மணல் சிற்பங்கள் படைக்கும் மண்ணின் மைந்தர்கள்

0

முன்பு அவர் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவிகளை சரி செய்யும் பணியில் இருந்தார். அவரது கருவிகளை அவரது வியர்வை நனைக்கும். ஆனால் அவை நனையாமல் காப்பாற்ற,அவற்றை காகிதத்தில் சுற்றி,வீட்டிற்கு எடுத்துச் செல்வார். ஏன் என்றால் அவரது வாழ்க்கை அவற்றை நம்பித்தான் இருந்தது. தனது நாட்களை பற்றிய உணர்வில்லாமல் அவரால் அவற்றை கடக்க இயன்றது. ஆயினும் உள்ளே அவர் உடைந்து நொருங்க, அவருக்கு ஒரு எண்ணம் போதுமானதாக இருந்தது. அது, தனது கருவிகள் மட்டும் தான் தனக்கானது என்ற எண்ணம்.

ஆனால் அவை அவரை வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பதை அன்று அவர் அறியவில்லை.

மற்ற நாட்களை போன்று, அன்றும் தனது வேலையை செய்யும் பொழுது, அந்த காகிதம் அவர் கண்ணில் பட்டது. திடீர் என அவரது குழந்தை நாட்கள் அவரது கண்ணில் மின்னி மறைந்தது.

narayan
narayan

நாராயண்

நாம் அனைவரும் செய்யப்பட்டது களிமண்ணில் என்றால் நாராயண் சாஹூ செய்யப்பட்டது, மின்னும் தங்க மணலால். ஒரிசாவில், தனது கிராமத்தின் ஓரத்தில் இருந்த கடற்கரையில், சந்தோஷமாக நின்றிருந்தார் நாராயண். கையில் அவர் முதன் முதலாக ஜெயித்த கோப்பை. மணலில், ஜகன்னாதர் சிலை செய்ததற்காக, அவருக்கு வழங்கப்பட்ட கோப்பை அது. அனைவர் கண்களை கவர்ந்த படி, 4 நாட்கள் மணலில் நின்றது அச்சிலை. அப்போட்டியில் பெற்ற வெற்றி அவர் கண்களில் மின்னியது. மணலை இரவு பகலாக செதுக்குவதை தவிர வேறு ஒன்றும் அவர் அறியவில்லை.

போட்டியின் அளவு பெரிதாக பெரிதாக, அவர் பெற்ற கோப்பைகளின் அளவும் பெரிதாகின. தன்னை அவை பயமுறுத்த, எந்த ஒரு தருணத்திலும், நாராயண் அனுமதிக்கவில்லை. ஒரிசாவில், மணலில் சிற்பங்கள் செதுக்குவது என்பது, மிகவும் நேசிக்கபடும் ஒரு கலை. சுதர்ஷன் பட்னாயக் போன்றோர் அங்கு மண்ணின் மைந்தர்கள் ஆவர். ஒரிசாவில் மணலை வைத்து மக்களை மகிழ்விப்பது எப்படி என நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்.

ஆனால் நாராயண் எதிர்கொள்ள இருந்த போட்டியை பற்றி அவர் அறியவில்லை. ஒரிசாவை விட்டு வெளியே செல்லாத அவர், மேற்கில் தனது திறமையை எப்படி பறை சாற்றுவது என்பதை அறியாவிடினும், தன்னால் இயலும் என்ற நம்பிக்கை அவர் மனதில் நிறைந்திருந்தது.

2005இல் தான் மும்பை வந்தது எதற்கு? தான் தற்போது செய்வது என்ன, தன் கனவுகள் எதை சுற்றி இருந்தது, என அனைத்து நிகழ்வுகளும், அந்த காகித்ததின் மூலம் மீண்டும் நினைவிற்கு வந்தது.

கனவுகளின் நகரமான மும்பை மற்றவர்களை போன்று நாராயணணுக்கும், காற்றில் தான் மணல் கோட்டைகள் கட்ட முடியும் எனஅழுத்தியது. அவர் மும்பையில் தட்டாத கதவுகள் இல்லை. ஆனால் அனைவரும் ஒரே பதில் அளித்தனர். அது, அவர் திறமை வீண் என்பது.

மாதம் 2500 கொடுக்கும் வேலைகளை முதலில் அவர் செய்தார். அவர் கனவு நனவாவது ஒரு புறம், கதறும் வயிறு மறுபுறம் என அவரது வாழ்க்கை, ஒரு திருப்பத்திற்காக காத்திருந்தது. அந்த திருப்பம் அன்று, அந்த காகித வடிவில் அவருக்காக காத்திருந்தது. அதில் கோவா வில் நிகழும் மிகப்பெரிய மணல் சிற்ப போட்டி பற்றிய அறிவிப்பு இருந்தது.

அந்த போட்டியின் பின்னணியில் இருந்தவர், ஜெர்ரி ஜோஸ். அவர் ஒரு குறிக்கோளை நோக்கி பயணப்பட்டிருந்தார். அது, நாராயண் எண்ணத்திற்கு ஒத்தாக இருந்தது.

jerry
jerry

ஜெர்ரி

"தொலைதொடர்பு சமந்தமாக ஆலோசனைகள் வழங்கும் நிறுவனத்தில் எனது வேலை இருந்தது. ஆனால் அதை ராஜினாமா செய்து விட்டு,கலைகள் மீதான எனது காதலை தொடரும் வண்ணம், ஜே ஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்ற்கு நான் சென்றேன். அங்கு நான் சந்தித்தது, ஒரு மணல் சிற்பக் கலைஞரை. சிறிது ஏமாற்றம் இருந்தாலும், அவரது படைப்பை, எனக்கு மின் அஞ்சல் அனுப்பும் படி கூறி விட்டு நான் எனது வீட்டிற்க்கு வந்து விட்டேன்".

ஆனால் அவரது, புகைப்படங்களை பார்த்த பின்பு, வேறு ஒரு புதிய அனுபவம் எனக்கு கிடைத்தது. எனது, ஆர்வம் அதிகரித்து, ஒரு புதிய உலகத்தினுள் நான் பயணப்பட்டேன்.

அவர் கண்டறிந்த உலகம் சிறியதாகவும், சிலர் மட்டுமே வசிக்கும் இடமாகவும் இருந்தது. சுதர்ஷனின் மறுபெயர் மணல் சிற்பம் எனலாம். அவரது கலை வெளிநாடுகளில் மதிக்கபட்ட அளவு, உள்ளூரில் அதற்க்கு வரவேற்ப்பு இல்லை.

இதனை ஜெர்ரியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பல திறமை மிக்க கலைஞர்கள் இருந்தும், அவர்கள் எண்ணம் நிறைவேறும் வழி புலப்படவில்லை.

"எனது நிறுவனம் எனது கருத்தில் உதித்ததாகும். எனது கலைஞரிடம் ஆர்வம் ஆற்றல் இருந்தது, ஆனால் சரியான பாதை இல்லை. எனவே அவர்களுக்கான பாதை வகுத்து, அவர்கள் ஆற்றலை மெருகேற்ற நான் முடிவெடுத்தேன்.

மும்பை மற்றும் புனேவில் இருந்து மாணவர்களை அவர் கோவாவில் இணைத்தார். அங்கு தான் புதிய கலைகளுக்கு வரவேற்ப்பு அதிகம் இருந்தது.

கோவா சுற்றுலாத்துறை, கண்டோலிம் கடற்கரையில் கடைபோட அனுமதி அளித்தது. "அதுதான் எனது கதை. எங்களுக்கு அனுமதி கிடைத்தது, எங்கள் கலைஞர்கள் அற்புதமான மணல் கோட்டைகள் அமைத்தனர். அவை மிகுந்த வரவேற்பை பெற்றன. மேலும் உலகம் முழுதிலிருந்தும், எனக்கு பல மணல் சிற்ப கலைஞர்கள் மின் அஞ்சல் அனுப்பினர். இந்தியா வர விருப்பம் என்றும், யாரை அணுகுவது என்று இது வரை தெரியவில்லை என்றும் கூறினர்". எந்த பின்புலமும் இன்றி, தனது மனதை மணல் சிற்பத்திலும், சிற்பக் கலைஞர் மீதும், அவர்கள் ஆற்றல் மீதும் ஜெர்ரி வைத்தார்.

சந்தித்த வேளை

ஜெர்ரியை சந்திக்க நாராயண் முயற்சி செய்த போது அவர், கோவா செல்லவிருந்தது தெரிந்தது. கடைசி நிமிடத்தில், தனது கண்காட்சியில், நாராயணை, சேர்க்க முடியாததால், தான் மீண்டும் மும்பை வந்த உடன் அவரை சந்திப்பதாக கூறிவிட்டு ஜெர்ரி கோவா பயணமானார்.

பின் கூறியது போல, மும்பையில் உள்ள மாலில், நாராயணை அவர் சந்தித்தார். அவர் எவ்வளவு பயந்தவர் என்பதும் கண்கூடாக தெரிந்தது.

"நான் உள்ளே அனுமதிக்க படுவேன் என்றே நம்பவில்லை. இங்கிருந்து விரட்டப்பட்டு தான் இருக்கின்றேன்." என்கிறார் நாராயண். மேலும் இருவர் மனம் வேண்டுவதும் ஒன்றே என்பதை இருவரும் அறிய அதிக நேரம் ஆகவில்லை.

அன்றுமுதல் தனது சுத்திகரிப்பு இயந்தரத்தை சரி செய்யும் பணியை நாராயண் அன்றோடு துறந்தார்.

இருவரும் இணைந்து, மணல் சிற்பக் கலையில் குறிபிடத்தக்க பெயர்களோடு பணியாற்றியுள்ளனர். அதில் முக்கியமானவர், "சைமன் ஸ்மித்". "உலகின் ஆசிரியர்", "மக்களின் சாம்பியன்" என்று அன்போடு அழைக்கபடுபவர், தனது குளிர் காலங்களை கோவாவில் செலவிடுவதை பலவருட பழக்கமாக கொண்டிருந்தார். ஜெர்ரியின் முயற்சிகளை பற்றி அறிந்து, அவர் கண்காட்சிக்கு வந்து பார்த்து வியப்படைந்துள்ளார்.

அக்கணமே, "சாண்ட் கல்ட்" நிறுவனத்தோடு கைகோர்த்து, அவர்களது கலைஞர்களுக்கு பயற்சி அளிப்பதாக உறுதி அளித்தார்.

இந்தியாவில், மணல் சிற்பம் செய்ய தேவையான பொருட்கள் கிடைப்பது கடினம் என்பதால், கலைஞர்கள், மிருதுவான மணலில் சிற்பங்கள் அமைப்பர். அது நீடித்து விளங்காது. ஆனால் உறுதியான மணலில் சிற்பங்கள் அமைத்தால் அவை, பல மாதங்கள் அவ்வாறே நிற்கும். அந்த மணல் ஒரு லோடு பெற, 80,000 முதல் 90,000 வரை செலவாகும்.

" எனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தை வைத்து கடினமான மணலில் சிற்பம் செய்வது போன்று கற்பனை கூட செய்ய இயலாது. சாண்ட் கல்ட் எனக்கு பல வாய்ப்புகளை அளித்துள்ளது. எனது முன்மாதிரி சைமனை சந்திப்பதும் அதில் அடக்கம்", என்கிறார் நாராயண்.

கண்காட்சிகள் வருடா வருடம் தொடர, நாராயண் சைமனிடம் மணல் சிற்பங்கள் பற்றி பல பாடங்கள் கற்றார். மேலும் சிம்த், 6 மாதம் நீடித்து நிற்கும் ஒரு சிற்பத்தை அமைக்க, அதை அருகில் இருந்து ஆச்சர்யமாக கண்டுகளித்தார் நாராயண்.

சைமனின் தனித்திறமை 20 அடி உயர மணல் கோட்டைகள் அமைப்பதில் இருந்தது. நாராயணின் குரு பக்தியில் வியந்து, தனது திறமைகள் அனைத்தையும் அவருக்கு சைமன் கற்றுத்தந்தார். அதற்கு பலனாக அவர் கேட்டது, உலகின் மிகச்சிறந்த மணல் சிற்பியாக அவர் வர வேண்டும் என்பதே. அங்கிருந்து தனது நாட்டிற்க்கு செல்லும்போது, நாராயணுக்கு பரிசாக தான் உபயோகித்த "ஆக்ஸ் டூலை" தந்து சென்றார் சைமன்.

தற்போது ஜெர்ரி மற்றும் நாராயண் இணைந்து, 6 வருடமாக உழைத்து வருகின்றனர். வாழ்கையை வரும் வழியில் ஏற்றுக்கொண்டு, கலையில் மறவாது மூழ்கித்திளைத்து வருகின்றனர்.

தங்கள் சிற்பங்களை பார்த்து வியக்கும் மக்கள், தங்கள் கலைக்கு தகுந்த மரியாதை அளிப்பதில்லை என்பது ஜெர்ரியின் கருத்து. மிகுந்த, பொருள் பணம், நேரம் ஆகியவை இந்த சிற்பங்களின் உருவாக்கத்தில் இருப்பதை அவர்கள் உணர மறுகின்றனர் என்கிறார் அவர். அதோடு குடித்து விட்டு, பாட்டில்களை சிற்பங்கள் மீது எறிவதும் அவ்வபோது நிகழும் ஒன்று.

எங்கள் சிற்பங்களை புகைப்படம் எடுப்பவர்களிடம் நன்கொடை பெற ஒரு பெட்டியை அதன் பக்கத்தில் வைத்திருப்போம். அதற்காக ஒரு பணியாளர் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் எப்போதும் சிற்பத்தின் பக்கத்தில் இருப்பார்கள்.

நன்கொடை பெட்டியை தாண்டி, அவ்வப்போது, ஹோட்டல்கள், நிகழ்சிகளை ஒருகிணைக்கும் நிறுவனங்கள், மற்றும் மால்களிடம் இருந்து இவர்களுக்கு தங்கள் இடங்களில் சிற்பங்கள் செய்யச் சொல்லி வாய்ப்புகள் வருவதுண்டு. ஆனால் அவை எப்போதும் நிகழ்வதில்லை. அப்படி சமீபத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி,

"ஸ்டார் மூவீஸ் செலக்ட்" தங்களது படமான "கிராண்ட் புத்தா பெஸ்ட் ஹோட்டலை" விளம்பரபடுத்த அதன் மாதிரியை மும்பை பீனிக்ஸ் மாலில் அமைக்க இவர்களை அணுகியுள்ளனர்.

தற்போது சாண்ட் கல்ட் நிறுவனத்திற்கு இரண்டு குறிகோள்கள் உள்ளன. ஒன்று மணல் சிற்பக் கலையை காப்பது. மேலும் புற்றுநோய் மூலம் சிரமப்படும் நோயாளிகளுக்கு, தங்கள் நன்கொடையில் இருந்து ஒரு பகுதியை கொடுத்து உதவுவது இரண்டாவது. இது சைமனின் மனதிற்கும் மிக நெருக்கமான ஒரு நோக்கமாகும்.

"அன்று ஒரு சனிக்கிழமை. வழக்கமாக வரும் 7000 - 8000 நன்கொடையை தாண்டி அன்று 45000 எங்களுக்கு கிடைத்தது. அன்று முதல் இப்பணியை நாங்கள் செய்து வருகின்றோம்.

தற்போது மும்பையில், ஆர் - சிட்டி மாலில், " சாண்ட் ஆர்ட் ஸ்கொயர்" என்ற பெயரில் நாராயணின் மணல் கோட்டை உள்ளது. மேலும் அங்கு உள்ள புகைப்பட கூண்டில் நீங்கள் உங்கள் விருப்பம் போல புகைப்படம் எடுத்துகொள்ளலாம்.

" மணலின் மீது மனது வைத்து ஒரு தொழில் செய்து பிழைக்கும் முதல் நபர் நானாக தான் இருப்பேன். நான் இந்த முடிவு எடுக்காமல் இருந்தால் நாராயண் போன்றோருக்கு, உரிய மரியாதை கிடைத்திருக்காது."

இதை நாராயண் ஆமோதிகின்றார்." நான் ஜெர்ரியை சந்திக்கும் வரை மனதுடைந்து இருந்தேன். அவர் இல்லை என்றால், என் வாழ்வு முழுமை பெற்றிருக்காது. என் வாழ்கையை நான் சாண்ட் கல்ட்டிற்கு அர்பணிகின்றேன். மேலும் அனைத்து கலைஞர்களையும் கனவு காண்பதை நிறுத்தாதிர்கள் என வேண்டுகிறேன்".