உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளாவில் அண்டர்வாட்டரில் மீட்டிங் நடத்திய சிஇஓ’க்கள்!

0

கேரளாவில் கோவலம் க்ரோவ் பீச்சில் ஒரு புதுவிதமான கூட்டம் ஒன்று நடைப்பெற்றது. ஐந்து ஐடி நிறுவனங்களின் சிஇஒ’க்கள் கலந்துகொண்ட அண்டர்வாட்டர் கூட்டம் அது. நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 35 நிமிடங்கள் நடைப்பெற்ற அந்த மீடிங், அரேபியக்கடலுக்குள் நடந்தது. அதில் பங்கு கொண்டவர்கள், நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், தண்ணீரை மாசுப்படுத்தக்கூடாது என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாண்ட் சஃபாரி என்ற அண்டர்வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனம், ஹோட்டல் உதய சமுத்ரா உடன் இணைந்து இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. UST Global-ன் தலைவர் ஹேமா மேனன், டாட்டா கன்சல்டன்சி சர்விசின் துணை தலைவர் தினேஷ் பி.தம்பி, ஏவான் மொபிலிட்டி சல்யூசன்சின் சிஇஒ தாமஸ் சச்சாரியா, Neologix-ன் ஷ்யாம் குமார் மற்றும் UDS ஹோட்டல் குழுமத்தின் சிஇஒ ராஜகோபால் ஐயர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

பாண்ட் சஃபாரி-இன் தலைமை இயக்குனர் ஜாக்சன் பீட்டர் கூறுகையில்,

“இந்த கூட்டத்தின் மூலம் சர்வதேச மற்றும் தேசிய திட்டம் வகுப்பாளார்களின் கவனத்தை உலக வெப்பமயமாதல் மற்றும் நீர் மாசு அபாயங்கள் பக்கம் திருப்ப முயற்சித்தோம். உலகின் அதிக புரதச்சத்தின் ஆதாயமாக கடல் பரப்புகள் விளங்குகிறது என்று பலரும் அறியவில்லை,” என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட டிசிஎஸ் தினேஷ் பி.தம்பி இது குறித்து பேசுகையில்,

“கடல் மற்றும் நீர்பரப்புகளை பாதுகாக்க வேண்டியது நம் எல்லாருடைய கடமையாகும். மேலும் சீரழியாமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றார்.

‘Ocean love’ என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வை வருங்காலத்திகலும் இந்த முக்கிய நோக்கத்திற்காக நடத்த ஒருங்கிணப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

கட்டுரை: Think Change India