் பாஸ்கிடிஸ் மற்றும் குதிகால் வலியால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு ஏற்ற தீர்வுகளை இது அளிக்கிறது.

நிறுவனர் குழுவில் ஜதின் சர்மா, சிதின் காந்தி மற்றும் ஜிதேன் சைனி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஜதின் மற்றும் நிதின் பொறியியல் வல்லுனர்கள். பிராடக்ட் டிசைன் மற்றும் 3டி பிரிண்டிங்கில் அனுபவம் உள்ளவர்கள். ஜிதின் பிட்ஸ் -ல் பயின்றவர். மெஷின் லேர்னிங்கில் ஆர்வம் உள்ளவர். அமிதாப் நாக்பால் இவர்களின் வழிகாட்டி மற்றும் ஏஞ்சல் இன்வெஸ்ட்டர்.

24. ஸ்மார்ட் ஸ்கொயர் டெக்னாலஜிசின் (Smart Square Technologies) செயலியான கியூரிஃபை (CUREFY )முன்னணி மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுன் போன் அல்லது வீடியோ மூலம் உரையாட வழி செய்கிறது. முன்னணி மருத்துவமனையில் உள்ள டாக்டர்களின் ஓய்வு நேரத்தை திரட்டி அவர்களை எளிதாக அணுக வழி செய்கிறது.

இணை நிறுவனரான ராகவ் சேகல் ஐஐஎம் அகமதாபாத்தில் பயின்றவர். மருத்துவம், ரிடைல் மற்றும் நிதி ஆகிய துறைகளில் 8 ஆண்டு அனுபவம் மிக்கவர். இணை நிறுவனர் மானக் அகர்வால் ஐதராபாத் ஐஎஸ்பியில் பயின்றவர். சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேரில் அனுபவம் மிக்கவர்.

25. பாட்டில் லேட் டெக்னால்ஜிசின் (Bottle Lab Technologies ) செயலியான ஸ்மார்ட்கியூ (SmartQ ) தொழில்நுட்ப பூங்காக்களில் உள்ள நிறுவன ஊழியர்கள் உணவு மையங்களின் நீண்ட வரிசையை தவிர்க்க உதவுகிறது.

இணைநிறுவனர் கிருஷ்ண வாலே ஐஐஎம் கொல்கத்தாவில் பயின்றவர். கொலம்பியா ஆசியாம்ஹைனிகன் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களில் விற்பனை மற்றும் பிராண்ட்களில் அனுபவம் உள்ளவர். இணை நிறுவனர் அபிஷேக் அசோக் பெங்களூரு ஐஐஎஸ்சியில் பயின்றவர். இண்டெல் நிறுவனத்தில் பணியாற்றியவர். இணை நிறுவனர் சுஜீத் லால்வாணி சூரத் என்.ஐ.டியில் பயின்றவர். விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் அனுபவம் உள்ளவர்.

26. ட்ரு செமண்டிக்ஸ் லேப் (TrueSemantic Labs ) நிறுவங்கள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை டிராக் செய்து மேம்படுத்த உதவுகிறது.

நிறுவனர் கல்யான் மான்யம் இன்னோவா ஹெல்த் சிஸ்டம்ஸ், 2202, இண்டியாராக்ஸ்.காம், 2006 மற்றும் மோஜோஸ்டிரீட் ஆகிய நிறுவனங்களை துவக்கியவர். மூன்றுமே கையகப்படுத்தப்பட்டு விட்டன. சிலிக்கான் வேலி டேட்டா மேனேஜ்மெண்ட் நிறுவனமான சோலிஸ் டெக்னாலஜிசில் விற்பனைக்கு பொறுப்பு வகித்துள்ளார்.

27. டிரக்சுமோ (TruckSumo ) இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கான திரட்டியாகும். இது தொழில்நுட்பம் மூலம் வர்த்தக நிறுவனங்களை சரக்கு சேவை அளிப்பவர்களுடன் இணைக்கிறது.

இணை நிறுவனர் அருண் ராவ், ஐஐடி கராக்பூரில் பயின்றவர். இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இணை நிறுவனர் நிதின் பாலே பைதிபிரைஸ்.காம் ( BuyThePrice.com) சிடி.ஓவாக இருந்தவர். சேஷாதி.காம் (SayShaadi.com ) நிறுவனர்.

28. அப்ஷாட் (Upshot ) நிறுவனங்கள் தங்கள் பயனாளிகளுடன் தொடர்பை அதிகரித்து அவர்களை தக்கவைக்கவும், லாபம் ஈட்டவும் வழி செய்யும் மொபைல் மேடையாகும். இதன் முழுமையான மொபைல் மார்க்கெட்டிங் மேடை பயனாளிகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வழிசெய்கிறது.

இதன் நிறுவனர் பரத் லிங்கம் ஐஐடி சென்னையில் பயின்றவர். எக்ஸ் கிளப் லேப்சை ([x]cube Labs) நடத்தி வருகிறார். மகிந்திரா சத்யம், பாண்டோரா டெக்னாலஜிஸ் மற்றும் காலெட்ஜ் இன்போடெக்கில் பணியாற்றி இருக்கிறார்.

29. விட்டி மொபி சிஸ்டம்சின் ( Vitymobi Systems) மொபிபுரோப் (MobiProbe) ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்சுக்கான கிராஷ் கண்காணிப்பு வசதியாகும்.

நிறுவனர் மணீஷ் குமார் இதன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியாளரான இவர் சாப்ட்வேர் மற்றும் மொபைலில் ஆறு ஆண்டு அனுபவம் மிக்கவர்.

30. ஊடூ ( Voodoo) கையில் உள்ள டிஜிட்டல் உதவியாளராகும். மொபைலில் உள்ள செயலிகளுடன் ஒருங்கிணைந்து நல்ல டீல்கள் பெற, விலை ஒப்பிட, கூப்பன்கள் பெற மற்றும் ரேட்டிங்ஸ், பரிந்துரை வழங்க உதவுகிறது.

இணை நிறுவனரான மோகித் மிட்டல் ஐஐடி சென்னையில் பயின்றவர். நான்கு நிறுவனங்களை துவக்கியுள்ளார். இவற்றில் பிரிபர்ன் மற்றும் பர்ர்ன் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இணை நிறுவனர் விஜயசிம்மரெட்டி தேவாரப்பள்ளி ஐஐடி கராக்பூரில் பயின்றவர். ப்ரிசார்ஜால் வாங்கப்பட்ட பிரிபர்ன் இணை நிறுவனரும் கூட.

டெக்ஸ்பார்க்ஸ் 2015 ல் காட்சி விளக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 30 நிறுவனங்கள் இவை. வரும் ஆண்டுகளில் இவற்றின் மீது ஒரு கண் வைத்திருங்கள்.

டெக் 30 நிறுவங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து வாக்களிக்க:http://tinyurl.com/pvcyw