மீன் வளர்ப்பு வணிகத்தில் ஆண்டிற்கு ரூ.90 லட்சம் வருவாய் ஈட்டும் பீஹார் விவசாயி!

2

பீகாரின் மோதிஹாரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான யத்தீந்திரா காஷ்யப் மீன்பிடி வணிகம் வாயிலாக லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார். பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கு கஷ்டப்படும் நிலையில் யத்தீந்திரா போன்ற விவசாயிகள் மீன்படி வணிகத்தை மேற்கொள்ள உந்துதலளிக்கின்றனர். 

பீஹார் அரசாங்கம் மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்கிறது. மீன் வளர்ப்பிற்குத் தேவையான குளத்தை அமைப்பதற்கு முதலீடு செய்யப்படும் தொகையில் 50 சதவீதத் தொகையை அரசு வழங்குகிறது. மீன் வளர்ப்பிற்குத் தேவையான குளம் அமைக்கத் தேவைப்படும் தொகை சுமார் 12-15 லட்ச ரூபாயாகும். எனினும் இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் அதிகம் என்பதால் இதிலுள்ள ஆபத்தை எதிர்கொண்டு முதலீடு செய்யப் பலர்த் தயாராக உள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு யத்தீந்திரா துவங்கியபோது இந்தத் துறை சார்ந்த வணிக நடைமுறைகள் மற்றும் மீன் வளர்ப்பு முறைகள் குறித்து போதுமான அளவு தெரியாத காரணத்தால் பல போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது. எனினும் படிப்படியாக கற்றுக்கொண்டு தற்போது நல்ல லாபம் ஈட்டும் விதத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் தேவையான விவரங்கள் முழுமையாக தெரியாததால் கூடுதல் தகவல்களை சேகரிக்கத் துவங்கினார். பல்வேறு நிபுணர்களுடன் விவாதித்த பிறகு மீன் வளர்ப்பில் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தினால் அதிக லாபம் பெற முடியும் என்பதை அறிந்தார்.

அடைக்காப்பகத்திலிருந்து புதிதாக பிறக்கும் ஒவ்வொரு மீனும் ஐந்து லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்படுவதை உணர்ந்தார் யத்தீந்திரா. அப்படிப்பட்ட மீன்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து மீன்களை அடைக்காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டால் மாத வருமானமாக 20 லட்ச ரூபாய் கிடைக்கும். சந்தையில் இந்த மீன்களுக்கான தேவை ஆறு மாதங்கள் வரை நீடிக்கும்.

யத்தீந்திரா 25 ஏக்கர் குளத்தில் 50 டன் மீன்களை வளர்க்கிறார். இதன் மூலம் சுமார் 75 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். இவரது கிராமத்தைச் சேர்ந்த பலர் மீன் வளர்ப்பை மேற்கொள்ள உந்துதலளித்துள்ளார். இந்தப் பகுதியில் ஏராளமான நீராதாரங்கள் இருப்பதால் இங்குள்ள விவசாயிகள் இந்தத் தொழில் வாயிலாக லாபம் ஈட்ட முடியும்.

மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதால் சம்பந்தப்பட்ட துறையினர் மீன் வளர்ப்பிற்கு ஏற்ற சிறிய நீர் நிலைகளை தீவிரமாக தேடம் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். வானிலையும் நீராதாரங்களும் மீன் வளர்ப்பிற்குச் சாதகமாக இருப்பதால் அரசாங்கத்தின் இத்தகைய முயற்சிகள் பீஹாரிலுள்ள விவசாயிகளுக்கு அதிக பலளிக்கும் விதத்தில் அமையும்.

கட்டுரை : Think Change India