திருநங்கைகள் சமூகத்தை ஆதரித்து பொட்டு வைத்து, துப்பட்டா அணிந்த பிரபல கிரிக்கெட் வீரர்!

0

புதுடெல்லியின் சாகேட்டில் உள்ள செலக்ட் சிட்டிவாக்கில் நடைபெற்ற ‘ஹிஜாரா ஹப்பா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கவுதம் கம்பீர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்வில் கவுதம் கம்பீர் பொட்டு வைத்துகொண்டு துப்பட்டா அணிந்து பெண் வேடமிட்டு சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான சிந்தனைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளார். 

சமீபத்தில் சட்டப்பிரிவு 377 தொடர்பாக தன்பாலின உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

ஹிஜாரா ஹப்பா LGBTQI சமூகத்தினர் மற்றும் அதன் ஆதரவாளர்களால் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் ’அலையன்ஸ் இண்டியா’ என்கிற அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

’இவ்வாறே பிறந்தோம்’ என்கிற தலைப்பை மையமாகக் கொண்ட இந்த ஆண்டு ஹிஜாரா ஹப்பா நிகழ்வு திருநங்கை சமூகத்தினரை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தகவலை மக்களிடையே பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்துடன் சமூக அநீதியை எதிர்த்துப் போராட அவர்களுக்கு சக்தியளிக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடனான நேர்காணலில் கவுதம் குறிப்பிடுகையில்,

’இவ்வாறே பிறந்தோம்’ என்கிற தலைப்பை மையமாகக் கொண்ட இந்த ஆண்டு ஹிஜாரா ஹப்பா நிகழ்வு திருநங்கை சமூகத்தினரை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தகவலை மக்களிடையே பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்துடன் சமூக அநீதியை எதிர்த்துப் போராட அவர்களுக்குத் தேவையான பலத்தினை அளிக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது,” என்றார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட விளையாட்டிற்காக பிரபல கிரிக்கெட் வீரர் பொட்டு வைத்துக்கொண்டு துப்பட்டா அணிந்துகொண்டார்.

இந்த விளையாட்டில் கம்பீர் ஒரு சுரங்கப்பாதைபோன்ற அமைப்பைக் கடந்து செல்லவேண்டும். இடையில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும். உள்ளே நுழைபவர் ஆணாக இருந்தால் அவர்களுக்கு பொட்டும் துப்பட்டாவும் வழங்கப்படும். பெண்ணாக இருந்தால் ஒட்டு மீசை வழங்கப்படும். இதை அவர்கள் அணிந்துகொள்ளவேண்டும். ஆங்காங்கே அவர்களை நிறுத்தும்போது “இவ்வாறு வேடமிட்டதில் எத்தகைய மாற்றத்தை உணர்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பப்படும் என ’நியூஸ் 18’ தெரிவிக்கிறது.

ஒரு சாதாரண நபர் இந்தியாவில் உள்ள திருநங்கைகளின் உணர்வுகளை ஓரளவிற்கு உணரவேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும்.

கவுதம் கம்பீர் திருநங்கை சமூகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு நிகழ்வில் திருநங்கைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார். இதில் திருநங்கைகள் கம்பீரின் கைகளில் ராக்கி கட்டினார்கள்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL