நான் வேலையில் இருந்து கொண்டே எப்படி தொழில் தொடங்க முடியும்?

அதிக நேரம் கிடைக்க, அலட்சியத்தை போக்க மற்றும் இதர வேலையை செய்து முடிக்க மூன்று யுத்திகள்...

3

வாழ்வில் நாம் அனைவரும் நித்தம் சந்திக்கும் ஒரு சவால் - நேரமின்மை. கடைசியாக யாரவது இதை செய்யுங்கள் என கூறியதை நியாபகம் படுத்திப் பாருங்கள்;

அதாவது, நீங்கள் ஏன் உடற்பயற்சி செய்யக் கூடாது?

இது போன்ற கேள்விக்கு நம்மிடம் இருக்கும் பதில் நேரம் இல்லை. இதுவே தான் வணிகத்திலும் நடக்கிறது, இப்பொழுது நான் உங்களை பார்த்து “ஏன் நீங்கள் ஒரு இணை தொழில் தொடங்கக் கூடாது ?” என கேட்டால், உங்களது பதில் இதுவாகவே இருக்கும்

“நிச்சயம் ஒரு நாள் தொடங்க வேண்டும்.... ஆனால் எனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கிறது. நேரம் இல்லை, சிலநாள் கழித்து செய்யலாம்...”

அந்த ’ஒருநாள்’ நிச்சயம் வராது, நீங்களும் உங்கள் வாழ்க்கை சுழற்சிக்கு பழகிக்கொண்டு ’நேரத்தை’ காரணம் காட்டி தொழில் தொடங்கும் சிந்தனையை விட்டுவிடுவீர்.

ஒருவேளை நீங்கள் 9-6 வேலையில் இருக்கலாம். மாலை வேலை முடிந்ததும் மற்ற வேலைகளை செய்ய நேரம் இருக்காது (நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள்). விடுமுறை நாட்களிலும் நேரம் இருக்காது (நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும்).

இதற்கான மூன்று தீர்வுகளை நான் இங்கு வழங்குகிறேன், அதவாது அதிக நேரம் கிடைக்க, அலட்சியத்தை போக்க மற்றும் இதர வேலையை செய்து முடிக்க. இது நிச்சயம் ஒரு வாரத்தில் 5-10 மணிநேரங்கள் ஒதுக்க உதவும். அத நீங்கள் உங்கள் இணை வியாபாரத்தை தொடங்கக் கூட பயன்படுத்தலாம்.

உங்கள் வணிகத்தை தொடங்க உங்கள் வேலையை விடும் தேவை இல்லை.

உத்தி 1: சரிபார்ப்புப் பட்டியல்

காலை எழுந்தவுடன் ’சரிபார்ப்புப் பட்டியலை’ தயாரிக்க வேண்டும், அதில் நீங்கள் அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய முக்கிய மூன்று அல்லது நான்கு செயல்களை மட்டும் குறிப்பிட்டுக்கொள்ளவும்.

தொழில்முனைவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளரான, டிம் பெர்ரிஸ் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முக்கிய செயலில் மட்டுமே தன் கவனத்தை செலுத்துவாராம்.

சரிபார்ப்புப் பட்டியல், முக்கிய செயல்களை கொண்டு மட்டுமே இருக்க வேண்டும். உதாரணமாக, இணை வணிகம் தொடங்க வேண்டும் என்றால், உங்கள் சரிபார்ப்புப் பட்டியலில் இவை இருக்க வேண்டும்:

• 10 வணிக யோசனைகளை அலசி எழுதிக்கொள்ள வேண்டும்

• உங்கள் வணிகத்திற்கு ஏற்ற மூன்ற அல்லது ஐந்து இடங்களை ஆராய்வது

• தேவை இருக்கிறதா, எவரேனும் இதே தொழிலை செய்கிறார்களா என ஆராய வேண்டும்

• இதே தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழில்முனைவருடன் பேச வேண்டும்

• 10 சாத்தியமான வாய்ப்புகளுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்

இது உதாரணம் மட்டுமே. ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு நல்ல மனநிலை மிகவும் முக்கியம்.

தவறான மனநிலை: நிச்சயம் நான் இதை அடுத்த வாரம் செய்ய போகிறேன்                  (உண்மை: நீங்கள் எதுவும் செய்ய போவதில்லை)

சரியான மனநிலை: இதை நான் இரண்டு வாரத்திற்கு முயற்சி செய்து, இதன் விளைவை பார்க்கப்போகிறேன்.

உத்தி 2: ஒன்றின் பலம்

இரண்டு எளிய கருத்தாக பிரித்து விளக்குகிறேன்.

கொள்கை 1: ஸ்க்ரால் செய்வதை தவிர்க்க வேண்டும்

ஒரு நிமிடம், ’ஆன்லைனில் பணம் சம்பாதிக்கக் கூடிய ஏழு வழிகள்’ என்ற வலைபதிவை படிக்கிறோம். மற்றொரு நிமிடம், ’பணம் ஈட்ட சிறந்த வழிகள்’ என்பதை படிக்கிறோம். இதற்கிடையில் ’முகநூலில் 5000 ஃபாலோவர்களை பெறுவது எப்படி?’ என்பதை அதீத ஆர்வத்துடன் படிக்கிறோம்.

இப்படிதான் நொடிக்கு நொடி ஸ்க்ரால் செய்து நமக்குத் தேவையானவற்றில் இருந்து திசைதிருப்பிக் கொள்கிறோம். இதற்கு பதிலாக, இணயத்தில் இருக்கும் அனைத்தையும் படிக்காமல் ஒன்றை பின்பற்றவேண்டும்.

• 15 வலைபதிவுகளை படிப்பதற்கு பதில், ஒன்று, இரண்டை படித்து அதை ஆழமாக பின்பற்றுங்கள்

• ஃபேஸ்புக், ட்விட்டர், பின்ட்ரெஸ்ட் என சகலதையும் முயற்சி செய்யாமல் ஒரு வலைதளத்தை பின்பற்றுங்கள்.

• அதிக வலைபதிவாளர்களை பின் தொடர்வதற்கு பதிலாக உங்களுடன் ஒத்து போகும் இரண்டு பேரை பின்பற்றுங்கள்.

கொள்கை 2: ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள்

• நேரத்திற்கு ஏற்ப விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது அ-வில் தொடங்கி ஃ வரை செல்ல வேண்டும்.

• ஒன்றில் இருந்து தொடங்க வேண்டும்:

• தொழில் தொடங்க – ஒரு யோசனையில் இருந்து தொடங்க வேண்டும், அதன் பின் லாபத்தை பாருங்கள்

• 100 வாடிக்கையாளர்களை பெற முதலில் ஒன்றிலிருந்து மூன்று வாடிக்கையாளர்களை பெறுங்கள்.

• மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க, பத்தாயிரம் சம்பாதிக்கத் தொடங்குங்கள்

அதனால் எப்பொழுதும் கண் முன் இருக்கும் ’ஒன்றில்’ கவனத்தை செலுத்துங்கள். “சிறிதாக துவங்கி படிப்படியாக முன்னேறுங்கள்...”

செய்ய வேண்டியவை:

இரண்டு பட்டியலை தயாரியுங்கள் – திசை திருப்பும் பட்டியல் மற்றும் கவன பட்டியல்

திசை திருப்பும் பட்டியல்: இதில் நீங்கள் முக்கியமாக கருதாமல் இருக்கும் மக்கள், வலைபதிவு, கட்டுரைகள், ஊடகங்கள் என அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.

கவனப் பட்டியல்: நீங்கள் முக்கியமாக கருதும் மக்கள், வலைபதிவு, கட்டுரையை இதில் பட்டியல் இடுக. அதாவது அவர்களின் அனைத்து வலைபதிவையும் படிக்க வேண்டும், அனைத்து மின்னஞ்சலுக்கும் பதில் அனுப்ப வேண்டும்.

உங்கள் மனதில் இந்த இரண்டு பட்டியலை உருவாக்கிக்கொண்டு அதற்கு ஏற்றவாறு நேரத்தை செலவழியுங்கள்.

உத்தி 3: ’முடியாது’ எனச் சொல்லுங்கள்.

உங்களுக்கு செய்ய விருப்பம் இல்லாத வேலையை ஏற்றுக்கொண்டு அதன் பின் நீங்கள் வருந்தியது உண்டா?

உதாரணமாக நிறைய சந்தர்பத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் ஒரு வேலையை செய்யவோ அல்லது ஒரு இடத்திற்கு செல்லவோ ஒப்பு கொள்வீர், அதாவது விருப்பம் இல்லாத:

• கல்யாணம்

• நண்பர்களை சந்தித்தல்

• தொழில் வாய்ப்பு

• மற்றவர்களுக்கு உதவி

• இதர அலுவுலக வேலை

இவைகளுக்கு ’முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள். இவை அனைத்தும் உங்கள் நேரத்தை வீணாக்குபவை.

செய்யவேண்டியவை:

உங்கள் நேரத்தை வீணாக்கும் செயலை கண்டறிந்து ’முடியாது’ என்று சொல்லுங்கள். விருப்பம் இல்லை, இருந்தாலும் இவர்களுக்காக செய்வோம் என்பதை நிறுத்துங்கள்.

இன்று ஒருவரிடம் இதை பயன்படுத்திப் பாருங்கள், அதன் விளைவு உங்களை ஆச்சரியப் படுத்தும்.

இந்த மூன்று உத்திகளை இன்றே பின்பற்றுங்கள், மெதுவாக அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: ஜுபின் அஜ்மிரா. இது Progress and win என்ற வலைப்பதிவில் முதலில் வெளியாகியது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள், இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.