மொபைல் விளையாட்டை உருவாக்கி விளையாட்டாய் சம்பாதிக்கும் 'ஸெபு கேம்ஸ்'

0

ஸாச் கோல்ட், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர். அங்கு படித்த மற்ற பட்டதாரிகளைப் போலவே அவரும் கோடையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டார். ஸாச் தனது நண்பர் அக்சய் உடன் தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் கிளம்பினார்.

அவர்களது பயணத்தில் அவர்கள் எதிர்பார்த்த எல்லாமே கிடைத்தது. கடல் பயணம், வனப் பகுதியில் நாட்களைக் கழித்தது, அருமையான உணவு என அந்தந்த நாடுகளில் பார்க்க வேண்டிய அனுபவிக்க வேண்டிய அத்தனையும் அனுபவித்துத் தீர்த்தனர். இந்தியாவில் அவர்களது சுற்றுப்பயணம் மைசூர், கோவை, சென்னை என மிகக்குட்டியாக அமைந்தது.

ஸாச்சுக்கு கல்லூரி படிக்கும் நாளில் இருந்தே கம்ப்யூட்டர் விளையாட்டு, மொபைலில் விளையாடும் வார்த்தை விளையாட்டு களில் (wordgame) ஆர்வம் அதிகம். அதில் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார். ஸாச்சுக்கு அவரது நண்பர் அக்சய், வேர்ட்மின்ட் (Wordmint) எனும் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். ஸெபு கேம்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த விளையாட்டு அது. ஆனால் அந்த நிறுவனத்தோடு விரைவில் ஸாச் இணையப்போகிறார் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

அதன்பிறகு அவர்களது பயணம் முழுக்க மின்ட் கேமிலேயே கழிந்தது. ஸாச்சும் அக்சயும், மின்ட்டில் முடிந்த வரையில் நிறைய வார்த்தைகளைச் சேர்க்க மாறி மாறி முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும் உருவாக்கினார்கள். அந்தக் குரூப் உறுப்பினர்கள் வேர்ட் மின்ட் குறித்து நிறைய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பின்னாளில் அவர்களும் அந்த நிறுவனத்தோடு இணைந்தனர்.

உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் லட்சக்கணக்கான மொபைல் கேம் பிரியர்களில் ஒருவர்தான் ஸாச்.

மொபைல் கேம்கள் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டவை. சர்வதேச விளையாட்டு வர்த்கம் தொடர்பாக ஆய்வு செய்யும் நியுஸு.காம் (newzoo.com) வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, இந்தத் தொழில், 1200 கோடி டாலர் வர்த்தகத்தைக் கொண்டது. மொபைல் சந்தையின் ஸ்திரமான வளர்ச்சிக்கும் இது காரணமாக அமைகிறது.

குளோபல் மொபைல் கேம் கன்ஃபடரேஷன் (Global Mobile Game Confederation -GMGC) தெரிவிக்கும் மற்றொரு புள்ளிவிபரப்படி, சர்வதேச மொபைல் மார்க்கெட்டில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 450 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. இது 2017ல் 4000 கோடியாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப் பெரும் அளவில் தரவிரக்கம் செய்யப்பட்ட விளையாட்டுக்கள்; ஆங்கிரி பேர்ட்ஸ் மற்றும் கேண்ட்டி க்ரஷ் ஆகியவைதான். இந்த விளையாட்டுக்கள் 10 கோடியில் இருந்து 50 கோடி வரையில் தரவிரக்கம் செய்யப்பட்டுள்ளன. ரஸ்ஸுல், வேர்ட்ஸ் வித் பிரண்ட்ஸ் போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் தலா 5 கோடி வரையில் தரவிரக்கம் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு துவங்கப்பட்ட, அப்படி ஒரு மொபைல் கேம்ஸ்தான் "ஸெபு கேம்ஸ்"(Zebu Games).

கடந்த வருடத்தில் ஒரு முறை கே.ஸ்ரீகிருஷ்ணா, பிகாஸ் சவுத்திரி என்ற இரு தந்தைகளும் பெங்களூருவில் ஒரு மொபைல் கேம் ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தனர். புதிதாக ஒன்றைத் தொடங்குவது அவர்கள் இருவருக்குமே புதிதல்ல. இன்மொபி நிறுவனத்தில் பிகாஸ் பெற்ற அனுபவம் அவருக்கு புதிய நிறுவனத்தை உருவாக்க கைகொடுத்தது.

“2011 மத்தியில்தான் இந்த யோசனை வந்தது. மொபைல் வர்த்தகம் எத்தனை பெரியது என்று அறிந்து கொண்டேன். சின்ன டீமை வைத்துக் கொண்டு இந்த மொபைல் விளையாட்டைத் தயார் செய்பவர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அது மிகப்பெரிய அளவில் வளரக் கூடியது என்றும் எனக்குத் தெரிந்தது.” என்கிறார் பிகாஸ்.

விளையாட்டைக் கற்றுக் கொள்வதற்கான வெளியீட்டுத் தளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று அந்த இரட்டையர்கள் மூளையில் உதித்த அதிரடி யோசனைக்குப் பிறகுதான் இந்த மொபைல் கேம் யோசனை அவர்களுக்கு வந்தது.

கடந்த நவம்பர் வரையில் ஸ்ரீகிருஷ்ணா நேஷனல் என்டர்ப்ரனர்ஷிப் நெட்வொர்க்கில் ஷோ ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். பின் சிறிது ஓய்வுக்குப் பிறகு, மறுபடியும் தொழிலில் குதித்தார். பிகாசும், ஸ்ரீகிருஷ்ணாவும் இணைந்து பணியாற்றவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே அவர்கள் இருவரும் இம்பல்சஸ்சாப்ட் (Impulsesoft) என்ற நிறுவனத்தில் பணியாற்றினர். அதனைத் தொடர்ந்து 2000த்தில் சிர்ஃப் டெக்னாலஜியில் (SiRF Technology) பணியாற்றினர்.

நாம் ஒரு தொழிலைத் தொடங்கினால், வழக்கமாக மற்றவர்கள் செய்த தவறுகளைக் காட்டிலும் அதிகத் தவறுகளைச் செய்து விட மாட்டோம். ஒரு சில தவறுகள் வேண்டுமானால் நடக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆறு லட்ச ரூபாய் ஆரம்ப மூலதனத்தோடு ஸெபு கேம்ஸ்சைத் தொடங்கினர்.

ஆனால் அவர்களது யோசனையை செயலாக்கக் கூடிய ஒரு மொபைல் கேம் டெவலப்பர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

அப்படி ஒரு டெவலப்பரைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு அதிக காலம் ஆகவில்லை. அவர்களது நிறுவனத்தின் மூன்றாவது நிறுவனராக கொல்லோல் தாஸ் கிடைத்தார். அவர் ஒரு அறிவாளிக் குழந்தை. ஒரு தீராத் தாகம் கொண்ட கேம் டெவலப்பர். மூவரும் சேர்ந்து டிசம்பரில் முதல் கேமை அறிமுகப்படுத்தினார்கள். ஹோம்பவுண்ட் எனும் கைகளுக்கும் கண்ணுக்கும் வேலை தரும் ஆர்கேட் வீடியோ கேம்.

“எதையேனும் உண்மையிலேயே செய்ய முடியுமானால் அதை செய்து பார்க்க விரும்பினோம். அதுதான் எங்கள் மதிப்பீடு. அதன் பிறகு அதுதான் இது” என்று அறிந்து கொண்டோம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா.

ஸெபு கேம்ஸ் கடந்த மூன்று மாதத்தில், வேர்ட்மின்ட் (Wordmint), பாலோ தி டாட்ஸ் (Follow The Dots) எனும் மேலும் இரண்டு விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியது. வேர்ட்மின்ட் ஒரு நபர் விளையாடும் விளையாட்டு. இதில் தனித்தனியாகத் தோன்றக் கூடிய எழுத்தை வைத்து வார்த்தைகளை உருவாக்க வேண்டும். பாலோ தி டாட்ஸ் என்பது விரல்களால் ஓடி ஓடி புள்ளிகளை இணைக்கும் விளையாட்டு.

இரு ஒரு சாதாரண, வேடிக்கை விளையாட்டுத்தான். ஆனால் இந்த விளையாட்டைக் குழந்தைகளுடன் விளையாடுபவர்கள், இது கைக்கும் கண்ணுக்கும் இடையே ஒருங்கிணைப்பையும் ஒருவரின் சொற்திறனையும் மேம்படுத்தக் கூடியது என்கிறார்கள்.

"இந்த விளையாட்டுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் மத்தியில் பாலோ தி டாட்ஸ் விளையாட்டுக்கு நல்ல வரவேற்பு.”என்கிறார் பிகாஸ்.

முதன் முதலில் இவர்கள் அறிமுகப்படுத்திய ஹோம் பவுண்ட் இப்போது இல்லை. ஆனால் மற்ற இரண்டு விளையாட்டுகளும் இதுவரை கிட்டத்தட்ட 10 ஆயிரம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளை சார்ந்த பயனாளிகளுக்கும் ப்ரி டூ பிளே (free to play- F2P) எனப்படும் இலவச விளையாட்டுக்களை ஸெபு கேம்ஸ் தொடர்ந்து அளிக்கும். இதில் விளையாட்டு விளம்பரங்கள் மூலம் வருமானம் வரும் என்கிறார் பிகாஸ்.

அடுத்தடுத்து என்ன செய்வது என்பதற்கு தெளிவான திட்டம் வைத்திருக்கிறார்கள். இந்த வருடம் 5 விளையாட்டுக்கள் அதன்பிறகு வருடத்திற்கு 12 விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களின் திட்டம்.

“மேலும் மூன்று விளையாட்டுக்களுக்கான முன்மாதிரிகளை வடிவமைத்துள்ளோம். இந்த வருடம் ஐந்து புதிய விளையாட்டுக்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். எங்களின் ஒரு சில புதிய விளையாட்டுகள் வேறு சில விளையாட்டுக்களின் விரிவாக்கப்பட்ட வடிவமாக இருக்கும். அவை வார்த்தை விளையாட்டுகளுக்கு நெருக்கமான விளையட்டுக்களின் தொகுதியாக உருவாகும். பல்வேறு மொழிகளிலும் விளையாட்டுகளை உருவாக்கப் போகிறோம்.” என்கிறார் பிகாஸ்.

தங்களது முயற்சி வீண்போகாது என இரு அப்பாக்களுக்குமே நம்பிக்கை உள்ளது. ஏனெனில் தங்களது மகன்கள் இருவரும் அவர்களது பங்கு பணியை மிகச் சிறப்பாகச் செய்கின்றனர் என்று பெருமையோடு சொல்கின்றனர்.

“அடுத்த கேம் எப்ப அப்பா வெளிவரும்? என்று எங்களிடம் கேட்பார்கள். சரி இதுதான் நாம் வேலை செய்வதற்கான நேரம் என்று நாங்கள் புரிந்து கொள்வோம்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா சிரித்துக் கொண்டே.

விளையாட்டின் லின்க்: Zebu Games