அண்டார்டிகாவில் ஓர் ஆண்டு கழித்த முதல் பெண் விஞ்ஞானி மங்களா மணி!

0

தன் வாழ்நாளில் பனிச்சாரலை கண்டிறாத மங்களா மணி, 403 நாட்களை பனி படர்ந்த ஆண்டார்டிகா நிலப்பரப்பில் கழித்து சாதனை படைத்துள்ளார். -90 டிகிரி செல்சியசுக்கு குறைவான பகுதியில் வாழ்வதென்பது அரிதான, கடினமான விஷயம். ஆனால் 56 வயதான மங்களா, ஒரு பெண்ணால் முடியாதது இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

மங்களா மணி, இஸ்ரோ-வில் பணிபுரியும் விஞ்ஞானி. இவர் 23 பேர் அடங்கிய ஆய்வுக்குழுவில் நவம்பர் 2016-ம் ஆண்டு அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்திய ஆய்வு கூடத்துக்கு சென்றார். முற்றிலும் ஆண் விஞ்ஞானிகள் அடங்கிய அக்குழுவில் மங்களா மட்டுமே பெண் விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. 

பட உதவி: தி ஹிந்து
பட உதவி: தி ஹிந்து

ISRO-ன் முதல் போலார் பெண்மணி’ என்று பிபிசி மங்களாவை கெளரவித்து சிறப்புக் கட்டுரை வெளியிடவுள்ளது. அண்டார்டிகாவில் ஆய்வுகூடத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டார் மங்களா. அங்கு 10 முதல் 14 ஆர்பிட்டுகள் வரை  பார்க்கமுடியும். அண்டார்டிகாவில் இவர்கள் சேகரித்துள்ள சேட்டிலைட் தகவல்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அவை ப்ராசஸ் செய்யப்பட்டு பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது.  

இந்த பயணத்துக்கும் முன்பு, மங்களா பனி இருக்கும் பகுதிகளுக்கு கூட சென்றதில்லை. மேலும் 22 ஆண்களுடன் தனியாக இருக்கவேண்டும் என்பதும் அவருக்கு புதிது. இதில் பலரையும் அவர் முன்பு அறிந்திருக்கவும் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பேசிய மங்களா,

”எங்கள் குழுவினர் மிகவும் ஆதரவாக இருந்தனர். இரு பக்கங்களிலும் விட்டுக்கொடுத்தல் இருந்தது. எல்லாம் நன்றாகச் சென்றது. எந்த உறுப்பினருடன் எந்த பிரச்சனையும் எழவில்லை,” என்றார்.

மங்களா மற்றும் குழுவினர், இப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன், உடல் மற்றும் மனவலிமை சோதனைகளை எடுத்துக்கொண்டனர். ஏய்ம்ஸ் டெல்லியில் முழு மெடிக்கல் செக்-அப் எடுத்துக்கொண்டார் மங்களா. அதே போல் உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் பத்ரினாத்தில் தன் குழுவினருடன் உடல் வலிமை பரிசோதனையையும் மேற்கொண்டார். தி ஹிந்து பேட்டியில் பேசிய மங்களா,

“பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் அடித்துஎடுத்து வைத்துள்ளனர். பெண்கள் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். வரும் வாய்ப்பை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். வானம் மட்டுமே எல்லை இல்லை, கற்றல் அதையும் தாண்டி உள்ளது,” என்கிறார் இந்த அசாத்திய பெண்மணி.

கட்டுரை: Think Change India