பணியிடத்தில் பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பாகச் செயல்படும் 4 அமெரிக்க நிறுவனங்கள்

0

பணியிடத்தில் பெண்கள் குறித்தும் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பல விவாதங்கள் நடந்துள்ளன. அத்துடன் குழுவாக நடைபெறும் முக்கிய கூட்டங்களில் பெண்கள் இல்லாததும் வேற்றுமை காணப்படுவதும் குறித்த விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திரா நூயி, அரியன்னா ஹஃபிங்டன் போன்ற சாம்பியன்கள் பணியிடத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்படவேண்டும் என்கிற கருத்தை விரிவாக முன்வைத்துள்ளனர். இந்த பிரிவில் தாக்கம் ஏற்பட பல வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆனால் இவர்களுடைய பல குறிப்பிடத்தக்க முயற்சிகளினால் சில மாதங்களிலேயே தாக்கத்தை ஏற்படுத்தினர். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நபரின் மனநிலையை மாற்றுவது கடினம். அவர்களது கண்ணோட்டத்தை மாற்றுவது அதைவிட கடினம். 

பெண்கள் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பிற துறைகளின் தேவைகள் குறித்த வேறுபட்ட கருத்து, உத்தி, நுண்ணறிவைக் கொண்டுள்ளனர். பணியிடங்களில் அதிகளவு பெண்கள் இணையவேண்டும். பெண்கள் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாது மற்ற பிரிவுகளிலும் செயல்படவேண்டும். அவர்களை வழிநடத்த அதிக வழிகாட்டிகளும் தேவைப்படுகின்றனர். பல நிறுவனங்கள் பணியிடங்களின் சூழலை மாற்றுவதில் தீவிர முயற்சியெடுத்து பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் விதத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.

Catalyst Inc

Catalyst Inc. பெண்களுக்கு அதிகாரமளிப்படுவதற்காக ஆய்வு, பயிற்சி மற்றும் நிபுணத்துவத்துடன் கூடிய தலைமைப்பண்பு / அரசாங்க விவகாரங்கள் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஊதிய இடைவெளி, நிறுவனத்தின் முக்கிய கூட்டங்களில் பெண்களின் பங்கு, வழிகாட்டுபவர்கள் மற்றும் ஆலோசனை பெறுபவர்கள் ஆகியோரிடையே இருக்கும் உறவுமுறை ஆகியவை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிறுவனத்திற்குள் நடைபெறுவதை உறுதிசெய்கின்றனர். Catalyst அலுவலகம் உலகம் முழுவதும் உள்ளது. தொடர்ந்து ஊடகங்களில் உள்ளடக்கிய அமைப்பு குறித்த முக்கிய ஆய்வுகளை வெளியிடுகின்றனர். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் வொர்க்ஷாப்களையும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். உலகின் சில மிகப்பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்து போதிய பிரதிநிதித்துவம் பெறாத 50 சதவீத தொழிலாளர்கள் வெற்றியடைய உகந்த சூழலை உருவாக்குவதற்கான முக்கிய வழிகாட்டலையும் நுண்ணறிவையும் வழங்குகின்றனர். வழிகாட்டுபவர்கள் மற்றும் ஆலோசனை பெறுபவர்களின் உறவுமுறைகளை வலுப்படுத்தும் கான்செப்டை Catalyst பின்பற்றுவது ஒரு சுவாரஸ்யமான முயற்சியாகும். பெண்கள் பின்பற்றுவதற்கு நிறுவன மாதிரிகள் இருப்பதை உறுதி செய்கிறது. மூத்த பதவியிலிருக்கும் பெண்கள் வரவிருக்கும் பெண் ஊழியர்களை தேர்ந்தெடுத்து வெற்றிக்கு வழிகாட்டுவதையும் உறுதிசெய்கிறது.

37 Angels

இது ஒரு புதுமையான நிறுவனம். ஸ்டார்ட் அப் பகுதியிலுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்கிறது. நிறுவனர்களுக்கு வழிகாட்டுகின்றனர். ஆரம்ப நிலை முதலீட்டாளர்களுக்கு தற்சமய பிரச்சனைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த பயிற்சியளிக்கின்றனர். இவர்களது நெட்வொர்க் ஸ்டார்ட் அப்களில் அதிகளவில் முதலீடு செய்கிறது. இவர்களது போர்ட் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட அனைவரும் பெண்கள். 

அட்மிடட்லி (Admittedly) நிறுவனத்தின் நிறுவனரான ஜெசிகா ப்ரோண்டோ கூறுகையில், “Angela மற்றும் 37 Angels நியூயார்க்கின் வென்சர் சமூகத்திற்கு புதிய உற்சாகமான சூழலை வழங்குகிறது. வளர்ச்சிக்கான அனைத்து கட்டங்களிலும் நிதி உயர்த்துவதிலும் ஆலோசனை வழங்குபவர்களை நான் கண்டதில்லை. இந்நிறுவனம் தொழில்நுட்ப சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவது தெளிவாகிறது. நிதி உயர்த்துவதில் உள்ள பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் நிறுவனத்துடன் பணிபுரிவது புத்துணர்ச்சியளிக்கிறது. அத்துடன் விளம்பர செயல்முறையை வடிவமைக்கும்போது இந்த பிரச்சனைகள் கருத்தில் கொள்ளப்படுகிறது. மற்ற அனைத்து தொழில்முனைவோருக்கும் இதை பரிந்துரை செய்கிறேன்.”

NAFE

NAFE (National Association for Female Executives) ஒரு அமெரிக்க நிறுவனம். இந்நிறுவனம் பணியிடத்தில் பெண்களின் செயல்பாடுகள் குறித்து துவக்கம் முதல் முற்றிலும் முழு கவனம் செலுத்துகிறது. நிகழ்வுகள் ஏற்பாடு செய்கின்றனர். பெண்கள் நிறுவனத்தில் அதிக மதிப்புமிக்கவர்களாக பயிற்சியளித்து வழிகாட்டுகின்றனர். பெண் தலைமை வகிப்பதன் மூலம் சமூகத்திற்கு அதிகாரமளிக்கின்றனர். அமெரிக்காவில் இந்தப் பிரிவில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த பிரிவில் இவர்களது செயல்பாடுகள் அமெரிக்கா முழுவதும் பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்துள்ளது.

நேஷனல் அசோசியேஷன் ஆஃப் வுமன் பிசினஸ் ஓனர்ஸ்

பெண்கள் தலைமைப்பதவி வகித்து வளர்ச்சியடையும் பிரிவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது இந்நிறுவனம். வழிகாட்டுதல், பயிற்சி, சமூகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பேங்க் ஆஃப் அமெரிக்கா, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய ப்ராண்டுகளுடன் இணைந்து பணியாற்றி பணியிடங்களில் காணப்படும் பாகுபாடுகளை பெண்கள் கையாள செமினார்கள் லெக்சர் ஆகியவற்றை தொடர்ந்து நடத்துகின்றனர். இவர்களது ப்ரோக்ராம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் பலனடைகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : சஞ்சித் கெரா