சட்டப்பிரிவு 377-ஐ எதிர்த்து மனு செய்து வெற்றிக்கண்ட 5 நபர்கள்!

0

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்திய தண்டனை சட்டத்தின் 377 சட்டப்பிரிவு குறித்த இறுதி தீர்ப்பை வெளியிட்டது. ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்பதை வலியுறுத்தும் இந்தத் தீர்ப்பில்,

”நாம் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தெடுக்கவேண்டும். ஒருவர் எதுவாக இல்லையோ அதை திணிப்பதைக் காட்டிலும் எதுவாக உள்ளார்களோ அதற்கு மரியாதை அளிக்கவேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

2008-ம் ஆண்டு சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்யவேண்டும் என்கிற உயர் நீதிமன்ற மேல்முறையீட்டுடன் துவங்கப்பட்ட பத்தாண்டுகால நீண்ட போராட்டம் இந்த அறிக்கையுடன் வெற்றிகரமாக முடிவிற்கு வந்துள்ளது. தற்போது இந்தியாவில் எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக தங்களது விருப்பப்படி வாழ்க்கையை வாழலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இந்த தீர்மானம் பரந்த கொள்கையுடைய முற்போக்கான சமூகத்தை நோக்கிய முக்கிய நகர்வாகும்.

முதல் பொதுநல வழக்கை நாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 377-க்கு எதிராக பதிவு செய்தது. பாலியல் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி ஓரினச்சேர்க்கையாளர்களுடன் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனமாகும் என்று க்வார்ட்ஸ் இண்டியா தெரிவிக்கிறது.

2009-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என தீர்ப்பளித்தபோது இந்தியாவில் உள்ள LGBTQ சமூகத்தினருக்கு பாதியளவு வெற்றி கிடைத்தது.

2013-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி சட்டப்பிரிவு 377 தொடர்பான டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்வது குறித்தோ அல்லது மாற்றம் செய்வதோ குறித்து பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நீதித்துறை அல்ல என்று குறிப்பிட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக ஐந்து பேர் மனுதாக்கல் செய்தனர். அதற்கு பின்னர் நடந்த விசாரணைக்கு பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதுள்ளது. 

நவ்தேஜ் சிங் ஜோஹர்

பிரபல பரதநாட்டிய கலைஞர் மற்றும் சங்கீத் நாடக் அகாடமி வென்றவரான நவ்தேஜ் சிங் ஜோஹர் தனது பார்ட்னர் சுனில் மெஹ்ராவுடன் இணைந்த 0BC1 377 சட்டப்பிரிவு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 

377 சட்டப்பிரிவு வாழ்க்கைக்கான உரிமையையும் அரசியலமைப்பு உத்தரவாதமளிக்கும் தனிநபர் சுதந்திரத்தையும் மீறுவதாக 59 வயதான இவர் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் குறிப்பிடுகிறது.

சுனில் மெஹ்ரா

முன்னாள் பத்திரிக்கையாளர் மற்றும் இந்தியாவில் உள்ள ’மேக்சிம்’ பத்திரிக்கையின் ஊடக எடிட்டரான சுனில் மெஹ்ரா, 1993-ம் ஆண்டு முதல் நவ்தேஜின் பார்ட்னராவார். 63 வயதான இவர் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தங்களது அடையாளத்தையோ அல்லது ஒரே பாலினத்தவர் குறித்து எவ்வாறு உணர்கிறார்கள் என்றோ வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமோ உரிமையோ இல்லை என கருதுவதாக க்வார்ட்ஸ் இண்டியா குறிப்பிடுகிறது.

ஆயிஷா கபூர்

’ப்ளாக்’ திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் சிறு வயது கதாப்பாத்திரமாக நடித்த குழந்தை நட்சத்திரம்தான் ஆயிஷா கபூர். இவர் ஓரினச்சேர்க்கை ஆர்வலர் மற்றும் பேச்சாளர். இவர் ஒரு தொழில்முனைவர். உணவு மற்றும் பானங்கள் துறையில் செயல்படுகிறார்.

அமன் நாத்

டெல்லியைச் சேர்ந்த 61 வயது அமன் நாத் நீம்ரானா ஹோட்டல்ஸ் உரிமையாளர் மற்றும் நிறுவனர். இவர் ஃப்ரான்சிஸ் வாக்சியார்க் உடன் இணைந்து இந்த ஹோட்டலை நிறுவினார். இவர் கட்டடக்கலை மறுசீரமைப்பிற்குப் பிரபலமானவர். இவரது பார்ட்னரான ஃப்ரான்சிஸ் 2014-ம் ஆண்டு இறந்துபோனார். அதுவரை 23 ஆண்டுகள் அவருடன் நல்லுறவில் இறந்தார். தற்போது வளர்ப்பு மகள் ஆத்யா நாத் உடன் வசித்து வருகிறார் என்று ஏசியன் ஏஜ் குறிப்பிடுகிறார்.

ரித்து டால்மியா

பிரபல செஃப் மற்றும் டெல்லியில் உள்ள திவா உணவக உரிமையாளரான இவர் தன்னை ஒரு லெஸ்பியன் என அடையாளப்படுத்திக்கொள்கிறார். இது குறித்து அவரது அம்மாவிடம் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். சட்டப்பிரிவு 377 தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டபோது இவர் ’இண்டியா டுடே’-க்கு தெரிவிக்கையில்,

”கேலிகளையும் எதிர்மறை விமர்சனங்களையும் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. பொதுநல வழக்கு தொடரவேண்டாம் என் என்னிடம் பலர் கேட்டுக்கொண்டனர். ஆனால் நான் வழக்கு தொடர்ந்ததை நினைத்து மகிழ்கிறேன். இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க வழக்கைத் தொடர்ந்த மனுதாரர்களில் நானும் ஒருவர் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL