“இடையீடு ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையே மாற்றிக் கொண்டிருக்கிறது”- சுஷ்மா ராஜகோபாலன்

0

“புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களில் மூலதனப் பற்றாக் குறை இருக்கக் கூடாது. ஆனால் அந்த மூலதனத்தை உற்பத்தித் திறனை நோக்கி எந்த அளவுக்குத் திருப்பி விடுகிறோம் என்பதுதான் முக்கியம்” என்கிறார் ஐடிசி இன்ஃபோடெக்கின் எம்டியும், சிஇஓவுமான சுஷ்மா ராஜகோபாலன்.

புதிய தொழில்களுக்கு அதன் வளர்ச்சி நிலையில், சூழலைச் சாதகமாக்கிக் கொள்ளும் இயங்குமுறை (ecosystem) அவசியம். புதிய கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கு அது தேவை. அது மட்டுமல்லாமல் முதலீட்டாளர்கள், பல்துறை சேவை அளிப்போர், பராமரிப்போர் என பலரின் ஆதரவு வேண்டும். பெங்களூருவில் டெக்ஸ்பார்க்கின் ஆறாவது அமர்வில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், “இருபது இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கிச் சென்று பார்த்தால் தகவல் தொழில் நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பது தெரியும்” என்றார். தொடர்ந்து அவர், “தகவல் தொழில்நுட்பத் துறையில் தேர்ந்த நிபுணர்கள் இங்கு குவிந்து கிடப்பதால்தான் இது சாத்தியமாயிற்று என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்களை மேலும் வளர்த்தெடுத்தால், நிச்சயமாக வர்த்தக சாதக சூழலை வலிமையாகக் கட்டமைக்க முடியும். சர்வதேச கண்டுபிடிப்புகளுக்கும் அது உந்து சக்தியாக இருக்கும்.” என்று கூறினார்.

எங்கும் நிகழும் "இடையீடு"

267 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 400 கோடி யூ டியூப் தரவிரக்கங்கள் நடைபெறுகிறது என்கிறது ஒரு ஆச்சரியமளிக்கும் புள்ளி விபரம். இன்றைய உலகில் இப்படியான இடையீடு நடப்பதைத்தான் ஒருவரால் கற்பனை செய்ய முடியும். 10 லட்சம் பயன்பாட்டாளர்களை பெறுவதற்கு லேண்ட் லைன் போனுக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால் வாட்ஸ்அப் ஒரு ஆண்டுக்குள்ளாகவே அந்த எண்ணிக்கையை எட்டி விட்டது.

“மனிதர்களுக்கிடையே தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகத்தோடு நீங்கள் ஒரு முறை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போதும். உங்களால் எந்த ஒரு விஷயத்தையும் புதிதாய்ப் பார்க்க முடியும். ஒரு பொருளை வாங்குவது, விற்பது, மனிதர்களுடன் தொடர்பு என்ற அனைத்து செயல்பாடுகளையும் புதிதாக மற்ற முடியும். நான் எனது பெற்றோருடன் பேஸ்புக் மூலம்தான் தொடர்பு கொள்கிறேன். அவர்களுக்கு 80 வயது. ஆனால் அவர்களாலும் என்னைப் போலவே பேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே இந்த உலகம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கமாக எல்லாவற்றிலும் மாற்றமும் நிகழும். இடையீடு என்பது வேறொன்றும் இல்லை. வர்த்தகத் தொடர்பு, ஈடுபடுத்தல், தலைமை தாங்குதல், புதிதாக மாற்றுதல், மறுபரிசீலனை போன்ற உங்களின் அடிப்படை நிறுவனக் கொள்கைகள் அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான்.” என்று அவர் விளக்கினார்.

தலையீட்டின் அழகு என்னவெனில், அது மக்களுக்குடையே உள்ள இடைவெளியைச் சுருக்கி விட்டது. செயல்பாட்டுத் திறனை உச்சபட்சத்திற்கு வளர்த்திருக்கிறது. புதிய அனுபவத்தைத் தருகிறது. ஓலா (Ola), உபேர் (Uber) அல்லது யெல்லோ பேஜஸ் (Yellow Pages) போன்றவை தொழில்முனைவோர் மற்றும் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் உலகில் முக்கியமான பங்காற்றுவதோடு, அந்த நிறுவனங்கள் தங்களது இலக்கை அடையவும் உதவுகின்றன. நவீன தலைமுறையில் 70 சதவீதத்தினர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் விருப்பத்தில்தான் இருக்கின்றனர்.

பணியாளர்கள் மத்தியில் தொழில் முனைவோராகும் தாகத்தை வளர்த்தல்

ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். அவர்களை சொந்தமாகத் தொழில் தொடங்க ஊக்குவிக்கிறது ஐடிசி. அவர்கள் மத்தியில் தொழில்முனைவோராகும் தாகத்தை வளர்க்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு பெருநிறுவனமும் இத்தகைய புதிய தொழில்களை வளர்க்கும் வழிகாட்டிகளாகவும் அவற்றில் முதலீடு செய்வதையுமே விரும்புகின்றன.

இனிமேல் புதிய தொழில் தொடங்க முதலீட்டுப் பற்றாக்குறை எல்லாம் இருக்காது. முதலீட்டாளர்கள், முதலீட்டுத் தேவதைகள் இறங்கி வந்து பணத்தைக் கொட்டப் போகிறார்கள். அந்தக் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுஷ்மா.

அதேசமயம், நிதி பெற முடியாமல் தவிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அச்சுறுத்துவதாக உள்ளதாகவும் சுஷ்மா எச்சரிக்கிறார். அதற்குக் காரணம், உலகம் பணத்தை விடப் பெரிய வேறு சில விஷயங்களை எதிர்பார்க்கிறது என்கிறார். புதிய தொழில் தொடங்குவோருக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. ஹாக்கதான்களின் (hackathons - கணினி நிரலி எழுதுவோர் மற்றும் ஹார்ட்வேர் நிபுணர்கள் இன்னபிற) எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுதான் முக்கியம்.

“ஐடிசி இன்ஃபோடெக்கைப் பொருத்தவரையில், ஒவ்வொரு ஹாக்கத்தான் பற்றியும் ஆறில் இருந்து எட்டு புதிய யோசனைகளை வைத்திருக்கிறோம். பண முதலீடு செய்ய மாட்டோம். அவர்கள் அவர்களின் தயாரிப்பை சந்தைப்படுத்த வைப்போம். நெடுங்காலமாகவே இதுபோல் பெரு நிறுவனங்கள் புதிய தொழில்களை வளர்த்து வருகின்றன. தொழிலுக்கு உகந்த சூழலை உருவாக்க மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. ஒன்று தயாரிப்பாளர்களுக்கு இடையே தங்களது தயாரிப்பு குறித்த தெளிவு, இரண்டாவது வர்த்தக யோசனையை, சந்தைப்படுத்தும் திறன், மூன்றாவது வலிமையான விற்பனை சங்கிலித் தொடரை கட்டமைத்தல்” என்கிறார் சுஷ்மா.