96 வயதில் நான்காம் வகுப்பில் சேர்ந்திருக்கும் மூதாட்டி!

0

கேரளாவின் செப்பாட் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கல்வி வழங்கும் திட்டத்தால் உந்துதலளிக்கப்பட்ட கார்த்யாயனி அம்மா, சிறுவயதில் நிதி நெருக்கடி காரணமாக பள்ளிப்படிப்பைக் கைவிட்டவர். இந்த முயற்சி வாயிலாக படிப்பைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கல்வியறிவு வழங்கும் திட்டத்தை மேற்கொள்ளும் குழு ஒன்று கேரளாவின் செப்பாட் மாவட்டத்திற்குச் சென்றது. அப்போது அவர்களது முயற்சி ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்து அவர்கள் சற்றும் அறிந்திருக்கவில்லை. லக்‌ஷம் வீடு காலனியில் நடத்தப்பட்ட இந்த திட்டத்தில் பங்கேற்ற பலரில் 96 வயது மூதாட்டியும் ஒருவர். இவர் இந்த முயற்சியால் உந்துதலளிக்கப்பட்டு நான்காம் வகுப்பில் தனது பெயரை பதிவு செய்துகொண்டார்.

ஒரே மாதிரியான கருத்துக்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்த கார்த்யாயனி அம்மா, மாநிலத்தின் வயது முதிர்ந்த மாணவியாகியுள்ளார். பத்தாம் வகுப்பை நிறைவு செய்யவேண்டும் என்பதே இவரது விருப்பம் என ‘தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது. தற்சமயம் கணிதம் கற்றுவருகிறார். மலையாள எழுத்துக்களுக்கும் அறிமுகமாகியுள்ளார்.

மாநில அரசாங்கம் நூறு சதவீத கல்வியறிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கையில் கார்த்யாயனியின் இந்த நடவடிக்கை கல்வியின் மீது ஆர்வம் காட்டாத பலருக்கும் உந்துதலாக அமைந்துள்ளது. இவரது 60 வயது மகளான அம்மிணி அம்மா சமீபத்தில் பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை நிறைவு செய்த சம்பவமே கார்த்யாயனிக்கு உந்துதலளித்துள்ளது.

முதியோர்களுக்கான அரசாங்க இருப்பிடமான லக்‌ஷம் வீடு காலனியில் கார்த்யாயனி கல்வி கற்று வருகிறார். அவரைக் கண்டு உந்துதலளிக்கப்பட்டு முப்பதுக்கும் மேற்பட்ட முதியோர் படிக்க விருப்பம் தெரிவித்து தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டுள்ளனர் என ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது. மனம் தளராமல் இருக்கவேண்டும் என்பதற்கும் வயது ஒரு பொருட்டே அல்ல என்பதற்கும் கார்த்யாயனியின் உற்சாகம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

கேரளாவில் 94 சதவீதம் கல்வியறிவு இருப்பதாகவும் இங்கு வசிக்கும் 3,34,06,061 பேரில் 2,81,35,824 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்றும் ஒரு அரசாங்க கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதற்கு முன்பே கேரள மாநிலத்தைச் சேர்ந்த தங்கும் வசதியுடன்கூடிய பள்ளி ஒன்று பழங்குடி குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, தங்குமிடம் போன்றவற்றை அளித்த சம்பவமும் இந்த மாநிலத்தைச் சேர்ந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சாதி மற்றும் மதம் தொடர்பான தகவல்களை நிரப்பவேண்டிய இடத்தை 1.2 லட்சம் மாணவர்கள் காலியாக விட்ட சம்பவமும் இந்த மாநிலத்தின் முன்னுதாரண முயற்சிகளாகும்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL