14 முறை தோல்வி, விடாப்பிடி முயற்சி: ShareChat உருவாக்கிய ஐஐடி கான்பூர் பட்டதாரிகள் 

1
”நாங்கள் எங்களைத் தொடர்ந்து சிறப்பாகவும் விரைவாகவும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம். முதலீட்டாளர்களுக்கு எங்களிடம் பிடித்த விஷயமே இதுதான்...”

என்று தனது ஸ்டார்ட் அப்பான ஷேர்சாட் (ShareChat) குறித்து விவரித்தார் ஃபரீத் ஆசன். ஏற்கெனவே 5.25 மில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ள இவர்கள் Series B சுற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

25 வயதான ஃபரீத் ஐஐடி கான்பூரில் படித்த 25 வயதான பானு சிங் மற்றும் 23 வயதான அன்குஷ் சச்தேவா ஆகிய இரு இணை நிறுவனர்களுடன் இணைந்து இந்தியாவின் சொந்த சமூக நெட்வொர்க்கை உருவாக்க விரும்பினார்.

”முழுவதுமாக நகர்ப்புறமாக அல்லாத பகுதி மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நகர்ப்புறத்தைச் சேர்ந்த உயர்மட்ட மக்களால் மிரட்டப்படாமல், தங்களை மாற்றிக்கொள்ளாமல் தாமாகவே இருக்க உதவக்கூடிய ஒரு சமூக ஊடக மொபைல் தளத்தை உருவாக்க விரும்புகிறோம்,” என்றார்.

ஷேர்சாட் ஆண்டிராய்டில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய 10 உள்ளூர் மொழிகளைக் கொண்ட செயலி. போஜ்பூரி, சத்தீஸ்கரி போன்ற வட்டார மொழிகளையும் கொண்டுள்ளது.

2015-ம் ஆண்டு துவங்கப்பட்டது முதல் மாதந்தோறும் நாலு மில்லியன் பயனாளிகளைப் பெற்றுள்ளது. இவர்கள் குட் மார்னிங் மெசேஜ், ஜோக்குகள், ஊக்கமளிக்கும் வாக்கியங்கள், ஜாதகங்கள், வீடியோக்கள், செய்திகள் என தினசரி 2,00,000 பதிவுகளை இந்த தளத்தில் பகிர்ந்துகொள்கின்றனர்.

நிறுவனர்கள் அடிப்படை விஷயங்களில் உறுதியாக இருந்தனர். அதிலிருந்து விரைவாக உச்சத்தை எட்டினர். இது தங்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவும் வளர்ச்சியடையவும் உதவியது என்று சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார் ஃபரித். மனதளவில் அவர்கள் ஹேக்கர்ஸ் என்பதை ஒப்புக்கொண்டு ஃபரித் கூறுகையில்,

 “ஒரு ஹாக்கரின் மனநிலை; அடிப்படையை புரிந்துகொள்ளும் திறன் கொண்டது. ஒரு பகுதியின் அடிப்படையைப் பயன்படுத்தி அடுத்த பகுதியில் புதுமையை படைப்பார்கள்,” என்றார்.

தகர்த்துதல் மற்றும் மறுகட்டுமானம்

பெங்களூருவிலுள்ள ஷேர்சாட் அலுவலகம் பரபரப்பான பகுதியில் இருந்தாலும் பெரிய போர்டுகள் எதுவும் காணப்படவில்லை. ”நாங்கள் அவசியமின்றி மற்றவர் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை,” என்றார் ஃபரித். அங்கு கம்ப்யூட்டரில் பணிபுரியும் ஊழியர்களைக் காட்டிலும் தச்சர்களே அதிகம் காணப்பட்டனர்.

”நாங்கள் எதையும் தகர்த்துவிட்டு மறுகட்டமைப்பில் ஈடுபடவே விரும்புவோம்,” என்று புன்னகைத்தபடியே தெரிவித்தார் ஃபரித். அவர்கள் ஐஐடியில் துவங்கியது முதலே புதுப்பிப்பதுதான் அவர்களது வழிகாட்டும் தத்துவமாக இருந்து வருகிறது.

ஐந்து வருடங்கள் ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர். வணிக பார்ட்னராகவே முதலில் பழகத் துவங்கினாலும் பின்னர் நல்ல நண்பர்களாயினர்.

அவர்கள் 17 ப்ராஜெக்டுகளில் இணைந்து செயல்பட்டுள்ளனர். இதில் 14 ப்ராஜெக்டுகள் தோல்வியுற்றன. அவர்களது 15-வது ப்ராஜெக்ட் 250 பயனர்களைக்கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவிற்கான பெயர் அறியப்படாத ரகசிய மெசேஜ் போர்ட் தொடர்பானது.

இந்த முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து விவாத தளமான Opinio மற்றும் மிமிக் Reddit உரையாடல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். “2014-ம் ஆண்டு ஒரு சாட்பாட் அலை காணப்பட்டது. சாட் ரூம் பயனர்களை ஒன்றிணைக்க திட்டமிட்டனர்.”

மேலும் பாலிவுட்டில் நம்பர் ஒன் கான் யார் என்பது குறித்த ’சாட் ஃபைட்டில்’ மக்களை ஈடுபட வைத்தனர். இதன் மூலம் பலர் ஆன்லைனில் சாட் செய்ய தயாராக இருப்பினும் அவர்களது உள்ளூர் மொழியிலேயே செய்ய விரும்பியதை உணர்ந்தனர்.

அடுத்து சமூக ஊடக நெட்வொர்க்கில் வளர்ச்சியைக் கைப்பற்ற இவர்கள் மூவரும் முகநூலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிரிக்கெட் குறித்த அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் இணையுமாறு ஒரு பதிவிட்டனர்.

”80,000 பேர் தங்களது ஃபோன் நம்பரை பகிர்ந்துகொண்டு பதிலளித்தனர். நிச்சயம் அவர்கள் ஒருவரோடொருவர் அறிமுகமில்லாதவர்கள். இவர்கள் ப்ரைவசி குறித்து கவலை கொள்வதில்லை. அனைவரும் பார்க்கும் விதத்தில் தங்களது எண்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்,” என்றார் ஃபரித்.

பயமின்றி பயன்படுத்த உகந்த செயலி

முதல் முறையாக இணையத்தைப் பயன்படுத்தும் புதிய பிரிவைச் சேர்ந்த மக்களின் வேட்கையை தணிக்க ஒவ்வொரு நிறுவனரும் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கினர். ஜியோ அறிமுகப்படுத்திய இலவச டேட்டா வசதியும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஆண்டிராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுமே இந்தப் பயனாளிகள் எண்ணிக்கை உயரக் காரணமாக இருந்தது.

கண்டெட்டுகளை கண்டறிய இவர்கள் வாட்ஸ் அப் குழுக்களையே பயன்படுத்தினர். நாம் தகவல்களைத் தேடுவதற்கு கூகுள் பயன்படுத்துவது போல இவர்களுக்கு வாட்ஸ் அப் குழுக்கள்தான் கூகுள்.

”தகவல்கள் உள்ளூர் மொழியில் கிடைக்காததுதான் முக்கியப் பிரச்சனை,” என்று விவரித்தார் ஃபரித். 2014-ம் ஆண்டு தங்களது தளத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழியாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ஒரு செய்தி உள்ளீடு மாதிரியைக் கடைப்பிடித்தனர்.

திடீரென்று ஒய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் ஒரு புதிய உலகைக் கண்டறிகிறார். இதில் மக்களுடன் எளிதாக உரையாட முடிகிறது. அவரது சொந்த மொழியில் அவரது அறிவுத்திறனை பகிர்ந்துகொள்ளமுடியும். ஒத்த சிந்தனையுடையர்களுடன் உரையாடலாம்.

”இந்த பயனர்களுக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருந்தது. அதில் ஒன்று ஆங்கிலம். தாங்கள் பதிவிட விரும்பும் தகவல்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற உலகில் நுழைந்து பகிர்ந்துகொள்ளத் தயங்கினர். தவறாக மதிப்பிடப்படுவோம் என்பதே தயக்கத்திற்கான காரணம். அந்த பயத்தையும் தயக்கத்தையும் போக்குவதற்காக உருவான தளம் ஷேர்சாட்,” என்றார் ஃபரித்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பிற சமூக தளங்களில் இருப்பவர்கள் ஷேர்சாட்டுக்கு மாறிவிடுவார்கள் என்று கணிக்கிறார்.

போதுமான அளவு பயனர்களை சென்றடைதல்

வருங்காலத்தில் இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில் 75 சதவீதம் பேர் இந்திய மொழிகளிலேயே பயன்படுத்தத் துவங்குவார்கள் என்றும் ஆங்கிலத்தைக் காட்டிலும் ஹிந்தியில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு தளங்களிலுள்ள அம்சங்களைக் காட்டிலும் அதிலுள்ள அனுபவங்களே முக்கியம். எனவே இந்நிறுவனர்கள் வருவாய் ஈட்டுவதைக் காட்டிலும் அதிக பயனர்களை தளங்களில் இணைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர். ”போதுமான அளவிலான பயனர்களை சென்றடைவதே எங்களது நோக்கம்,” என்றார் ஃபரித்.

சந்தையிலும் பயனர்களிடையேயும் போதுமான முதிர்ச்சி இல்லை என்பதை உணர்ந்தார் இவர். அதிர்ஷ்டவசமாக லைட்ஸ்பீட் இந்தியா பார்ட்னர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தேவ் காரே ஃபரித்தின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஷேர்சாட்டில் 4 மில்லியன் டாலர் Series A சுற்று நிதி உயர்த்தினார்.

இந்த நிதியாண்டிற்குள் 25 மில்லியன் பயனர் தொகுப்பை உருவாக்கவேண்டும் என்கிற நம்பிக்கையில் உள்ளார் ஃபரித். நேட்டிவ் விளம்பரங்கள், பயனர்கள் பிரத்யேக கண்டெண்டுகளை படிக்க கட்டணம் வசூலித்தல் என சுமார் 40 திட்டங்களை வருவாய் ஈட்டுவதற்காக வகுத்துள்ளனர்.

தகவல்களே முக்கியத்துவம் வாய்ந்தது

பயனர்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் ஆபாச தகவல்களை பயன்படுத்துவதாக சில விமர்சகர்கள் குற்றம் சாட்டுவதை மறுத்தார் ஃபரித். திரைப்படங்கள், தொலைக்காட்சி, செய்தி ஊடகங்கள் போன்றவற்றில் வெளியிடப்படும் தகவல்களையே இவர்களும் வெளியிடுவதாக தெரிவித்தார். மேலும் ஆபாசமான உள்ளடகத்தை தவிர்த்துவிடும் வழிமுறைகளையே பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது 70 சதவீதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரத்தைச் சேர்ந்த ஆண்களே பயன்படுத்துவதாகவும் அதிக பெண்கள் தளத்தை பயன்படுத்த ஊக்குவிக்க விரும்புவதால் அவர்கள் வெறுக்கும் கண்டெண்டுகள் நிச்சயம் இடம்பெறாது என்றும் தெரிவித்தார் ஃபரீத்.

தினமும் மூன்றரை மில்லியன் உள்ளடக்கம் ஷேர்சாட்டிலிருந்து வாட்ஸ் அப்பிற்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. வாட்ஸ் அப்பிற்குள் அவர்களது கண்டெண்ட் சராசரியாக 20 முறை மறுபடியும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

இந்தியாவில் கவனம் செலுத்தும் டேட்டா அனாலிடிக்ஸ் நிறுவனமான KalaGato நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான அமன் குமார் கூறுகையில், 

“எங்களைப் பொருத்தவரை ஷேர்சாட் தனித்துவமான யோசனைகளைக் கொண்ட வாட்ஸ் அப் சார்ந்து செயல்படும் ஒரு மாதிரியாகும். ஏனெனில் வாட்ஸ் அப் இல்லையெனில் ஷேர்சாட் நிலைத்திருக்குமா?” என்றார்.

சைனீஸ் மக்களுக்கான WeChat போல இந்தியர்களுக்கு உள்ளூர் சமூக நெட்வொர்க்கின் தேவை இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்பினாலும் ஃபேஸ்புக் பொன்ற மிகப்பெரிய சக்திகளை எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்று துறையை கண்காணித்து வருவோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

நிலைத்திருக்கக்கூடிய வணிகத்தை நோக்கி…

கோடர்கள், தொழில்முனைவோர் என பல வடிவங்களில் பயணித்ததில் அவர்கள் கற்ற மிக முக்கிய படிப்பினை என்னவென்றால் உள்ளுணர்வை மட்டுமே பின்பற்றாமல் தகுந்த தரவுகள் அடிப்படையில் தீர்மானிக்கவேண்டும். இதனால்தான் நாங்கள் 14 முறை தோல்வியுற்றோம், என்றார் ஃபரித்.

பயனர்களிடம் உணர்வை புரிந்துகொள்ளவேண்டும் என்பதே ஷேர்சாட் உருவாக்குகையில் அவர்கள் கற்ற அடுத்த முக்கிய படிப்பினை என்கிறார் ஃபரீத். நிறுவனர்கள் அனைவரும் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் துவங்குகையில் இந்த குறிப்பிட்ட பிரிவினரில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற எண்ணத்துடன் துவங்கவில்லை.

நிறுவனர்கள் இளம் வயதினராக இருந்தபோதும் நிதியை முறையாக கையாண்டதாக தெரிவித்தார் ஆனந்த். சர்வர் (Server) பராமரிப்பிற்கே அதிக செலவானது. எங்களது தொழில்நுட்பம் வாட்ஸ் அப்பிற்கு இணையானது. 2G மற்றும் பேட்ச்சி நெட்வொர்க்குகளுக்கு வழங்கும் திறன் கொண்டது, என்றும் நிலையான வணிகம் என்றும் தெரிவித்தார் ஃபரீத்.

இந்தியாவில் சமூக ஊடகங்களின் ஊடுருவல் குறைவாகவே உள்ளது என்று தெரிவிக்கிறது The Next Web’ report. அதாவது ஜூன் மாதம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 19 சதவீதத்தினர் மட்டுமே ஃபேஸ்புக் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. எனவே தாங்கள் வெற்றியடைந்து வருவதாகவும் ஆனால் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை மட்டுமே பார்க்கவேண்டும் என்றார் ஃபரீத்.

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்

Related Stories

Stories by YS TEAM TAMIL