நீங்கள் அழகாக, உங்கள் கைப்பேசி போதும்..!

0

நமக்கு தேவைப்படும்பொழுது, தொலைப்பேசியில் சில பொத்தான்களை தட்டினால், நம் கதவருகில் கார் ஓட்டுனர் முதல், துணி தைப்பவர் வரை அவர்கள் சேவைகளை நமக்களிக்க காத்திருக்கும் காலம் இது. இந்த ஒரு வளர்ச்சியே, ரிச்சா சிங், "பிக் ஸ்டைலிஸ்ட்" (BigStylist) துவக்க காரணமாக அமைந்தது.

"க்ரோஃபர்ஸ்", "டிரைவ் யு", "அர்பன் டைலர்" போன்று, அழகுக்கலை நிபுணர்களுக்காக, தேவைக்கு ஏற்றபடி ஒரு சந்தையை, பிக்ஸ்டைலிஸ்ட் நிறுவனம் உருவாக்கி தருகின்றது. இதன் மூலம், நம் இல்லத்தின் அருகில் உள்ள தேர்ச்சி பெற்ற, அழகுக்கலை நிபுணர்களின் சேவை நமக்கு தேவையான பொழுது கிடைக்கும்.

தற்போது அழகுகலை தொடர்பான சேவைகள், இந்தியாவில், பல இடங்களில் சிதறியும், கிடைப்பதற்கு சிரமமாகவும் இருகின்றது. ஒவ்வொரு முறை பயணிக்கும் பொழுதும், தங்களை அழகு படுத்தும் பொறுப்பை, நம்பி ஒப்படைக்க தகுந்த அழகுகலை நிபுணர் கிடைப்பது, ரிச்சா மற்றும் தீப்ஷிகாவிற்கு கடினமாக இருந்தது.

'பிக்ஸ்டைலிஸ்ட்' பிறந்த கதை

ரிச்சா, ஐஐடி கரக்பூரில் தனது பட்டபடிப்பை படிக்க சென்ற போது, அங்கு மலிவு விலையில், நல்ல அழகு நிலையங்கள் கிடைப்பது அரிதாக இருந்ததை உணர்ந்தார். அவர் கூறுவது "அங்கு இருந்த அழகுநிலையங்கள் எங்களுக்கு பிடிக்காமல், கொல்கத்தா வரை பயணித்து, அங்கு சிகைஅலங்காரம், செய்து கொள்வதுண்டு".

அந்த நிலை அவர் படித்து பட்டம்பெற்று, வேறு பல நகரங்கள் சென்றபோதும் தொடர்ந்தது. வங்கி பணியாளராகவும் , ஆலோசகராகவும், அவருக்கு இருந்த வேலை நேரம், அழகு நிலையங்களுக்கு அவர் செல்வதை மிகக் கடினமாக்கியது. அந்நிலை இன்றும் உள்ளது.

பிக்ஸ்டைலிஸ்ட் துவங்குவதற்கு முன்பு, வணிக ஆலோசகராகவும், ஆய்வாளராகவும், "கேப்பிடல் ஒன்" மற்றும், "ஆலிவர் வைமன்" நிறுவனங்களில், அவர் பணிபுரிந்து வந்தார். மேலும், சின்மயா ஷர்மா நிறுவனத்தின் இயக்கங்களையும், அனுராக் ஸ்ரீவத்சவா நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவிலும் இணை நிறுவனர்களாக இணைந்தனர்.

சின்மயா ஷர்மா, பெங்களூரில், ஐஐடி, ஐஐஎம் மில் படித்து, பேயின் அண்ட் கம்பனியில், 4 வருடம் வேலை செய்த அனுபவம் கொண்டவர். அதே போல், அனுராக் ஸ்ரீவத்சவா, ஹைதராபாத்தை தலைமையாக கொண்டு இயங்கும் ஏடிஜி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

இந்த துறையில் இருந்த தேவைகளை உணர்ந்த போது, மூவரும் சேர்ந்து சிறிது ஆய்வுகளை மேற்கொண்டனர். அதை பற்றி சின்மயா கூறுகையில், "உங்களுக்கு தேவையான அழகு தொடர்பான சேவைகளை உங்கள் இல்லத்தில், உங்கள் நேரத்திற்கு ஏற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட அழகுக்கலை நிபுணர்கள் மூலம் உங்களுக்கு அளிக்கும் ஒரு தளமாக நாங்கள் இயங்குகின்றோம்" என்றார்.

நிறுவனத்தின் வளர்ச்சி:

மும்பையில் மே 2015யில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது மாதம் ஒன்றிற்கு 100க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. துவங்கபட்டதில் இருந்து, நிறுவனர்களின் சொந்த முதலீட்டு நிதியில் இயங்குகிறது இந்நிறுவனம். இது பற்றி ரிச்சா கூறுகையில், எங்கள் நிறுவனத்தை விரிவு படுத்தவும், சேவைகளை மேம்படுத்தவும், முதலீட்டாளர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மேலும், எங்கள் நிறுவனத்தில் அழகுக்கலை நிபுணரை நியமிக்கும் முன்பு, அவரது சான்றுகள் சரிபார்க்கப்படுகிறது.

போட்டி மற்றும் வாய்ப்புகளின் அளவு

பிக்ஸ்டைலிஸ்ட் தற்போது, "வேனிடிகியூப்", "புல்புல்", போன்ற நிறுவனங்களோடு போட்டி போடுகின்றது. வேனிடிகியூப் என்பது என்சிஆர் ரில், 90 நிமிடங்களுக்குள் உங்கள் அழகு தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனம்.

உணவு, ஆரோக்கியதிற்கு அடுத்தபடியாக, அழகின் மீதுதான் மக்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் செலவிடுகின்றனர். மாதம் ஒன்றிற்கு, 2000 முதல் 3000 ரூபாய் வரை அவர்களுக்கு செலவாகின்றது.

இண்டஸ்ட்ரீ எஸ்டிமேட்ஸ் என்ற நிறுவனம் கூறுவது, இந்தியா போன்ற மிகப்பெரியதொரு பொருளாதாரத்தில், அழகுக்கலை துறை 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்படுகின்றது. தற்போது அது வேகமாக வளர்ந்தும் வருகின்றது.

யுவர் ஸ்டோரியின் நிலைப்பாடு

கடந்த 12 மாதங்களில், "ஆன் டிமாண்ட்" மீதான தேவை, மிக அதிகமாக வளர்ந்துள்ளது. முன்னர் கூறப்பட்டது போல், பெருநகர மக்களுக்கு, கார் ஓட்டுனர், சலவை தொழிலாளி, காய்கறி, மற்றும் எப்எம்சிஜி பொருட்கள், அவர்கள் வீட்டு வாசலில் கிடைக்கின்றது.

இவ்வருடம், ஆன்லைன் அழகு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சந்தை, வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், மற்றும் முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொலைப்பேசியை மையமாக கொண்டுள்ள "வோயோமோ" யுவராஜ் சிங் மற்றும் "டாக்ஸி ஃபார் சூர் " இணை நிறுவனர் அப்ரமேயா விடமிருந்து, முதலீட்டை பெற்றுள்ளது. "மேனேஜ் மை ஸ்பா" தற்போது 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக திரட்டியுள்ளது.

தற்போதைக்கு தேவைக்கு ஏற்ப சேவைகளை அளிக்கும் நிறுவன சந்தை, ஒரு சமநிலை நோக்கி செல்கின்றது. அப்போது அதில் அழகுத்துறை, எவ்வாறு மாற்றமடையும் என்பதை அறிய சுவாரஸ்யமாக இருக்கும்.

இணையதள முகவரி: BigStylist