ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக சவாரியை பகிர்ந்து கொள்ளும் ‘லிஃப்ட்ஓ’

0

நாட்டில் பெரு நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை எளிமையாக்க, சவாரியை பகிர்ந்து கொள்ளும் கொள்கையோடு ஓலா, உபேர் மட்டுமல்ல இன்னும் பல நிறுவனங்களும் இணைந்துள்ளன. இந்த தளத்தில் அண்மையில் இணைந்துள்ளது லிஃப்ட்ஓ (LiftO). ஆனால் இந்த ஸ்டார்ட் அப் மற்றவற்றை விட வித்தியாசமானது. லிஃப்ட்ஓவில் பயனாளர்கள் கார் சவாரியை மட்டுமல்ல டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்சா சவாரியையும் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் சவாரியை பகிர்ந்து கொள்ள இந்தத் தளம் அனுமதிக்கிறது. பயனாளர்கள் தங்களது விருப்ப சவாரியை லிஃப்ட்ஓ வில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கார், டாக்ஸி அல்லது ஆட்டோ ரிக்சா என எதில் பயணிக்கிறார்கள் என்று பதிய தேவையில்லை(ஓலா, உபேர்,மேரு மற்றம் டேப்கேப் போல). அவர்கள் செல்லும் பாதையில் பயணிக்கும் மற்றொரு பயணியுடன் அவர்கள் சவாரியை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தளம் பொவாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோருக்காக பிரத்யேகமாக இயங்குகிறது. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் 26 முதல் 45 வயதுடையோருக்காகவும், நாள்தோறும் போக்குவரத்துக்காக ரூ.150 முதல் ரூ.250 வரை செலவு செய்பவர்களை மையப்படுத்தியும் தொடங்கப்பட்டுள்ளது லிஃப்ட்ஓ.

அத்தியாயம்

விகேஷ் அகர்வால் மற்றும் நிகில் அகர்வால் பெங்களூரு மற்றும் மும்பையில் சில ஆண்டுகள் வசித்தனர். அவர்கள் நாள்தோறும் 40 முதல் 50 கிமீ தூரம் பயணித்தார்கள். கார்பூலிங்(carpooling) எண்ணம் தோன்றினாலும் அதில் சில சிக்கல்களும், தர்மசங்கடங்களும் இருப்பதை அவர்கள் கண்டனர். இரண்டு முறை பயணத்திற்கு பின்னர், நீங்கள் இது சவாரி பகிர்வு பயணம் என்று நினைக்க மாட்டீர்கள், ஏனெனில் நீங்கள் விரும்பும் வழி அல்லது நேரம் மற்றவர்களோடு ஒத்துப் போகாது. “நடைமுறையில் இருக்கும் இந்த வழியை பொருத்தும் (route match) அல்காரிதத்தை நேரத்திற்கு ஏற்றாற் போல மாற்றினால் இந்தச் சந்தையை பிடித்து விடலாம் என்று நாங்கள் நினைத்தோம். அதைத் தொடர்ந்து நாங்கள் பணியாற்றிய செயலி தான், லிஃப்ட்ஓ” என்கிறார் விகேஷ்.

குழு கட்டமைப்பு

இந்தக் குழுவின் முக்கிய நபர் நிகில், இவர் இந்த செயலியின் செயல் இயக்குநர் மற்றும் இணை நிறுவனர். நிகில் ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம் லக்னோ பட்டதாரி, அவருக்கு வங்கி முதலீட்டுத் துறையில் 9 ஆண்டு கால அனுபவம் உள்ளது. விகேஷ் இதன் சிஓஓ மற்றும் இணை நிறுவனர். அவர் பிட்ஸ்-பிலானி மற்றம் ஏஐஎம்-மணிலாவின் பழைய மாணவர். விகேஷிற்கு மார்க்கெட்டிங் மற்றும் மீடியா சேல்ஸ் துறையில் 6 ஆண்டு கால அனுபவம் உள்ளது. மற்றொரு நபர் எஸ். நந்தகுமார், சிடிஓவாக உள்ளார். எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் மாணவரான இவருக்கு செல்போன் செயலிகள் மேம்பாட்டில் பத்து ஆண்டு காலம் அனுபவம் உள்ளது.

“நாங்கள் ஸ்டார்ட்அப் நிலையில் இருப்பதால் எங்களோடு இணையும் மக்கள் வெளிப்படையாகவும், எதற்கும் வளைந்து கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயலை செய்து முடிக்க வேண்டும்” என்கிறார் விகேஷ்.

தொழில்நுட்பம் மற்றும் மாறுபாட்டாளர்

விகேஷை பொறுத்த வரையில் நிறுவனத்தின் யூஎஸ்பி மற்றும் சொத்தாக நினைப்பது ரூட் - மேட்சிங் அல்காரிதம். இதுவே செயலியின் அடிப்படை. இந்த அல்காரிதம் கம்பீரமானது என்று கூறும் விகேஷ், இது அழைத்து வரும் இடம், ஏற்றிச் செல்லும் இடம் மற்றும் சவாரியை பின்தொடரும் செயல்முறை என பயணிகள் சரியான இடத்தை தேர்வு செய்ய உதவும். லிஃப்ட்ஓவை பயன்படுத்துவது செயலியில் டாக்ஸியை பதிவு செய்வது போன்ற எண்ணத்தையே அளிக்கும் என்கிறார் விகேஷ்.

பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை மேப் மூலமாகவும், தொடங்கும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். சில நொடிகளிலேயே அவர்களுக்கு ஏற்ற இணை பயணியோடு சவாரியை பகிர்ந்து கொள்ளும் நபரை லிஃப்ட்ஓ தேடும். தங்களோடு பயணிக்கும் பயணியின் முழு விவரங்களையும் பயணிகள் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று அவர்களுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன் அவர்களை ஏற்றிக் கொள்ளும் நேரத்தை கூட இதில் தெரிந்து கொள்ள முடியும். சக பயணியோடு பயணிக்க விரும்பும் பட்சத்தில் தங்களுடைய சக பயணியை பிக் அப் மையத்தில் சந்தித்த உடன் லிஃப்ட்ஓ செயலியில் அவர்கள் ‘ஸ்டார்ட் ரைட்’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

லிப்ட் கேட்டுச் செல்லும் பயனாளிக்கு கிடைக்கும் மற்றொரு உதவி, அவர்கள் சென்றடையும் இடத்தை மேப்பில் தேர்வு செய்தவுடன் அவர்களுக்கு வெவ்வேறு வகை வாகனங்கள் (ஏசி வாகனம், சாதாரண வாகனம், ஆட்டோ, இன்னும் பல) காத்திருப்பு நேரத்தோடு காண்பிக்கப்படும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன், பயனாளர்கள் பிக் அப் இடத்தில் லிஃப்ட் கொடுக்க வேண்டிய நபரின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை அவர்களுக்கு ஏற்ற லிஃப்ட் அளிக்கும் நபர் கிடைத்து விட்டால், அவர்களுக்கு வேண்டுகோள் அனுப்பி, சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்.

அறிமுகமும் ஈர்ப்பும்

செயலியின் முதல் பிரிவை பொவாய் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அறிமுகம் செய்துள்ளோம். இந்த சேவை காலை நேரத்தில் பொவாயிலிருந்து பிரபல அலுவகங்கள் உள்ள பிகேசி, லோயர் பேரல், நரிமன் பாயின்ட் மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளுக்குச் செல்வோரை இணைக்கிறது என்கிறார் விகேஷ். “மாலை நேரங்களில் மும்பையின் இந்த இடங்களில் இருந்து கிளம்பும் பணிக்குச் செல்வோர் எங்களுடைய செயலியை பயன்படுத்தி தங்களுடைய சவாரிக்கான இணையை பெற முடியும்” என்கிறார் விகேஷ்.

பீக் ஹவர்களில்(Peak hour) ஆட்டோ மற்றும் வாகனம் கிடைக்கச் சிரமப்படும் மக்களுக்கு, லிஃப்ட்ஓவின் சேவை ஒரு பதிலீடாக இருக்கும் என்கிறார் அவர். இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஈர்ப்பு வாரநாட்களில் இருக்கும் பீக் ஹவர் சேவையே என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம், ஏனெனில் அப்போது தான் அதிக பயணிகள் சவாரி கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

“தற்போது, லிஃப்ட்ஓ கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் கிடைக்கிறது, ஆனால் நாங்கள் ஐஓஎஸ் வெர்ஷனிலும் அறிமுகம் செய்யும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம், ஜனவரி மாத மத்தியில் இது செயல்பாட்டுக்கு வரும்” என்கிறார் விகேஷ்.

லிஃப்ட்ஓவின் முதல் மாத செயல்பாடுகளில், தினந்தோறும் சராசரியாக 50 பரிவர்த்தனைகளும், நாள் கணக்கில் ஏறத்தாழ 500 முதல் 600 சவாரிகளும் உள்ளன. 16,500 சவாரிகள் இந்த திட்டத்தில் பதியப்பட்டுள்ளது. பயனாளர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 4 ஆயிரத்து 300ஐ தாண்டிவிட்டது. நவம்பர் மாத இரண்டாம் வாரத்திற்குள் நாள்தோறும் 100 பரிவர்த்தனைகளை செய்வதையே இலக்காக வைத்துள்ளது லிஃப்ட்ஓ.

நிதி மற்றும் எதிர்காலம்

இந்தக் குழு அண்மையில் ஏஞ்சல் சுற்று நிதியை ரூ.85 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஸ்டார்ட் அப் உலகில் உள்ள பெரும்புள்ளிகள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறுகிறார் விகேஷ்.

இந்தக் குழு தங்களது செயல்பாடுகள் மற்றும் விளம்பரத்தை மத்திய மும்பையில் இருந்து தொடங்கியது, ஆனால் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நகர் முழுமைக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது. 2016ம் ஆண்டு மத்தியில் லிஃப்ட்ஓவை இதர டாப் மெட்ரோ நகரங்களான டெல்லி/என்சிஆர், பெங்களூரு, பூனே, ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவிற்கும் அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல உள்ளனர்.

சட்ட நடைமுறைகள்

டாக்சி சவாரியை பகிர்ந்து கொள்ளும் திட்டமும், வானகங்களின் அளவும் வளர்ந்து வந்தாலும், அரசின் கொள்கைகளும், சட்டங்களும் இதை நடத்த முடியாத நிலையிலேயே இருந்தன. இந்தத் தளங்கள் நிலைத்திருக்க விரும்புகின்றனவா? என்ற ஒரு தோறாய ஒப்பேற்றலை சிப்கோ தனது அண்மை அறிக்கையில் தெரிவித்துள்ளது. விகேஷ் வேறு விதமாக யோசிக்கிறார்; கார்பூலிங், வாகன பகிர்வு மற்றம் லிஃப்ட் கொடுப்பது பற்றி மோட்டார் வாகன சட்டம் 1988ல் (மத்திய அரசின் சட்டம்) எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிறார் அவர். இந்தச் சட்டம் குறிப்பாக இது போன்ற சேவைகளை அனுமதிப்பதில்லை என்றும் அவர் சொல்கிறார்.

பிரிவு 66 சட்டம் இதை கட்டுபடுத்துகிறது: ‘ஒப்பந்த முறை வாகனங்கள்’ மற்றும் ‘பொது சேவை வாகனங்கள்’( பிரிவு 2ல் விளக்கப்பட்டது, புள்ளி-7). வாடகைக்கு பயன்படுத்தும் வாகனங்கள் அல்லது பயணிகளை சுமந்து செல்லும் வாகனங்கள் என இதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆனால் கார்பூலிங்கை பொறுத்த வரையில், இதற்காக அளிக்கப்படும் கார்கள் இந்த விளக்கத்தின் கீழ் வராது. ஏனெனில் லிஃப்ட் கொடுக்கும் நபர் வாகனத்தில் போக்குவரத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் ஆனால் அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் முறையாகவோ அல்லது தொழிலாகவோ அவர் செய்ய முடியாது.

சந்தை நிலவரம்

பகிர்ந்து கொள்ளும் பொருளாதாரம் என்னும் பெரிய குடையின் கீழ் வந்ததே கார்பூலிங் திட்டம். ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்சின் அண்மை அறிக்கையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 15 பில்லியன் டாலர் என கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2025க்குள் 335 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்தையில் இந்தியா நல்ல பங்கைப் பெறும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மீபட்டீ, ரைடிங்ஓ, பூல்சர்க்கிள் மற்றும் கார் பூல் அட்டா இந்த இடங்களில் விருப்பத்தை பெற்றுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால் பிரேசிலியன் ட்ரிப்டா மற்றும் பிரெஞ்ச் ப்ளாப்ளா கார் போன்ற சர்வதேச நிறுவனங்கள் தான் உண்மையான மாற்றத்திற்கு வித்திட்டவர்கள். அவர்கள் இந்தியச் சந்தையில் உள்ள கார்பூலிங் தேவையின் மதிப்பை உணர்ந்துள்ளனர்.

இணையதள முகவரி: LiftO