சிறு நகரங்களில் தங்குமிட வசதி செய்யும் ‘விஸ்டா ரூம்ஸ்’ நிறுவப்பட்ட கதை!

0

அங்கிதா ஷேத், 2006ல், ஸ்டாண்டன் சேஸில் சேர்ந்து தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். சர்வதேச எக்ஸிக்யூட்டிவ் தேடல் நிறுவனமான ஸ்டாண்டன் சேஸில், தொழிற்சாலைகளுக்கு மத்தியிலான முது நிலை ஆணைகளை ஆராயும் வேலை அங்கிதாவிற்கு. ஒன்றரை வருடம் அங்கு பணி புரிந்த பிறகு, தொழில் மற்றும் வர்த்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் கே.பி.ஒ (k.p.o) ஒன்றில் புதிய வேலை கிடைத்து.

அங்கு, அவருடைய வேலை, ஆதார வளங்களின் செயல்பாடு, வேலை வாய்ப்பு மற்றும் பணியமர்த்துதல் துறைகளில் தான். அவருடைய நிறுவனம், மனிதவள மேம்பாடு மற்றும் செயலாளர் தேடலையும் கையாண்டுக் கொண்டிருந்தது. அதில் வர்த்தக சேவைகள், நுகர்வோர் பொருட்கள் துறை,தேடல் பணிகள் ,ஹெச்.ஆர் நிகழ்ச்சிகள் போன்றவையும் அடக்கம். தொழில்முனைவு சார்ந்த வேலையை செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த அங்கிதாவிற்கு இந்த பணி ஒரு சிறப்பான அனுபவமாகவும், உதவியாகவும் இருந்தது.

குழுக்களை அமைப்பதும், தங்கள் வேலைக்கான உரிமையை மக்களுக்கு அளிப்பதிலுமே தன்னுடைய திறமைகள் இருப்பதாய் அவர் உணர்ந்தார். அப்போது, அவரை உற்சாகப்படுத்தும் யோசனையாக உதித்தது தான் ஹோட்டல் ஒருங்கிணைப்பு. அந்த துறையில் இருக்கும் பற்றாக்குறையை உணர்ந்த அவர், அதை பூர்த்தி செய்ய தன்னால் முடியும் என்றும் நம்பினார்.

அப்படி, இந்த வருடம் ஏப்ரலில், பிறந்தது தான் "விஸ்டா ரூம்ஸ்" (vista rooms). சிறு நகரங்களில் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்களை அமைப்பதில் கவனம் செலுத்தும், விஸ்டா ரூம்ஸின், இணை நிறுவனரும், கூட்டாண்மைத் தலைவரும் அங்கிதாவே தான்.

ஐ.நா, அன்னா ஹசாரே.

“நான் ந்யூயார்க்கில் , ‘பேப்பர்லெஸ் கமிட்டி’க்கு வசதிகள் ஏற்பாடு செய்த குழுவிற்கு உதவியாளராக இருந்தேன். அப்போது தான் ஐக்கிய நாடுகளில் சில காலம் பணி புரிய நேர்ந்தது” என்று, மிக எளிமையாக பேசும் அங்கிதா, மும்பை கல்வி அறக்கட்டளையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

“நான் அன்னா ஹாசாரேவை, ராலேகாவ்ன் சித்தியில் சந்தித்தேன், ஆனால், நேரடியாக அவருடன் வேலை செய்யவில்லை. மும்பை, வில்லே பார்லேவில் இருக்கும் அவர்களுடைய குழுவோடு வேலை செய்திருக்கிறேன். அவருடைய கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்துக்கின்றன” என்னும் அங்கிதா, யூத் வாலண்டியர் ஆர்கனைசேஷன்(youth volunteer organization) என்னும் அரசு சாரா அமைப்பில் உறுப்பினரும் கூட.

தொழில்முனைவு

அங்கிதாவின் தமையனும், தந்தையும், நாற்பது வருடங்களாக, ஆப்பிரிக்காவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக இருப்பதால், தொழில் முனைவு அவருடைய இளமைப் பருவத்திலேயே உதயமான எண்ணம் தான்.

விஸ்டா ரூம்ஸ் நிறுவப்படுவதற்கு முன்னர், ஓயோ ரூம்ஸின் மும்பை கிளையின் கையகப்படுத்துதல் துறையின் தலைவராக இருந்தார் அங்கிதா. அந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்தே அங்கு வேலை செய்து, அதன் வெற்றிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் என்றும் அங்கிதா அறியப்பட்டார்.

தொடரும் பயணங்கள்

அதற்குப்பின் தொடங்கியது தான், சக பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடங்களை அமைப்பது. பயணங்களின் மேல் தீராத ஆசைக் கொண்ட அங்கிதாவிற்கு பல பயணங்களில் போது மோசமான அனுபவங்களும் ஏற்பட்டுள்ளது. அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்ட போதும், அந்த அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் அளவிற்கு, அவை அவர் மனதை பாதித்திருக்கிறது.

“நான் எப்போதுமே, பயணங்களின் ரகிகை தான். மறக்க முடியாத அனுபவத்திற்காக, ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பாக திட்டமிடுவேன்” என்கிறார் அங்கிதா. ஒவ்வொரு விடுமுறைக்கு முன்னரும், செல்லவிருக்கும் இடத்தைப் பற்றியும் அங்குள்ள தங்குமிடங்கள் பற்றியும் ஆராய்ந்து அறிவது தான் அங்கிதாவின் வேலையாக இருக்கும். பயணங்களில் போது சில விஷயங்களில் சமரசம் ஆகாதவர் என்றும், பாதுகாப்பான மற்றும் தரமானவைகளையே அங்கிதா தேர்வு செய்வார் என நண்பர்கள் மத்தியில் அவர் புகழ் பரவியுள்ளது.

தினசரி வேலைகள் ஏற்படுத்தும் சலிப்பைப் போக்க, அங்கிதாவும் அவருடைய நண்பர்களும் ஒரு சிறிய இடைவேளை எடுத்திருந்த காலம் அது. அந்த இடைவேளையில் தான் விருந்தோம்பல் துறையில் ஏதாவது வித்தியாசமாகவும், தங்களை உற்சாகப்படுத்துவதாகவும் செய்ய முடிவு செய்தனர். “நாங்கள் இந்தியாவின் சிறு நகரங்களை ஆராய்ந்து, அங்கு பயணிக்கத் தொடங்கினோம். இரண்டு மற்றும் முன்றாவது அடுக்கில் இருக்கும் நகரங்கள் அளிக்கும் சேவை தரத்தில் குறைந்தவையாகவும் , புதுப்பிக்கப்பட வேண்டியவையாக இருக்கும் என நினைத்தோம்” என்று தன் பயணக் கதையை சொல்லத் தொடங்குகிறார் அங்கிதா.

ரயில்கள், பேருந்துகள், கார்கள் என பயணிக்கத் தொடங்கினார் அங்கிதா. ஒன்றரை மாதம் விரிந்த அங்கிதாவின் பயணம், பட்ஜெட் ஹோட்டல்களில் தங்கவும், பயணத்தின் போது வரும் சிக்கல்களையும், சூழ்நிலைகளையும் சமாளிக்கவும் கற்றுக் கொடுத்தது. “அழுக்கான நீர்த்தொட்டி, துவாலைகள் இல்லாத குளியலறையை அனுபவித்த பின்னர், சில சமயம் ஆச்சரியமாக சுத்தமான குளியலறையும், அறையையும் அனுபவிக்க நேரும். அதற்குப் பின்னர் தான், இரண்டாவது மூன்றாவது அடுக்கு நகரங்களுக்கும் திறனும், வளமும் இருக்கிறது என்பதையும், அவை சரியாக இணைக்கப்படவில்லை என்றும் உணர்ந்தேன்” என்று தன் பயண அனுபவத்தைப் நினைவுகூறுகிறார்.

விஸ்டா ரும்ஸ்

ஏப்ரல் 2015ல், இந்தியா முழுக்க இருக்கும் ஹோட்டல்களை ஒருங்கிணைத்து தரமான தங்குமிடங்களை அளிக்கும் நோக்கோடு, ஆன்லைன் விருந்தோம்பல் முயற்சியாக தொடங்கப்பட்டது தான் விஸ்டா ரூம்ஸ். அமித் தமானி, அங்கிதா மற்றும் பிரனவ் மஹேஷ்வரியால் தொடங்கப்பட்டது வி்ஸ்டா ரூம்ஸ். ஒரு சிறு நகரத்தில் இயங்கும் சராசரி ஹோட்டல்களின், பட்ஜெட் அட்டவணையை மாற்றக் கூடிய திறனும், பொறுப்பும் விஸ்டா ரூம்ஸிற்கு இருப்பதாக அவர் நம்பினார்.

அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக, குறைந்த காலத்திலேயே, அறுபது நகரங்களில் ஐந்நூறு ஹோட்டல்களைக் கொண்டு, வளர்ந்துள்ள விஸ்டா ரூம்ஸ், வாடிக்கையாளர்களின் மனதில் அசைக்க முடியாத நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள், கார்ப்பரேட் பயணிகள் மற்றும் பொழுதுபோக்காகவும் யாத்திரை செய்பவர்களும் தான் விஸ்டா ரூம்ஸின் வாடிக்கையாளர்கள்.

முக்கியமான தேவைகளை உணர்ந்து சேவையாற்றுவது தான், விஸ்டா ரூம்ஸின் அடிப்படை வெற்றி ரகசியம். தரமான அம்சங்கள், ஆன்லைன் விற்பனை மற்றும் மார்கெட்டிங்கிற்கு உதவுவது, தொழிநுட்ப ரீதியாக உதவி, செலவுகளைக் குறைத்து திறனை அதிகரிப்பது என ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த முனைகிறது. விஸ்டா ரூம்ஸ், நிச்சயமாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தரமான தங்குமிட ஒருங்கிணைப்பு நிறுவனம் தான்.

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha